என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பும்ரா 5 விக்கெட் கைப்பற்றினார்.
    • ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 150 ரன்னில் சுருண்டது. நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ராவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 9 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலேக்ஸ் கேரி 21 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அலேக்ஸ் கேரி விக்கெட் மூலம் பும்ரா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார்.

    அடுத்து வந்த நாதன் லயனை ஹர்ஷித் ராணா 5 ரன்னில் வெளியேற்றினார். கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். அப்போது ஆஸ்திரேலியா 79 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை விக்கெட் எடுக்க விடாமல் தடுத்து விளையாடியது. இதனால் ஆஸ்திரேலியாவின் அல்அவுட் தாமதமாகிக் கொண்டிருந்தது.

    இறுதியாக ஹர்ஷித் ராணா இந்த ஜோடியை பிரித்தது. இதனால் ஆஸ்திரேலியா 104 ரன்கள் எடுத்து ஆல்அவட் ஆனது. ஸ்டார்க்-ஹேசில்வுட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கடைசி விக்கெட்டாக ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும் ஹர்சித் ராணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி, டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஸ்காரப்-கிம் அஸ்ட்ரூப் ஜோடி உடன் மோதியது.

    ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளில் 250 ரன்கள் எடுத்தது.

    ஆன்டிகுவா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடரும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும் நடைபெற உள்ளன.

    இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கீசி கார்டி டக் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் லூயிஸ் பொறுப்புடன் ஆடினார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த மைக்கேல் லூயிஸ், கவெம் ஹோட்ஜ் ஜோடி 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஹோட்ஜ் 25 ரன்னில் வெளியேறினார்.

    4வது விக்கெட்டுக்கு மைக்கேல் லூயிஸ் உடன் அலிக் அத்தான்ஸ் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடி ரன்களை சேர்த்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல் லூயிஸ் 97 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 140 ரன்களை எடுத்தது. கவெம் ஹோட்ஜ் 90 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்துள்ளது.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தோல்வி அடைந்தார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் ஆண்டன்சன் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் லக்ஷயா சென் 18-21, 15-21 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தபாங் டெல்லி அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், உ.பி. யோதாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி. யோதாஸ் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது.

    இறுதியில் உ.பி. யோதாஸ் அணி 40-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை 35-21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

    • தலில் பேட் செய்த மேகாலயா 260 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
    • மேகாலயா - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் ஷில்லாங்கில் நடந்தது.

    கூச் பெஹார் கோப்பைக்கான கிரிக்கெட்டில் மேகாலயா - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் (4 நாள் ஆட்டம்) மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேகாலயா 104.3 ஓவர்களில் 260 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இந்திய முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கின் மகனான ஆர்யவீர் 51 பவுண்டரி, 3 சிக்சருடன் 297 ரன்கள் (309 பந்து) விளாசினார்.

     


    இவரது இன்னிங்ஸ் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விரேந்திர சேவாக், "நன்றாக விளையாடினாய் ஆர்யவீர். 23 ரன்களில் ஃபெராரியை தவறவிட்டாய். ஆனால் சிறப்பாக செயல்பட்டாய், தீயை உனக்குள் உயிர்ப்புடன் வைத்திரு. நீ மேலும் பல டாடி சதங்கள். இரட்டை சதங்கள் மற்றும் முச்சதங்களை அடிப்பாய்," என குறிப்பிட்டுள்ளார். 

    • ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடங்கியது.
    • ரிஷப் பண்ட் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்களும், பண்ட் 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 67 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.

    முன்னதாக ரிஷப் பண்ட் இந்த இன்னிங்சில் அடித்த ரன்களையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 661 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

    • 10 ஆண்டுக்கு பிறகு ஸ்மித் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.
    • முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோல்டன் டக் அவுட் ஆனார்.

    முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 150 ரன்னில் சுருண்டது.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    பும்ரா பந்து வீச்சில் கவாஜா 8 ரன்னில் ஆட்டமிழந்த போது ஸ்மித் களமிறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தை கோல்டன் டக் அவுட் முறையில் வீழ்த்திய 2-வது வீரர் பும்ரா ஆவார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஸ்டெய்ன் பந்து வீச்சில் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் தான் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார் ஸ்மித். இரண்டு அவுட்டுமே எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தப்பட்டது.

    • முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் ஹர்சித் ரானா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து பண்ட் - நிதிஷ் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.

    ரிஷப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் 41 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கவாஜா- நாதன் மெக்ஸ்வீனி ஆகியோர் களமிறங்கினர். நாதன் மெக்ஸ்வீனி 10 ரன்னிலும் கவாஜா 8 ரன்னிலும் ஸ்மித் 0 ரன்னிலும் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஹெட் அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசினார். 11 ரன்கள் எடுத்த போது ஹர்சித் ரானா பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து மிட்செல் மார்ஷ் 6, லபுசேன் 2, கம்மின்ஸ் 3 என ஆட்டமிழந்தனர்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும் ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் ஹர்சித் ரானா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.


    • ஏலத்திற்கு முன்னதாக நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டார்.
    • டெல்லி அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை மட்டும் தக்கவைத்தது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமானது நடைபெறவுள்ளது.

    அதன்படி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.

    இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டார்.

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் அந்த அணியின் மிக முக்கிய வீரராக இருந்து வந்த அவர் தற்சமயம் அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளது

    ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை மட்டும் தக்கவைத்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    போட்டியின் போது ரிஷப் பண்ட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் பக்கம் சென்ற ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் அவரிடம் இந்த ஏலத்தில் எந்த அணிக்கு செல்ல உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். உடனே ஐடியா இல்லை என சிரித்தப்படி பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • அதிகபட்சமாக நிதிஷ் 41, பண்ட் 37 ரன்கள் எடுத்தனர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் 41, பண்ட் 37 ரன்கள் எடுத்தனர்.

    பண்ட் 37 ரன்கள் எடுத்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2000 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை பண்ட் படைத்துள்ளார். ரோகித் சர்மா 2685 ரன்களுடன் முதல் இடத்திலும் விராட் கோலி 2432 ரன்களுடன் இரண்டவாது இடத்திலும் உள்ளனர்.

    • அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டும் ஸ்டார்க், கம்மின்ஸ், மார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 5 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் பந்துகளை தடுத்தும், பந்து பின்னல் விட்டும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கே.எல். ராகுல் மட்டும் அவ்வப்போது ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் ரன்கள் எடுக்க திணறினார். இறுதியாக 23 பந்துகள் எதிர்கொண்ட நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் தேவ்தத் படிக்கல் டக்அவுட் ஆனார். இதனால் இந்தியா 14 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 12 பந்துகளை சந்தித்த விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் வீசிய பவுன்சரில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கேஎல் ராகுல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜூரல் 11, வாஷிங்டன் சுந்தர் 4 என அடுத்தடுத்து வெளியேறினர்.

    இதனையடுத்து ரிஷப் பண்ட்- நிதிஷ் ரெட்டி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். ரிஷப் பண்ட் 37 ரன் எடுத்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்சித் ரானா 7, பும்ரா 8 என நடையை கட்டினர். 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நிதிஷ் ரெட்டி அதிரடி காட்டினார். இறுதியில் அவர் 41 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

    இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டும் ஸ்டார்க், கம்மின்ஸ், மார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×