என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன் குவிப்பு, இங்கிலாந்து 319 ரன்னில் ஆல்அவுட்.
    • நேற்றைய ஆட்டத்தின்போது அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 15-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்றைய ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இந்திய வீரர்கள் ஏன் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போதுதான் கடந்த 13-ந்தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வாழ்ந்தவருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95 வயதில் காலமானார்.

    அதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதாக பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    நேற்று இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தார். சாதனையை கொண்டாடுவதற்குள் மருத்துவ எமர்ஜென்சி காரணமாக இந்த டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

    தலைசிறந்த வீரருக்கான இந்திய வீரர்கள் முதல்நாள் ஆட்டத்தின்போது இதை செய்திருக்க வேண்டும். இது மிகவும் காலதாமதம் என தனது அதிருப்தியை முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அந்த அணியின் டக்கெட் 153 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை எடுத்தது. பென் டக்கெட் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகியுள்ளார்.
    • பி.சி.சி.ஐ., அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியில் இருந்து விலகுவதாக ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை பி.சி.சி.ஐ. நேற்றிரவு அறிவித்தது. குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.

    திடீரென அணியில் இருந்து விலகியுள்ள அஸ்வினுக்கு தேவையான உதவிகளை செய்ய கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து வலிகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், பி.சி.சி.ஐ. மற்றும் அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது," என குறிப்பிட்டுள்ளது.

    "ரவிசந்திரன் அஸ்வினின் தாயார் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். தனது தாயாருடன் இருப்பதற்காக அவர் ராஸ்கோட் டெஸ்ட்-இல் இருந்து விலகி அவசர அவசரமாக சென்னை விரைந்துள்ளார்," என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    • இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து ரவிசந்திரன் அஷ்வின் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்தியர் என்றும், உலக அளவில் இரண்டாவது அதிவேகமாக 500 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. தற்பொழுது அவருக்கு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தன்னுடைய சாதனை குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் " இது ஒரு மிக நீண்ட பயணம். இந்த சாதனையை நான் என் தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நான் விளையாடுவதை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மாரடைப்பு வந்திருக்கலாம். அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருக்கலாம். அவர் எனக்கு எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் எல்லாமும் ஆக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

    • இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
    • 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

    அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் சிகரங்களை எட்டிப்பிடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    • ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும்.

    ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 499 விக்கெட்டுகளோடு இருந்த அஷ்வின், இங்கிலாந்து அணியின் ஓப்பனரான சக் க்ராலியை தனது 500வது விக்கெட்டாக வீழ்த்தியிருக்கிறார்.

    ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் போட்டிக்கு பிறகு அஷ்வினிடம் பேசிய, கும்ப்ளே, "ஆஷ்! வாழ்த்துகள். உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும். அதற்குக் குறைவாக விக்கெட்டுகளோடு உங்கள் கிரிக்கெட் பயணத்தை முடிக்க வேண்டும் என்று கூட நீங்கள் நினைக்க கூடாது" என்று பெருமிதமாக அவர் தெரிவித்தார்.

    அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரராக உள்ளார். கும்ளேவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தில உள்ளார்.

    உலக அளவில் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவ்வேளையில் தற்போது அஸ்வின் தனது 98-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    அதேபோன்று குறைந்த பந்துகளை வீசி 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஷ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத் 25528 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியிருந்த வேளையில் அஸ்வின் 25,714 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 291 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தினார்.

    சேலம்:

    ரஞ்சி கோப்பை தொடரில் நடந்து முடிந்துள்ள 6 சுற்றுகளின் முடிவில் தமிழ்நாடு அணி 22 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், சி பிரிவில் உள்ள தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சேலத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் 10 ரன்னிலும், பிரதோஷ் பால் 20 ரன்னிலும், ஜெகதீசன் 22 ரன்னிலும், முகமது அலி 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா இந்திரஜித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். இவருக்கு விஜய் சங்கர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 184 ரன்கள் சேர்த்துள்ளது.

