என் மலர்
கிரிக்கெட் (Cricket)
டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்தார்
- ஐதராபாத் கேப்டன் திலக் வர்மா 67 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார்.
- சயத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
சயத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இன்று ஐதராபாத் - மேகாலயா அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேகாலயா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய மேகாலயா அணி 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 179 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஐதராபாத் கேப்டன் திலக் வர்மா 67 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் சயத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
மேலும், டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 3 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் திலக் வர்மா படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளில் தொடர்ந்து சத்தம் விளாசிய திலக் வர்மா, இதனையடுத்து விளையாடிய சயத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியிலும் சதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.