என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சதத்தை நெருங்கிய ஜோ ரூட்: முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 251/4
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து நிதானமாக ஆடி வருகிறது.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜாக் கிராலே 18 ரன்னில் வெளியேறினார்.
3வது விக்கெட்டுக்கு ஒல்லி போப்புடன் ஜோ ரூட் இணைந்தார். இந்த ஜோடி 109 ரன் சேர்த்த நிலையில் ஒல்லி போப் 44 ரன்ப்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஹாரி புரூக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோ ரூட்டுடன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். இந்த ஜோடி கடைசிவரை விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது.
பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா சார்பில் நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.






