என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தமிழ் தலைவாஸ் இதுவரை 11 ஆட்டத்தில் 4 வெற்றி, 6 தோல்வி, ஒரு டையுடன் 28 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
    • உ.பி. யோத்தாஸ் அணி 10 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு டையுடன் 28 புள்ளிகள் பெற்றுள்ளது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 69-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - உ.பி. யோதாஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் இதுவரை 11 ஆட்டத்தில் 4 வெற்றி, 6 தோல்வி, ஒரு டையுடன் 28 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. உ.பி. யோத்தாஸ் அணி 10 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு டையுடன் 28 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 6-வது இடத்திலும், தபாங் டெல்லி 7-வது இடத்திலும் உள்ளது.

    • சிறப்பாக விளையாடிய ராகுல் 74 பந்துகளில் 26 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
    • இவரது அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 23 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    அடுத்து வந்த விராட் கோலி 12 பந்தில் 5 ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார். கே.எல். ராகுல் ஒருபக்கம் தாக்குப்பிடித்து விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் 74 பந்துகளில் 26 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது பேட்டில் சென்றதாக ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர். ஆனால் களநடுவர் அவுட் கொடுக்கவில்லை. உடனே ஆஸ்திரேலியா ரீவ்யூ-க்கு சென்றது. அப்போது ராகுல் பேட்டிற்கும் பந்திற்கும் இடைவெளி இருப்பது தெளிவாக தெரிந்தது. பேட் அவரது பேடில் பட்டதும் தெளிவாக தெரிந்தது.

    ஆனால் மற்றோரு பக்கத்தில் இருந்தும் பார்க்கும் போது பேட்டிற்கு அருகில் செல்வது போன்றும் அப்போது ஸ்னிக்கோ மீட்டர் ஸ்பைக்கை காட்டியதால் 3-ம் நடுவர் அவுட் வழங்கினார். 

    ஏமாற்றமடைந்த ராகுல், பெவிலியனுக்குத் திரும்பிச் செல்லும்போது, கள நடுவரிடம் பேச்சுவார்த்தை செய்தார். பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதாகவும், மூன்றாவது நடுவர் களத்தில் உள்ள நடுவர் முடிவைக் கடைப்பிடிக்க போதுமானதாக இருந்திருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். ஆனால் அவரது பேச்சு எடுபடவில்லை. நடுவர் தீர்ப்பே இறுதியானதும் உறுதியானதும் என்ற வகையில் அவர் வெளியேறினார்.

    ஆனால் ஆஸ்திரேலியாவில் ஹாட்ஸ்பாட் வசதி உள்ளது. ஸ்னிக்கோ மீட்டரில் சந்தேகம் எழுந்தால் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி பார்த்திருக்கலாம். ஆனால் 3-ம் நடுவர் அதை செய்யவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 3 சீசன்களைப் போலவே 2025-ம் ஆண்டு சீசனிலும் 74 போட்டிகள் இருக்கும்.
    • போட்டிக்கான இடம், யார்-யார் எந்த தேதியில் மோதுவது உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24, 25-ந் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஐ.பி.எல். போட்டியின் அடுத்த 3 சீசன்களுக்கான தேதிகளை வெளியிட்டுள்ளது.

    அதன்படி வருகிற மார்ச் 14-ந்தேதி 18-வது சீசன் போட்டி தொடங்குகிறது. மே 25-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    2026-ம் ஆண்டு சீசன் மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரையிலும், 2027-ம் ஆண்டு சீசன் மார்ச் 14-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரையிலும் நடை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 3 சீசன்களைப் போலவே 2025-ம் ஆண்டு சீசனிலும் 74 போட்டிகள் இருக்கும். போட்டிக்கான தேதி குறித்து இன்று காலை அணி உரிமையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. போட்டிக்கான இடம், யார்-யார் எந்த தேதியில் மோதுவது உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

    ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்துக்கான இறுதி பட்டியலில் 574 பேர் இடம் பெற்றனர். இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.

    இந்த நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஏல பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரது அடிப்படை விலை குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    • ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகினர்.
    • விராட் கோலி 5 ரன்னில் ஆட்டமிழக்க, கே.எல். ராகுல் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை ஏற்றார். பும்ரா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 23 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    அடுத்து வந்த விராட் கோலி 12 பந்தில் 5 ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார். கே.எல். ராகுல் ஒருபக்கம் தாக்குப்பிடித்து விளையாடினார். இருந்தாலும் 74 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 51 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    இந்திய அணி:-

    1. ஜெய்ஸ்வால், 2. கே.எல். ராகுல், 3. படிக்கல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பண்ட், 6. த்ருவ் ஜூரெல், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நிதிஷ் ரெட்டி, 9. பும்ரா, 10. முகமது சிராஜ், 11. ஹர்சித் ராணா.

