என் மலர்
விளையாட்டு
- இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் ஜஸ்பிரித் பும்ரா.
- இவரது ஆக்சனில் பந்து வீசுவதை சிறுவர்கள் ஆர்வமாக கொண்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் கடந்த மாதம் இறுதியில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்காக சிறப்பாக செயலாற்றி இருந்தார். தொடர் முழுதும் தனது மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தி இருந்த அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரின் நாயகன்விருதைப் பெற்று அசத்தினார். தற்போது பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவரது ஆக்சனில் பந்து வீசுவதை சிறுவர்கள் ஆர்வமாக கொண்டுள்ளனர். நிறைய சிறுவர்கள் பும்ரா பவுலிங் ஆக்சன் மூலம் டிரெண்டாகி உள்ளனர். அந்த வகையில் தற்போது ஒரு சிறுமி பும்ரா ஆக்சனில் பந்து வீசி அசத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் பலர் இந்த வீடியோவை பதிவிட்டு, இந்த சிறுமிக்கு வழிகாட்ட வேண்டும் என பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் பும்ரா ஆக்சனில் பந்து வீசுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோகித் சர்மா ஒருவர்.
- விராட் கோலி எனர்ஜியால் வழி நடத்தப்படக்கூடிய ஆர்வம் மிகுந்தவர்.
ஜஸ்ப்ரிட் பும்ரா உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இதன் மூலம் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
கடந்த 2016-ம் ஆண்டு டோனி தலைமையில் ஜஸ்ப்ரிட் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பின் 2017 - 2021 வரை விராட் கோலி தலைமையில் அவர் அதிகமாக வளர்ந்தார். தற்போது ரோகித் சர்மா தலைமையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் பேட்ஸ்மேனாக இருந்தாலும் பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோகித் சர்மா ஒருவர் என பும்ரா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பேட்ஸ்மேனாக இருந்தாலும் பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோகித் சர்மா ஒருவர். அவர் வீரர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு ஒரு வீரர் என்ன செய்கிறார் என்பதை அறிந்து செயல்படுவார். ரோகித் சர்மா மிகவும் கடுமையானவர் அல்ல. அவர் பவுலர்களின் கருத்துக்களை கேட்க திறந்த மனதுடன் தயாராக இருப்பார்.
எம்எஸ் டோனி எனக்கு வேகமாக நிறைய பாதுகாப்பும் ஆதரவும் கொடுத்தார். அவர் எப்போதும் தன்னுடைய உள்ளுணர்வுகள் மீது அதிக தன்னம்பிக்கை வைப்பார். டோனி எப்போதும் அதிகமாக திட்டமிடுதலை நம்ப மாட்டார்.
விராட் கோலி எனர்ஜியால் வழி நடத்தப்படக்கூடிய ஆர்வம் மிகுந்தவர். அவர் எப்போதும் தனது இதயத்தை ஜெர்ஸியில் வைத்து விளையாடுவார். அவர் எங்களை ஃபிட்னஸ் விஷயத்தில் மாற்றினார். கேப்டனாக இல்லையென்றாலும் விராட் கோலி இப்போதும் தலைவராக இருக்கிறார். கேப்டன் என்பது ஒரு பதவி மட்டுமே. ஏனெனில் ஒரு அணியை 11 பேர் தான் நடத்துகின்றனர்.
இவ்வாறு பும்ரா கூறினார்.
- டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.
- நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ரூனே, பிரிட்டனின் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஹோல்கர் ரூனே, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் ஹோல்கர் ரூனே 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் கெயில் மான்பில்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ரூனே, பிரிட்டனின் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.
- 618 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்.
- கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடிக்க வேண்டும் என்றால் 104 விக்கெட்கள் அவருக்கு தேவை.
சென்னை:
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளராக விளங்கும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வந்தால் 38 வயதை நிறைவு செய்வார். இதனால் அஸ்வின் தன்னுடைய கடைசி கிரிக்கெட் அத்தியாயத்தை நெருங்கி இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதுவரை இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தில் இருக்கிறார். 619 விக்கெட்களுடன் முதலிடத்தில் கும்ப்ளே இருக்கின்றார். கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடிக்க வேண்டும் என்றால் 104 விக்கெட்கள் அவருக்கு தேவை.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறப்போவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கான பதிலை அவர் 2017-ம் ஆண்டு தெரிவித்திருக்கிறார். 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தாம் 618 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசியுள்ள அவர், நான் அனில் கும்ப்ளேவில் மிகப்பெரிய ரசிகர். அவர் 619 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதனால் நான் 618 விக்கெட்டுகள் வந்த உடனேயே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். அவருடைய சாதனையை நான் முறியடிக்க மாட்டேன். 618 விக்கெட்டுகள் வந்தாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
நான் எப்போது 618 விக்கெட் எடுக்கிறேனோ அதுதான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று அஸ்வின் கூறியிருந்தார். அஸ்வின் இந்த பழைய பேட்டி தற்போது வைரலாக இருக்கின்றது. கும்ப்ளே ஓய்வு பெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து 2011-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு அஸ்வின் கால் எடுத்து வைத்தார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலே ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வாங்கிய அஸ்வின், அந்த தொடரில் மொத்தமாக 22 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் 121 ரன்களும் அடித்திருந்தார். அஸ்வின் கும்ப்ளேவின் சாதனையை நெருங்க வேண்டுமென்றால் குறைந்தது 20 டெஸ்ட் போட்டிகள் ஆவது விளையாட வேண்டும். இதில் இந்திய அணி வரும் ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
- மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி அக்டோபர் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்காளதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்காளதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐ.சி.சி விரும்பவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.
