என் மலர்
விளையாட்டு
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்றது.
- கோப்பை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில் சீனா 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
இதற்கிடையே, நேற்று மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. ஜுக்ராஜ் சிங் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
பதில் கோல் அடிக்க சீனா தொடர்ந்து முயற்சித்தும் அதில் பலனில்லை. இதனால் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
அணியினரின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, ஈடு இணையற்ற மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
- ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருது துனித் வெல்லாலகேவுக்கு அளிக்கப்பட்டது.
- சிறந்த வீராங்கனைக்கான விருதினை இலங்கை அணியின் ஹர்ஷிதா வென்றார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்தது.
வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ், இலங்கையின் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரராக இலங்கையின் துனித் வெல்லாலகே தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், சிறந்த வீராங்கனையாக இலங்கையின் ஹர்ஷிதா மாதவி தேர்வு செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை இலங்கை அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் கலந்து கொண்டனர்.
- இதைத் தொடர்ந்து அனைவரும் மாறி மாறி கேக்-ஐ முகத்தில் பூசிக் கொண்டனர்.
இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரசிச்சந்திரன் அஷ்வின். அஷ்வின் இன்று 38 ஆவது பிறந்தநாள் கொண்டாடினார். அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் கலந்து கொண்டனர்.
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்த நிலையில், அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டம் மைதானத்தின் டிரெசிங் ரூமிலேயே நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அஷ்வின் முகத்தில் கேக்கை பூசினர். இதைத் தொடர்ந்து அனைவரும் மாறி மாறி கேக்-ஐ முகத்தில் பூசிக் கொண்டனர்.
அதன்பிறகு அஷ்வின் கேக்-ஐ வெட்ட அணியினர் அனைவரும் அவரை வாழ்த்தி பாடினர். அஷ்வின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பது அஞ்சு ஜார்ஜூக்கு தெரிய வந்துள்ளது.
- கணவரும் பயிற்சியாளருமான ராபர்ட் பாபி போட்டியில் கலந்துகொள்ள அஞ்சுவை ஊக்குவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் நீளம் தாண்டுதல் வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் தனக்கு ஒரு கிட்னி மட்டுமே உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தூரம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்று அசத்தினார். ஆனால் போட்டிக்கு முன்னதாகவே அதே ஆண்டில் நடந்த மருத்துவ பரிசோதனையில் தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பது அஞ்சு ஜார்ஜூக்கு தெரிய வந்துள்ளது.
அந்த வருடம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் அஞ்சு ஜார்ஜின் கணவரும் பயிற்சியாளருமான ராபர்ட் பாபி போட்டியில் கலந்துகொள்ள அஞ்சுவை ஊக்குவித்துள்ளார்.
இடைவேளை எடுத்துக்கொண்டு ஐரோப்பாவை சுற்றி பார்க்கவும், முந்தைய சாம்பியன்ஷிப் போட்டிகளை பார்க்கவும் ஊக்குவித்த தனது கணவர் தன்னை போட்டிக்காக மன ரீதியாக தயார் படுத்தினார் என்று அஞ்சு சமீபத்தில் நடத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது
- முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5 ஆவது முறையாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
இதற்கு முன்பு இந்தியா 2011, 2016, 2018, 2023, ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
- அக்டோபர் 4ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
- மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் 4ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் 9 ஆம் தேதி இலங்கை அணியுடனும் 13 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும் இந்தியா மோதவுள்ளது. அக்டோபர் 20 ஆம்ட தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் 66.64 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும் ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- டிராவிட்டுடன் ஒப்பிடும்போது கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர்.
- நல்ல புரிதல்தான் முக்கியம். அது கம்பீரிடம் இருக்கிறது.
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர்கள் வித்தியசமாக யுக்தியை கொண்டுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டிராவிட்டுடன் ஒப்பிடும்போது கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல புரிதல்தான் முக்கியம். கம்பீரிடம் அது இருக்கிறது.
நாட்டிற்காக விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இது ஆஸ்திரேலியா தொடருக்கான ஆடை ஒத்திகை அல்ல.
