என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சுமார் ஓர் ஆண்டுக்கு பிறகு விராட் கோலி சதம் விளாசியுள்ளார்.
    • இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.

    பெர்த்:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது.

    இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களும் , கேஎல் ராகுல் 62 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தரப்பில் ராகுல் 77 ரன், ஜெய்ஸ்வால் 161 ரன், படிக்கல் 25 ரன், ரிஷப் பண்ட் 1 ரன் மற்றும் ஜூரெல் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

    விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார் .தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். இது டெஸ்டில் அவரது 30-வது சதமாகும். சுமார் ஓர் ஆண்டுக்கு பிறகு விராட் கோலி சதமடித்து அசத்தி உள்ளார்.

    இதனையடுத்து இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவர் என எதிர்பார்ப்பு.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • டாஸ் வென்ற பரோடா அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 35 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார்.

    சயத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இன்று குஜராத் - பரோடா அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி 19.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பரோடா அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 35 பந்துகளில் 74 ரன்கள் குவித்து 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் தற்போது வரை ஹர்திக் பாண்ட்யா 5067 ரன்கள் மற்றும் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • 2 ஆவது இன்னிங்சில் இந்தியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்துள்ளது.
    • முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.

    இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில், முடிந்தால் ரன் அவுட் செய் என்பதுபோல ஜெய்ஸ்வால் கிரீஸ்-க்கு வெளியே நின்றுகொண்டு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனுக்கு போக்கு காட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    2 ஆவது இன்னிங்சில் இந்தியா அணி தற்போது வரை 1 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்து 321 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்சிடம் ரிஷப்பண்டை ஏலம் எடுக்க பட்ஜெட் இல்லை.
    • ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும்.

    18-வது ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரிஷப் பண்டின் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைகளை தவிர்த்து கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தும் பண்புகளை கொண்டுள்ளார். இதனால் எந்த ஒரு அணி உரிமை யாளரோ அல்லது பயிற்சி யாளரோ அவரை இழக்க விரும்பமாட்டார்கள். ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக ரிஷப் பண்ட் எடுக்கப் படுவார்.

    பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு அணிகளிடம் ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு தொகை இருக்கிறது.

    ஏலத்தில் போட்டி நிலவும் பட்சத்தில் ரூ.25 கோடியை தாண்டி இன்னும் 4-5 கோடிகள் அதிக தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார். ரிஷப் பண்ட்டை எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ அந்த அணிக்காக அவர் 3 ஆண்டுகள் விளையாடுவார்.

    சென்னை சூப்பர் கிங்சிடம் அவரை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை. ஆனால், அவர் கண்டிப்பாக பெங்களூரு அல்லது கொல்கத்தா அணியின் கேப்டனாக மாறப்போகிறார் என தெரிகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக ரிஷப்பண்ட் மாறும் பட்சத்தில் அந்த அணிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்தது சாதனையாகும்.

    • டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    204 பந்துகளில் 95 ரன்கள் அடித்திருந்த ஜெய்ஸ்வால் 205 ஆவது பந்தை சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.

    2 ஆவது இன்னிங்சில் இந்தியா அணி தற்போது வரை 1 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்து 258 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறுகிறது.
    • ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார்.

    நான்கு வகை கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் செர்பிய வீரரும், நம்பர் 2 வீரருமான நோவக் ஜோகோவிச் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை புதிய பயிற்சியாளராக அறிவித்தார்.

    அனுபவம் வாய்ந்த டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார்.

    ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

    இதுதொடர்பாக ஜோகோவிச் கூறுகையில், எனது மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவரை, வலையின் அதே பக்கத்தில், இந்த முறை எனது பயிற்சியாளராக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 450 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • அந்த அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் லூயிஸ் பொறுப்புடன் ஆடினார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த மைக்கேல் லூயிஸ், கவெம் ஹோட்ஜ் ஜோடி 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஹோட்ஜ் 25 ரன்னில் வெளியேறினார்.

    4-வது விக்கெட்டுக்கு மைக்கேல் லூயிஸ் உடன் அலிக் அத்தான்ஸ் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடி ரன்களை சேர்த்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல் லூயிஸ் 97 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 140 ரன்களை எடுத்தது. அலிக் அதான்ஸ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுக்கு 250 ரன்களை எடுத்திருந்தது.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜஸ்டின் கிரீவ்ஸ் நிதானமாக ஆடினார். அவருக்கு கீமர் ரோச் ஒத்துழைப்பு அளித்தார். கிரீவ்ஸ் சதமடித்து அசத்தினார்.

    8-வது விக்கெட்டுக்கு இணைந்த கிரீவ்ஸ், கீமர் ரோச் ஜோடி 140 ரன்களை சேர்த்த நிலையில், கீமர் ரோச் 47 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கிரீவ்ஸ் 115 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா அணி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 31-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை 43-30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்று இன்று நடந்தது. இதில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி, கொரியாவின் ஜின் யாங்-சியோ சங் ஜோடி உடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 18-21, 21-14, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • ஐதராபாத் கேப்டன் திலக் வர்மா 67 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார்.
    • சயத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

    சயத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இன்று ஐதராபாத் - மேகாலயா அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற மேகாலயா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது.

    பின்னர் களமிறங்கிய மேகாலயா அணி 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 179 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஐதராபாத் கேப்டன் திலக் வர்மா 67 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார்.

    இதன்மூலம் சயத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

    மேலும், டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 3 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் திலக் வர்மா படைத்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளில் தொடர்ந்து சத்தம் விளாசிய திலக் வர்மா, இதனையடுத்து விளையாடிய சயத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியிலும் சதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

    • 2014 ஆம் ஆண்டு பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 சிக்சர்கள் அடித்திருந்தார்.
    • ஜெய்ஸ்வால் இந்தாண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 193 பந்துகளில் 90 ரன்கள் அடித்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

    இந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர்களை விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற பிரெண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டு கால சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்தார்.

    2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 சிக்சர்கள் அடித்திருந்தார். இந்த சாதனையை 34 சிக்ஸர்கள் அடித்து ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

    ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:-

    மெக்கல்லம் -33 சிக்சர்கள் (2014)

    பென் ஸ்டோக்ஸ் - 26 சிக்சர்கள் (2022)

    கில்கிறிஸ்ட் -22 சிக்சர்கள் (2005)

    வீரேந்தர் சேவாக்- 22 சிக்சர்கள் (2008)

    ×