என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 11 கோடி ரூபாய் வரை ஆர்.சி.பி. போட்டியிட்டது.
    • பின்னர் ஐதராபாத் அணி போட்டியிட இறுதியாக எல்.எஸ்.ஜி. 27 கோடி ரூபாய்க்கு எடுத்தது.

    2025 ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் அதிக விலைக்கு ஏலம் போவார் என கணிக்கப்பட்டது. அதன்படி அவரை எல்.எஸ்.ஜி. அவரை ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான அதிக தொகைக்கு (27 கோடி ரூபாய்) ஏலம் எடுத்தது.

    ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் விடும்போது முதலில் எல்.எஸ்.ஜி. மற்றும் ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இரு அணிகளும் மாறிமாறி கேட்டன. அதிக பணம் வைத்திருந்த ஆர்.சி.பி. எப்படியும் ரிஷப் பண்ட்-ஐ எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆர்.சி.பி. 11 கோடி ரூபாய் வரை கேட்டது. அதன்பின் கேட்கவில்லை. பின்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எல்.எஸ்.ஜி.யுடன் போட்டியிட்டது. 20.75 கோடி ரூபாய்க்கு எல்.எஸ்.ஜி. கேட்டது. அப்போது டெல்லி அணி ஆர்.டி.எம்.-ஐ பயன்படுத்த முடிவு செய்தது.

    பின்னர் எல்.எஸ்.ஜி. அணி 27 கோடி ரூபாய் நிர்ணயித்தது. அதற்கு டெல்லி தயாராக இல்லை. இதனால் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு எல்.எஸ்.ஜி. அணியால் எடுக்கப்பட்டார்.

    எல்.எஸ்.ஜி.-க்கும் ஆர்.சி.பி.க்கும் இடையில் ஏலம் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது ரிஷப் பண்ட்-ஐ எடுத்துவிடுவோம் என்ற கணிப்பில் குட்டி ஸ்பைடர்மேன் பறப்பபோது போன்ற அனிமேஷன் படத்தை வெளியிட்டு "சின்னசாமிக்கு செல்லும் வழியில், ஒருவேளை?" என ஆர்.சி.பி. டுவீட் செய்திருந்தது.

    ஏலம் எடுத்த பின் "Sorry, Kid" மீம் மூலம் எல்.எஸ்.ஜி. ட்ரோல் செய்துள்ளது.

    நேற்றைய ஏலத்தின்போது ஆர்.சி.பி.யின் யுக்தியை கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. கே.எல். ராகுலை அவர்கள் கூடுதல் தொகை கொடுத்து எடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    • மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • டோனியுடனும், கெய்க்வாட் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ஜெட்டா:

    18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் ஜெட்டா நகரில் நேற்றும் இன்றும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

    அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்கு பின் மீண்டும் அஸ்வின் சென்னை அணியில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

    இது குறித்து அஸ்வின் வீடியோ வெளியிட்டு கூறியதாவது:-

    வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வார்கள். 2008 முதல் 2015-ம் ஆண்டு வரை முதல் முறையாக மஞ்சள் ஜெர்சியை அணிந்து சென்னை அணிக்கு விளையாடியதில் இருந்து, அந்த அணிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சென்னை அணியில் விளையாடியது, கற்றுக்கொண்டது தான் சர்வதேச போட்டிகளில் நான் இவ்வளவு தூரம் பயணிக்கு உதவியுள்ளது. சென்னை அணிக்காக நான் கடைசியாக விளையாடி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிட்டது. 2015-ல் கடைசியாக விளையாடியேனேன்.

    எப்படி சொல்வது என தெரியவில்லை. சென்னை அணி மீண்டும் என்னை தேர்வு செய்துள்ளது. விலை, ஹோம்கமிங் என பல்வேறு விதமாக கூறினாலும், 2011-ம் ஆண்டு சண்டை போட்டு என்னை ஏலத்தில் எடுத்தது போன்று மீண்டும் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சிறந்த உணர்ச்சிகள் அது.

    அன்புடென் ஃபேன்ஸ் என்பதை கடந்த 9-10 ஆண்டுகளாக பார்க்கிறேன். ராஜஸ்தான் அணிக்காக விளையாடும்போதெல்லாம், சென்னை அணிக்கு எதிராக களமிறங்கும்போது கடினமாக இருந்தது. அந்த அணிக்கு விளையாடும்போது ரசிகர்கள் எனக்காக குரல் எழுப்பமாடார்கள். இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டோனியுடனும், கெய்க்வாட் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது.

    முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 161 ரன்னும், விராட் கோலி 100 ரன்னும் அடித்தனர்.