இதையடுத்து மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த ஐ.சி.சி திட்டமிட்டது. ஆனால், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த விரும்பவில்லை என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.
மழைக்காலம் என்பதால் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி அக்டோபர் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- வங்காளதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.
- இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி ராவல்பிண்டியிலும், 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30-ம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வங்கதேச அணி மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் வங்கதேச அணியில் தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.
அதேசமயம் தொடரில் இருந்து விலகியுள்ள மஹ்முதுல் ஹசன் ஜாயிற்கு பதிலாக மாற்று வீரராக யாரையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.
வங்கதேச டெஸ்ட் அணி:
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.
பாகிஸ்தான் டெஸ்ட் அணி:
ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி
- மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாட சமித் டிராவிட் ரூ.50 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
- சமித் டிராவிட்டின் அந்த சிக்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூர்:
கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் மகாராஜா டி20 கிரிக்கெட் தொடரில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாட சமித் டிராவிட் ரூ.50 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டரான இவரை வாங்க சில அணிகள் விருப்பப்பட்டாலும், மைசூர் வாரியர்ஸ் அணி முந்திக் கொண்டது.
நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து மைசூர் வாரியர்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மைசூர் வாரியர்ஸ் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனோஜ் பண்டாகே 33 பந்துகளில் 58 ரன்களை விளாசினார்.
இதன்பின் களமிறங்கிய பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய புவன் ராஜு 24 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இந்த போட்டியில் முதலில் ஆடிய மைசூர் அணியில் இடம் பெற்ற ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் 7 ரன்னில் அவுட் ஆனார். அதில் ஒரு சிக்சரை அபாரமாக விளாசி அசத்தினார்.
சமித் டிராவிட்டின் அந்த சிக்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நவீன் வீசிய பந்தில் அபாரமாக புல் ஷாட் மூலமாக டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சரை அடித்தார். ஆல்ரவுண்டரான சமித் டிராவிட் முதல் போட்டியிலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலமாக சமித் டிராவிட்டுக்கு ஐபிஎல் தொடருக்கான ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், உக்ரைனின் மார்ட்டா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விட்னிலோவாவை 7-5, 6-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- கிரிக்கெட்டை பொறுத்தவரை எனக்கு ஓய்வு என்பதே கிடையாது.
- தொடர்ந்து ஒரு மாதம் ஓடிய பிறகு என்னால் அரை மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் வரை ஓட முடிகிறது.
மும்பை:
இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பெரிய பங்கை சர்பராஸ் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்பராஸ் கான் உடல் பருமனாக இருப்பதாக அவரை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதனால் தனது உடல் எடையை குறைக்க சர்பராஸ் கான் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் கூட சர்பராஸ் கான் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் ஆறு மாதம் காலம் வரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். எனினும் தனது உடல் எடை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கிரிக்கெட்டை பொறுத்தவரை எனக்கு ஓய்வு என்பதே கிடையாது. நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். எழுந்தவுடன் ஓடி பயிற்சி மேற்கொள்வேன்.
தொடர்ந்து ஓடுவதன் மூலம் என்னுடைய உடல் தகுதி அதிகரிக்கிறது. தொடர்ந்து ஒரு மாதம் ஓடிய பிறகு என்னால் அரை மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் வரை ஓட முடிகிறது.
ஓடி முடித்த பிறகு தான் ஜிம்மில் இணைந்து பல்வேறு பயிற்சிகளை செய்கிறேன், பேட்டிங் வலை பயிற்சியை மாலை நேரத்தில் வைத்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சர்பராஸ்கான் கூறினார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்களுக்கு சுருண்டது.
கயானா:
தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
டிரினிடாடில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கயானாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேன் பிட் அதிகபட்சமாக 38 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பெடிங்காம் 28 ரன்னும், ஸ்டப்ஸ் 26 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமாரி ஜோசப் 5 விக்கெட்டும், ஜேய்டன் சீலஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்களுக்கு சுருண்டது. ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும், மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 16 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மார்க்ரம் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். சோர்சி 39 ரன் எடுத்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்துள்ளது. கைல் வெர்ரின்னே 50 ரன்னும், வியான் முல்டர் 34 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதுவரை தென் ஆப்பிரிக்க அணி 239 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-4, 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.
இந்நிலையில், எம்.எஸ்.டோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் Uncapped Playerஆக விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் இந்த விதிமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அப்படி எந்த கோரிக்கையும் நாங்கள் வைக்கவில்லை என்றும் அதே சமயம் அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை IPLல் இருந்து வந்தது. எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தை ஒட்டி, அந்த விதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வர, ஐபிஎல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.






