என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஜோ ரூட் தனது 37ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
- ஸ்மித் 5 ரன்னில் இருக்கும்போது கே.எல். ராகுல் கேட்சை தவறவிட்டார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரும், இந்திய அணியில் பும்ராவுடம் இடம் பிடித்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து வீரர்கள் அதிவிரைவாக ரன்கள் குவிக்க திணறினர். ஜோ ரூட் மட்டும நிலைத்து நின்று விளையாடினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். இது அவரின் 37ஆவது டெஸ்ட் சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஸ்டோக்ஸ் 44 பந்தில் பும்ரா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார். இவர் 5 ரன்கள் எடுத்திருக்கும் போது முகமது சிராஜ் பந்தில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் கே.எல். ராகுல் எளிதான கேட்சை பிடிக்க தவறினார். இந்த கேட்ச் மிஸ் இந்தியாவுக்கு பின்னர் தலைவலியாக அமைந்தது.
மறுமுனையில் ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். பும்ரா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் இங்கிலாந்து 271 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஸ்மித் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரில் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் 350 ரன்னைக் கடந்தது.
2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஜோடி 17.4 ஓவரில் 82 ரன்கள் சேர்த்துள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியதும் இந்த ஜோடியை பிரித்தால் மட்டுமே இந்தியாவுக்கு சாதகமான நிலை உருவாகும்.
- நிதிஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசியதை பார்த்து ஆச்சர்யப் பட்டேன்.
- சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார்.
ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியை, இந்தியா தொடர்ந்து அணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-
நிதிஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசியதை பார்த்து ஆச்சர்யப் பட்டேன். சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார். லெக் சைடு ஷார்ட் பால் மூலம் விக்கெட் கிடைத்தது கிஃப்ட். மாற்றாக அவர் ஒழுக்கமாக பந்து வீசினார்.
ஆஸ்திரேலியாவில் விக்கெட் அதிக அளவில் வீழ்த்தவில்லை என்றாலும், நன்றாக பேட்டிங் செய்தார். சதமும் அடித்தார். இதுபோன்ற வீரர் பார்ட்னர்ஷிப்பை உடைக்க அணிக்கு தேவை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்து, அதே நேரத்தில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த இதுபோன்ற வீரர் அவசியம்.
ஒரே ஸ்பெல்லில் ஏறக்குறைய 14 ஓவர்கள் வீசினார். இது அவருடைய உடற்தகுதி மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகிறது. சிறந்த பீல்டர், இளமையானவர். சதம் அடிக்கக் கூடியவர். அடிக்கடி நீக்குவது மற்றும் மாற்றுவது ஆகியவற்றை விட்டுவிட்டு, அவரை தொடர்ந்து அணியில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை நிதிஷ் குமார் அவுட்டாக்கி, அணிக்கு உத்வேகம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜிம்பாப்வே அணிக்கெதிராக 367 ரன்கள் எடுத்திருக்கும்போது முல்டர் டிக்ளேர் அறிவித்தார்.
- லாரா சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தும், அதை தவறவிட்டார்.
டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனாக செயல்பட்ட வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்திருக்கும்போது, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்திருந்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவர் நினைத்திருந்தால் எளிதாக 400 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
இது தொடர்பாக முல்டர் கூறுகையில் "பிரையன் லாரா ஒரு லெஜண்ட், அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
எனக்கு மீண்டும் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது செய்ததைதான் அப்போதும் செய்வேன். நான் டிக்ளேர் செய்வது குறித்து பயிற்சியாளரிடமும் பேசினேன். சில சாதனைகள் லெஜண்டுகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட லெஜண்டுகளில் ஒருவர் லாரா அவர் தெரிவித்தார்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் "லாரா தன்னிடம் பேசினார். அப்போது 400-ஐ நோக்கி சென்றிருக்க வேண்டும். சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். எனக்கு மீண்டும் வாய்ப்பு வந்தால், அவருடைய ஸ்கோரை விட அதிக ஸ்கோர் அடிக்க வேண்டும் அவர் விரும்புகிறார்" என முல்டர் தெரிவித்துள்ளார்.
- முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஜோ ரூட் 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி நிதானமாக ஆடியது.
பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலே 18 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 83 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா சார்பில் நிதிஷ்குமார் 2 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஜோ ரூட் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஒரு ரன் ஓட முயற்சி செய்தார். அப்போது பந்தை பிடித்த ஜடேஜா அங்கிருந்து ஜோ ரூட்டை பார்த்து, எங்கே ஓடிப் பாரேன் என சைகையில் செய்தார்.
அதைப் பார்த்து ஜோ ரூட் சிரித்தார். உடனே ஜடேஜா பந்தை கீழே வைத்து, இப்போதாவது ஓடு என கூறினார். ஜோ ரூட் ஓடாததால் பந்தை எடுத்து ஜடேஜா மீண்டும் எறிந்தார். இதை அடுத்து மைதானத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
- முதலில் பேட் செய்த மன்ஸ்டர் ரெட்ஸ் அணி 20 ஓவரில் 188 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்கள் எடுத்தார்.
டப்ளின்:
அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது.
முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்னும், பீட்டர் மூர் 35 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.12வது ஓவரை கர்டிஸ் காம்பெர் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை அவுட்டாகினர். மீண்டும் 14வது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3-வது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரை அவுட்டாக்கினார்.
இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ரன்னில் வெற்றி அபார பெற்றது.
இந்நிலையில், அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.
ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021ல் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து நிதானமாக ஆடி வருகிறது.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜாக் கிராலே 18 ரன்னில் வெளியேறினார்.
