search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samit Dravid"

    • டிராவிட் மகனான சமித் ஜூனியர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
    • 3 அரைசதங்கள் உள்பட 370 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இருப்பவர் ராகுல் டிராவிட். இவரது மகனான சமித் ஜூனியர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆல்ரவுண்டராக கலக்கும் அவர் 7 போட்டிகளில் விளையாடி 37.78 சராசரியுடன் 3 அரைசதங்கள் உள்பட 370 ரன்கள் எடுத்தார். மேலும், பந்து வீச்சில் வலது கை வேகப்பந்து வீச்சாளரான சமித் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இந்நிலையில் தனது மகன் சமித்துக்கு பயிற்சியளிப்பது குறித்த தனது கருத்துக்களை டிராவிட் பகிர்ந்து கொண்டார்.

    அதில் ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது:

    பெற்றோர் மற்றும் பயிற்சியாளராக இருப்பது கடினம் என்பதால் எனது மகன் சமித்திற்கு நான் பயிற்சி அளிக்கவில்லை. நான் தந்தையாகவே இருப்பதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ஒரு பயிற்சியாளராக நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

    என்று அவர் கூறியுள்ளார்.

    ராகுல் டிராவிட்டின் மகன் பள்ளி கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். #RahulDravid #SamitDravid
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். இவர் தற்போது இளையோர் கிரிக்கெட் அணிக்கு (இந்தியா U-19 மற்றும் இந்தியா ‘ஏ’) பயிற்சியாளராக உள்ளார்.

    இவரது மகன் சமித். 12 வயதான சமித் அதிதி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளிக்கும் கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் ஸ்கூலுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் சமித் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். அத்துடன் பேட்டிங்கில் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் அதிதி இன்டர்நேஷனல் பள்ளி வெற்றி பெற்றது.



    ராகுல் டிராவிட்டின் மகன் சமித் சிறப்பாக விளையாடுவது இதுதான் முதல் முறையல்ல. இந்த வருட தொடக்கத்தில் பள்ளிகளுக்கு இடையிலான தொடரில் விவேகானந்தா பள்ளிக்கு எதிராக 150 ரன்கள் குவித்திருந்தார்.

    பெங்களூர் யுனைடெட் கிரிக்கெட் கிளப் சார்பில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரில் விளையாடியுள்ளார். 2015-ல் தொடர்ச்சியாக மூன்று அரைசதம் அடித்ததற்காக கோபாலன் கிரிக்கெட் சேலஞ்ச் விருதை பெற்றுள்ளார்.
    ×