இவ்வாறு ரோகித் கூறினார்.
- கோவா மற்றும் கர்நாடகா அணிகள் மோதின.
- இதில் கோவா அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாக்டர் கே திம்மப்பையா நினைவு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதில் கர்நாடகா மற்றும் கோவா அணிகள் மோதின.
இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 26.3 ஓவர்களில் 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்சில், கர்நாடகா 36.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் டெண்டுல்கர் 13 ஓவர்களில் 5/41 எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கோவா அணியில் அபினவ் தேஜ்ரானா (109) சதம் அடிக்க கோவா 413 ரன்களை குவித்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய கர்நாடகா அணி 30.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் கோவா அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் அர்ஜுன் 13.3 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அர்ஜூன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அர்ஜுன், இதுவரை சீனியர் மூன்று வடிவங்களில் 49 போட்டி ஆட்டங்களில் விளையாடி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 13 முதல் தர ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் இதற்கு முன்பு யுவராஜின் தந்தையான முன்னாள் இந்திய வீரர் யோக்ரா சிங்கிடம் பயிற்சி பெற்றார்.
- கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக ரகானே விளையாடி வந்தார்.
- போட்டிக்கு நடுவே ரகானேவை கவுண்டி மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரகானே. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவந்த இவர், சமீப கலமாக மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக அவர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.
அந்த அணி அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய லிசெஸ்டர்ஷையர் அணியானது, அரையிறுதியில் சொமர்செட் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது.
இருப்பினும் ஒருநாள் தொடருக்கு பிறகு கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக ரகானே விளையாடி வந்தார். இத்தொடரில் லிசெஸ்டர்ஷைர் அணியானது விளையாடிய 12 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி மற்றும் 9 போட்டிகளை டிராவில் முடித்து புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனையடுத்து நடப்பு சீசனின் கடைசி இரண்டு போட்டிகளில் லிசெஸ்டர்ஷைர் அணியானது விளையாடவுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு சீசன் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ரகானே விலகியுள்ளதாக லிசெஸ்டர்ஷைர் அணி அறிவித்துள்ளது.
அதன்படி போட்டிக்கு நடுவே காயத்தால் அசௌகரியமாக உணர்ந்த ரகானேவை கவுண்டி மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவிக்கு பிறகு அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டார்.
- ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கோப்பைகள் வென்றுள்ளன.
- வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் வீரர்களும் போட்டியில் பங்கேற்க ஆவலாக உள்ளனர். மேலும் வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கோப்பைகள் வென்றுள்ளன. நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்த போதிலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.
இந்நிலையில், விநாயகர் சிலையின் பாதத்தில் 'ஈ சாலா கப் நமதே (இந்த ஆண்டு கோப்பை நமதே) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2025' என்று எழுதப்பட்ட காகிதத்தை ரசிகர் ஒருவர் வைத்து வழிபாடு செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒன்பது முறை பிளேஆஃப் சென்று மூன்று இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
href="https://t.co/ijDurBE8cE">pic.twitter.com/ijDurBE8cE
— Kevin(@imkevin149) September 15, 2024
- 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
- இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அடுத்து இரு அணிகள் இடையே 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாட்டிகாமில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
ஒருநாள் தொடரில் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். இதனால் இந்த தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் 2 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். கூப்பர் கன்னோலி கூடுதல் வீரராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் வேகப்பந்து வீச்சாளர் மஹில் பியர்ட்மேன் மாற்று வீரராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் பியர்ட்மேன் சிறப்பாக பந்து வீசி 15 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 19 வயதான அவர் 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார்.
வேகப் பந்துவீச்சாளர்களான சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மெரிடித் மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் தற்போது கன்னோலி பியர்ட்மேன் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.
- மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய செஸ் வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் குகேஷ் டி ஆகியோர் நேரடி செஸ் தரவரிசையில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளனர்.
குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார். நேரடி செஸ் தரவரிசையில் இரண்டு இந்தியர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்