    முதல் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. பாபா இந்திரஜித் 122 ரன்னும், விஜய் சங்கர் 85 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதல் இன்னிங்ஸ்-இல் ஜடேஜா 112 ரன்களை குவித்தார்.
    • இங்கிலாந்து சார்பில் டக்கெட் 133 ரன்களை குவித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

     


    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா மேலும் இரண்டு ரன் எடுத்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் மற்றும் ஜூரேல் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. அஸ்வின் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் ஆடிய ஜூரேல் 46 ரன்களில் ஆட்டமிழக்க பும்ரா 26 ரன்களையும், சிராஜ் 3 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-இல் 445 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ரேஹன் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

     


    இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்கம் முதலே சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தது. அந்த அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் 118 பந்துகளில் 133 ரன்களை குவித்துள்ளார். இவருடன் களமிறங்கிய கிராவ்லி 15 ரன்களையும், போப் 39 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் 9 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

    இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் அஸ்வின் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

    • தனது மகனுக்கு உத்வேகம் தரும் ஒரு தந்தையாக இருப்பதற்காக, சர்பராஸ் கானின் தந்தையான நௌஷாத் கானுக்கு 'மஹிந்திரா தார்' காரை பரிசளிக்க விரும்புகிறேன்.
    • தனது தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனதாக ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

    சர்பராஸ் கானின் தந்தையான நௌஷாத் கானுக்கு கார் பரிசளிக்க விரும்புவதாக மகிந்திரா குழுமத்தின் நிறுவனரான ஆனந்த் மஹிந்திராதெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது X பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கடின உழைப்பு. தைரியம். பொறுமை போன்ற ஒரு தந்தையின் குணங்களை விட, ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க சிறந்த குணங்கள் ஏதேனும் உள்ளதா?. தனது மகனுக்கு உத்வேகம் தரும் ஒரு தந்தையாக இருப்பதற்காக, சர்பராஸ் கானின் தந்தையான நௌஷாத் கானுக்கு 'மகிந்திரா தார்' காரை பரிசளிக்க விரும்புகிறேன். எனது பரிசை அவர் ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியம் மற்றும் கௌரவமாக கருதுவேன்' என்று பதிவிட்டுள்ளார்

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்து வந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமானார்.

    இந்திய அணியில் 311-வது வீரராக அறிமுகமான சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.


    அறிமுக போட்டியில் களமிறங்கும் வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள். ஆனால் தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கியது முதலே இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.

    அப்போது மைதானத்தில் இருந்த அவருடைய தந்தை மற்றும் மனைவி ஆகியோர் மிகுந்த பெருமிதத்துடன் கைதட்டி பாராட்டினார்கள். அதே போல கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அடங்கிய இந்திய அணியினரும் எழுந்து நின்று அந்த இளம் வீரருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    மேலும் இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

    இதற்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமான ஹர்திக் பாண்டியா 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அந்த சாதனையை படைத்திருந்தார். அந்த வகையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சர்பராஸ் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ரவீந்திர ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட்டானார்.

    தனது தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனதாக ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.


    இதனைப் பார்த்து பெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா. கோபத்தில் அணிந்திருந்த தொப்பியை தூக்கி வீசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    "சர்பராஸுக்காக நீங்கள் எவ்வளவு தியாகங்கள் மற்றும் கடின உழைப்பு செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்று சர்பராஸின் தந்தையிடம் கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில் சர்பராஸ் கானின் தந்தைக்கு கார் பரிசளிக்க விரும்புவதாக கூறியுள்ள ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

    • இன்று (பிப் 16) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • இதன் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்தது.

    ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று (பிப் 16) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இதன் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்தது.

    கடந்த செவ்வாயன்று (பிப் 13) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருந்தது.

    இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பிவி சிந்து 21-7, 16-21, 21-12 என்ற கணக்கில் லோ சின் யான் ஹேப்பியை தோற்கடித்தார்.

    இரட்டையர் பிரிவில் விளையாடிய தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் 21-10, 21-1 என்ற செட் கணக்கில் யுங் நகா டிங் & யுங் புய் லாம் ஆகியோரை தோற்கடித்தனர். அஷ்மிதா சாலிஹா 21-12, 21-13 என்ற செட் கணக்கில் யுங் சும் யீயை வென்றார்

    இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதியாகிவிட்ட நிலையில், முதலிடத்தில் உள்ள ஜப்பான் மற்றும் சீனா இடையிலான மற்றொரு காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை இந்தியா இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும். மேலும் இந்திய ஆடவர் அணி தனது காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

    • அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
    • டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் எடுத்த 9-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    இந்திய அணியின் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
    • இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திற்கு முன்னேறியது.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்த தொடர் முடிவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

    அதன்படி, புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி 75 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (55%) 2வது இடத்திலும், இந்தியா (52.77%) 3வது இடத்திலும், வங்காளதேசம் (50%) 4வது இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), இங்கிலாந்து (25%), தென் ஆப்பிரிக்கா (25%), இலங்கை (0%) ஆகிய அணிகள் 5 முதல் 9 இடங்களில் உள்ளன.

    ×