என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சின்சினாட்டி ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா, ஸ்வியாடெக்
    X

    சின்சினாட்டி ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா, ஸ்வியாடெக்

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், உக்ரைனின் மார்ட்டா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விட்னிலோவாவை 7-5, 6-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×