3வது விக்கெட்டுக்கு ஒல்லி போப்புடன் ஜோ ரூட் இணைந்தார். இந்த ஜோடி 109 ரன் சேர்த்த நிலையில் ஒல்லி போப் 44 ரன்ப்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஹாரி புரூக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோ ரூட்டுடன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். இந்த ஜோடி கடைசிவரை விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது.
பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா சார்பில் நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் பேட் செய்த வங்காளதேசம் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 19 ஓவரில் 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பல்லேகலே:
வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒரு நாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணி கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் 38 ரன்னும், மொகமது நயீம் 32 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 42 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த குசால் மெண்டிஸ்73 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது குசால் மெண்டிசுக்கு அளிக்கப்பட்டது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து நிதானமாக ஆடி வருகிறது.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி நிதானமாக ஆடி வருகிறது.
எப்போதும் பேஸ் பால் என்ற பெயரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இந்த முறை பொறுமையாக ஆடி வருகிறது. இதனால் இங்கிலாந்து அணியினரை இந்திய வீரர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீசும்போது இந்திய கேப்டன் சுப்மன் கில், இனி பொழுதுபோக்கு கிரிக்கெட் இல்லை. போரடிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வாங்க, பாய்ஸ் என இங்கிலாந்து அணியினரை கிண்டலடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல், சிராஜ் ரூட்டுக்கு எதிராக பந்து வீசுகையில் அவரை நோக்கி, பேஸ், பேஸ்பால். இப்போது பேஸ்பால் விளையாடுங்கள். நான் பார்க்க விரும்புகிறேன் என கிண்டலடித்தார்.
தற்போது வரை இங்கிலாந்து அணி 68 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.
- கைவிரலில் பந்து தாக்கியதால் வலி நிவாரண ஸ்பிரே அடிக்கப்பட்டது.
- இருந்தபோதிலும் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ஸில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க விக்கெட்டுகளை நிதிஷ் ரெட்டி வீழ்த்தினார். அதன்பின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி வருகிறார்கள்.
தொடக்கத்தில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனது. இதனால் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் பந்துகளை அடிக்கடி டைவ் அடித்து பிடித்தார். ஒரு கட்டத்தில் பந்தை பிடிக்கும்போது, அவரது கைவிரில் காயம் ஏற்பட்டது. வலி ஏற்படமால் இருக்க பிசியோ அவருக்கு வலி நிவாரணை ஸ்பிரே அடித்தார். என்றபோதிலும் 35 ஓவர் தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இதனால் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்கிறார். ரிஷப் பண்ட்-க்கு கவலை அளிக்கும் வகையில் காயம் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நிச்சயம் பேட்டிங் செய்வார் என நம்பப்படுகிறது.
- ஜோ ரூட் (24), போப் (12) களத்தில் உள்ளனர்.
- நிதிஷ் ரெட்டி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார்.
கிராவ்லி, டக்கட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பும்ரா தொடக்க ஓவரை வீசினார். ஆகாஷ் தீப் அவருடன் புதிய பந்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் அபாரமாக பந்து வீசினர். பந்து நல்லவிதமாக ஸ்விங் ஆனது. ஆனால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இதனால் 14ஆவது ஓவரிலேயே நிதிஷ் குமாரை பந்து வீச அழைத்தார் சுப்மன் கில்.
2ஆவது பந்தில் டக்கட் பவுண்டரி அடித்தார். ஆனால், 3ஆவது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 23 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து ஆலி போப் களம் இறங்கினார். போப் முதல் பந்திலேயே அவட்டாக வேண்டியது, கடினமான கேட்சை சுப்மன் கில் தவறவிட்டார்.
அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தை கிராவ்லி எதிர்கொண்டார். ஆஃப் ஸ்டம்பை ஒட்டி வீசிய பந்து பேட்டில் உரசி விக்கெட் கீப்பரிடம் கேட்சாக மாறியது. கிராவ்லி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள வீழ்த்தி அசத்தினார்.
3ஆவது விக்கெட்டுக்கு ஆலி போப் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது. இதனால் இங்கிலாந்து முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
- 14ஆவது ஓவரிலேயே நிதிஷ் குமார் ரெட்டி பந்து வீச அழைக்கப்பட்டார்.
- டக்கட் மற்றும் கிராவ்லியை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார்.
கிராவ்லி, டக்கட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பும்ரா தொடக்க ஓவரை வீசினார். ஆகாஷ் தீப் அவருடன் புதிய பந்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் அபாரமாக பந்து வீசினர். பந்து நல்லவிதமாக ஸ்விங் ஆனது. ஆனால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இதனால் 14ஆவது ஓவரிலேயே நிதிஷ் குமாரை பந்து வீச அழைத்தார் சுப்மன் கில்.
2ஆவது பந்தில் டக்கட் பவுண்டரி அடித்தார். ஆனால், 3ஆவது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 23 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து ஆலி போப் களம் இறங்கினார். போப் முதல் பந்திலேயே அவட்டாக வேண்டியது, கடினமான கேட்சை சுப்மன் கில் தவறவிட்டார்.
அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தை கிராவ்லி எதிர்கொண்டார். ஆஃப் ஸ்டம்பை ஒட்டி வீசிய பந்து பேட்டில் உரசி விக்கெட் கீப்பரிடம் கேட்சாக மாறியது. கிராவ்லி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள வீழ்த்தி அசத்தினார்.
- முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
- இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2ஆவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் 3ஆவது டெஸ்ட் இன்று புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து 3 போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார்.
இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.






