என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அரைஇறுதியில் இகா ஸ்வியாடெக்- அரினா சபலென்காவுடன் மோதினர்.
    • சின்சினாட்டி ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறினார்.

    மாசன்:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் மாசன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவாவை வீழ்த்திய 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) நேற்று அரைஇறுதியில் 3-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவுடன் (பெலாரஸ்) கோதாவில் குதித்தார்.

    தனது அதிரடியான ஷாட்டுகளால் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்ததுடன், சின்சினாட்டி ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அடுத்த ஆண்டு நடத்துகிறது.
    • இதற்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கராச்சி:

    வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே, 2-வது டெஸ்ட் போட்டி கராச்சி நேஷனல் பேங்க் மைதானத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தப் போட்டியை நேரில் பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும், ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழு தொகையும் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவித்தது.

    அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களது முதன்மை நோக்கம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

    1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கராச்சி மைதானத்தில் நடந்தன. அதன்பின் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர் (சாம்பியன்ஸ் டிராபி) இதுவாகும்.

    இந்நிலையில், பாகிஸ்தான்-வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சிக்கு பதில் ராவல்பிண்டியில் நடைபெறும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    • பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.

    கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். அவ்வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருவதாக புள்ளிவ்விரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.

    அதில், உங்கள் வீட்டு பெண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று சொல்வதை விடுத்து, உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள். அப்பா, அண்ணன், கணவன், நண்பன் என அனைவருக்கும் பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • உண்மையில் இந்தியா சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும்.
    • நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான் என்றார் நாதன் லயன்.

    சிட்னி:

    ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாகும்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளரான நாதன் லயன் கூறியதாவது:

    10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கு ஒன்று உள்ளது. எங்களுடைய சொந்த மண்ணில் விஷயங்களை திருப்புவதற்கு நாங்கள் மிகவும் பசியாக இருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.

    உண்மையில் இந்தியா சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும். ஆனாலும் நாங்கள் விஷயங்களை திருப்பி கோப்பையை மீண்டும் வெல்வதற்கான பசியுடன் காத்திருக்கிறோம்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நாங்கள் வித்தியாசமான அணியாக இருப்பதாகவும் கருதுகிறேன்.

    நாங்கள் மிகச்சிறந்த ஆஸ்திரேலிய அணியாக பயணித்து வந்துள்ளோம். தற்போது ஓரளவு நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம்.

    இம்முறை இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி அதிக பேச்சுகள் வருகின்றன. இதுவரை அவருடன் விளையாடவில்லை. நிச்சயம் அது எங்கள் அணியின் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடியதை கவனமாக பார்த்தேன். நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான்.

    இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லியுடன் சில ஆலோசனை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு ஸ்டைல் மற்றும் திட்டத்தை பின்பற்றியது சுவாரஸ்யமாக இருந்தது.

    எப்போதும் கிரிக்கெட்டை பற்றி ஆலோசிக்கவும், பேசவும் விரும்புவேன். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடும் வீரர்களுடன் ஆலோசிக்கும்போது அவர்களிடம் இருந்து எனக்கு தெரியாத சில விஷயங்கள் கிடைக்கும். கிரிக்கெட்டை பற்றி ஏராளமான தகவல் பலரிடமும் உள்ளது. அதனை கண்டறிந்து நாம் ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை மிரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை சாம்சனோவாவை 6-3, 6-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக். சபலென்காவை எதிர்கொள்கிறார்.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என வென்றது.
    • டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

    துபாய்:

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், இலங்கை 4-வது இடத்திலும் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 5, 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877 மார்ச் மாதம் நடைபெற்றது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டை முன்னிட்டு 1977 ஆண்டு சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது

    டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத் தலைவர் நிக் ஹாக்லி அறிவித்துள்ளார்.

    வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877 மார்ச் மாதம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதே மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் ஆனந்தை ஒட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 1977 ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார்.
    • வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் நேற்றைய தினம் நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார். அங்கு ஊர் மக்கள் திரண்டு வினேஷ் போகத்தின் வருகையை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மாலை மரியாதைகள், பரிசுப் பொருட்கள் என வழங்கி ஊர் மக்கள் வினேஷ் போகத்தை உச்சி முகர்ந்து வருகின்றனர். வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது.