    534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 12 ரன்னுக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 30-வது சதமாக பதிவானது. மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலியின் 10-வது சதம் இது.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    • ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
    • முதல் நாள் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் 7 வீரர்கள் இணைந்தனர்.

    ஜெட்டா:

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டமாக நடைபெற்றது.

    முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட 7 வீரர்களை எடுத்துள்ளது.

    இந்நிலையில், முதல் நாளில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களின் விவரம் வருமாறு:

    ரிஷப் பண்ட்: 27 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

    ஷ்ரேயஸ் அய்யர்: 26.75 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

    வெங்கடேஷ் அய்யர்: 23.75 கோடி - கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

    அர்ஷ்தீப் சிங்: 18 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

    யுஸ்வேந்திர சஹல்: 18 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

    ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

    டாப் 5-ல் இடம்பிடித்த அனைவரும் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 450 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 115 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மைக்கேல் லூயிஸ் 97 ரன்னும், அலிக் அதான்ஸ் 90 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கீமர் ரோச் 47 ரன்னில் அவுட்டானார்.

    வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மொமினுல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அவுட்டானார். லிட்டன் தாஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஜேகர் அலி சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 181 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 205 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • சிக்கந்தர் ராசா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 40.2 ஓவரில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நகர்வா 48 ரன்னும், சிக்கந்தர் ராசா 39 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் பைசல் அக்ரம், ஆகா சல்மான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை பாகிஸ்தான் களமிறங்கியது. ஆரம்பத்திலேயே துல்லியமாக பந்து வீசி ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் அணி 21 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நிற்காததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் ஜிம்பாப்வே அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஜிம்பாப்வே சார்பில் முசரபானி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் புனே அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் புனேரி பால்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய புனெ அணி 51-34 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோதாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை 44-42 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    • ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • முதல் நாள் ஏலத்தில் சிஎஸ்கே அணி 7 வீரர்களை எடுத்துள்ளது. அந்த வீரர்களின் விவரம்:

    ஜெட்டா:

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

    முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்றது.

    இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை எடுத்துள்ளது. அந்த வீரர்களின் விவரம்:

    நூர் அகமது 10 கோடி

    ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி

    டேவன் கான்வே 6.25 கோடி

    கலீல் அகமது 4.8 கோடி

    ரச்சின் ரவீந்திரா 4 கோடி

    ராகுல் திரிபாதி 3.4 கோடி

    விஜய் சங்கர் 1.2 கோடி

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெறுகிறது.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    ரூ. 2 கோடி எனும் அடிப்படை விலைக்கு பட்டியலிடப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ தங்கள் அணிக்கு வாங்க போட்டியிட்டனர். கடும் போட்டியில் மல்லுக்கட்டிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ ரூ. 27 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

    முன்னதாக இதே ஏலத்தில் பட்டியலிடப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர்-ஐ பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26 கோடியே 75 லட்சம் தொகைக்கு வாங்கி இருந்தது. இது ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தது. பிறகு ரிஷப் பண்ட் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஸ்ரேயஸ் அய்யரின் சாதனை முறியடிக்கப்பட்டது.

    கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக விளையாடிய கே.எல். ராகுல்-ஐ டெல்லி அணி ரூ. 14 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவர் என எதிர்பார்ப்பு.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இந்த நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி வீரர் தேவ்தத் படிக்கல் இன்றைய முதல் நாள் ஏலத்தில் unsold ஆகி இருக்கிறார். இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    இதே போன்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னரையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. முதல் நாள் ஏலத்தில் இந்திய வீரர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ஏலம் போயினர். இதற்கு மாறாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் ஏலம் போகாததும் அரங்கேறியிருக்கிறது.

    • இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
    • தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து, இன்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டம் போட்டியில், விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார் .தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.

    இதைதொடர்ந்து, இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.

    இந்நிலையில், பெர்த் டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்தில் விராட் கோலி விளாசிய சிக்ஸரில் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

    மைதானத்தில், நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பாதுகாவலரின் தலையில் பந்து தாக்கியுள்ளது. இதில், காயம் அடைந்துள்ளார். இதைக்கண்ட சக ஆஸ்திரேலிய வீரர் பாதுகாவலரை ஆசுவாசப்படுத்தினர். 

    • 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது.
    • பும்ரா 2 விக்கெட்டும் சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பெர்த்:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 2-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே பும்ரா செக் வைத்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆன மெக்ஸ்வீனியை டக் அவுட்டில் வெளியேறினார். இதனையடுத்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய கம்மின்சை சிராஜ் அவுட்டாக்கினார். மேலும் பும்ரா அடுத்த ஓவரிலேயே லபுசாக்னேவை வீழ்த்த அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    ஆஸ்திரேலியா 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. உஸ்மான் கவஜா 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    ×