    வினேஷ் போகத்தை கவுரவிக்கும் விதமாக ஊர் மக்கள் ஒன்றிணைத்து அவருக்கு தங்கப் பதக்கத்தையும் வழங்கினர். ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து காசு போட்டு வினேஷ் போகத்துக்கு பரிசுத்தொகை வழங்கியுள்ளனர்.

    தனது உறவினரும் குருவுமாக மகாவீர் சிங் கிடம் ஆசி பெற்ற அவர் கண்ணீர் விட்டு அழுதார். ஊர் மக்களின் அன்பு குறித்து வினேஷ் போகத் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாதது எனது வாழ்க்கையில் ஆறாத வடுவாக இருக்கும். இனியும் நான் மல்யுத்தத்தில் ஈடுபடுவேனா மாட்டேனா என்று தெரியவில்லை.

    எனக்கு இங்கு வந்தவுடன் கிடைத்த அன்பு எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த நபிக்கையை கொண்டு சரியான திசையில் பயணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் முன்னதாக வினேஷ் கூறியபடி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 3-6, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ரூப்லெவ் உடன் மோதினார். இதில் சின்னர் 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    இன்று நள்ளிரவு நடைபெறும் அரையிறுதியில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், ஸ்வரேவை எதிர்கொள்கிறார்.

    • இறுதிப்போட்டியில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை செய்தது.
    • தோல்வியடைந்த விரக்தியில் ரொனால்டோ செய்த கையசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்ற நிலையில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை செய்தது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 44 வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ அல்- நாசர் அணியின் ஆட்டதை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றார்.

    ஆனால் அதைதொடர்நது மைதானம் அல்- ஹிலால் வசம் சென்றது. ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் அல்- ஹிலால் அணி வீரர் செர்ஜி மிலின்கோவிக் கோல் ஒன்றை விளாசி புள்ளிப் பட்டியலை சமன் செய்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 63 மற்றும் 69 வது நிமிடத்தில் அல் ஹிலால் வீரர் அலெக்சாண்டர் மித்ரோவிசிக் 2 அடுத்தடுத்து கோல்களை விளாசினார்.

    இறுதியாக ஆட்டத்தின் 72 வது நிமிடத்தில் அல்- ஹிலால் வீரர் மால்கம் ஒரு கோல் ஸ்கோர் செய்தார். இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணி ரொனால்டோவின் அல்- நாசர் அணியை தோற்கடித்து கோப்பையைத் தட்டிச் சென்றது.

    உலகக்கோப்பை வென்ற மெஸ்ஸி ஸ்டைலில் அல்-ஹிலால் அணி கேப்டன் சலீம் அல் - தாஸ்ரி  [Salem Al-டவ்சரி] கோப்பையை பெற்றுகொள்ள கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதற்கிடையில் தோல்வியடைந்த விரக்தியில் எல்லாரும் தூங்கிறார்கள், எல்லாம் முடிந்தது என்ற தோரணையில் மைதானத்தில் ரொனால்டோ செய்த கையசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
    • 2-வது இன்னிங்ஸில் ரபாடா, கேசவ் மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் துவங்கிய டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, 160 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 42.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    கடைசி 22 ரன்னில் 5 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி விட்டுக்கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக ஆட துவங்கியது. எனினும், அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான லூயிஸ் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் பிரத்வைட் 25 ரன்களில் அவுட் ஆனார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 66.2 ஓவர்களில் 222 ரன்களை எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா, கேசவ் மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுகளையும், முல்டர் மற்றும் டேன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கயானா:

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, 160 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 42.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. கைல் வெர்ரின்னே 50 ரன்களுடனும், வியான் முல்டர் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    தென் ஆப்பிரிக்க அணி 239 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வியான் முல்டர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மகாராஜ் 0, வெர்ரின்னே 59, ரபாடா 6, பர்கர் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி 22 ரன்னில் 5 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி விட்டுக்கொடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



    ×