    ஆஸ்திரேலியா அணி:-

    1. நான் மெக்ஸ்வீனே, 2. கவாஜா, 3. லபுசேன், 4. ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6. மிட்செல் மார்ஷ், 7. அலேக் கேரி, 8. கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. லயன், 11. ஹேசில்வுட்.

    • ஜெய்ஸ்வால், படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகினர்.
    • விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 5 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் பந்துகளை தடுத்தும், பந்து பின்னல் விட்டும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கே.எல். ராகுல் மட்டும் அவ்வப்போது ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் ரன்கள் எடுக்க திணறினார். இறுதியாக 23 பந்துகள் எதிர்கொண்ட நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் தேவ்தத் படிக்கல் டக்அவுட் ஆனார். இதனால் இந்தியா 14 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 12 பந்துகளை சந்தித்த விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் வீசிய பவுன்சரில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் இந்தியா 32 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்துள்ளது.

    தற்போது கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் விளையாடி வருகின்றனர். கே.எல். ராகுல் 21 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்திய அணி:-

    1. ஜெய்ஸ்வால், 2. கே.எல். ராகுல், 3. படிக்கல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பண்ட், 6. த்ருவ் ஜூரெல், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நிதிஷ் ரெட்டி, 9. பும்ரா, 10. முகமது சிராஜ், 11. ஹர்சித் ராணா.

    ஆஸ்திரேலியா அணி:-

    1. நான் மெக்ஸ்வீனே, 2. கவாஜா, 3. லபுசேன், 4. ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6. மிட்செல் மார்ஷ், 7. அலேக் கேரி, 8. கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. லயன், 11. ஹேசில்வுட்.

    • இந்தியா மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது.
    • அஸ்வின் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடம் பெறவில்லை.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் பும்ரா, சிராஜ், ஹர்சித் ராணா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். அத்துடன் வேகப்பந்து வீச்சு பேட்டிங் ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்தியா களம் இறங்கும் என்பது உறுதியானது.

    இதனால் சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின் இடையே கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலியாவில் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலேக்ஸ் கேரி உள்ளிட்ட பல இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளதால் அஸ்வின் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இருவரையும் பின்னுக்குத் தள்ளி வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசினார்.

    கம்மின்ஸ், ஹேசில்வுட்டிற்கு எதிராக இடது கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள். இருவரும் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் என்றாலும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இவர்களின் சராசரி சற்று குறைவுதான்.

    வாஷிங்டன் சுந்தர் இடது கை பேட்ஸ்மேன். இதனால் அஸ்வினுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்கலாம்.

    • இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி அறிமுகம்.
    • வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் பும்ரா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    நிதிஷ் ரெட்டி, ஹர்சித் ராணா இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி:-

    1. ஜெய்ஸ்வால், 2. கே.எல். ராகுல், 3. படிக்கல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பண்ட், 6. த்ருவ் ஜூரெல், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நிதிஷ் ரெட்டி, 9. பும்ரா, 10. முகமது சிராஜ், 11. ஹர்சித் ராணா.

    ஆஸ்திரேலியா அணி:-

    1. நான் மெக்ஸ்வீனே, 2. கவாஜா, 3. லபுசேன், 4. ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6. மிட்செல் மார்ஷ், 7. அலேக் கேரி, 8. கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. லயன், 11. ஹேசில்வுட்.

    • 229 பந்துகளில் இரட்டை சதம் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    • அவரது ஸ்கோரில் 34 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    கூச் பெஹார் கோப்பைக்கான (19 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட்டில் மேகாலயா- டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் (4 நாள் ஆட்டம்) மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேகாலயா 104.3 ஓவர்களில் 260 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 2-வது நாள் முடிவில் 81 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 468 ரன் குவித்து 208 ரன் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இந்திய முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கின் மகனான ஆர்யவீர் 34 பவுண்டரி, 2 சிக்சருடன் 200 ரன்கள் விளாசி (229 பந்து) களத்தில் உள்ளார்.

    17 வயதான ஆர்யவீர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக கடினமாக உழைத்து வருவதாக ஏற்கனவே சேவாக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு முறை முச்சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் சேவாக் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார்.
    • சரஸ்வதி வித்யா நிகேதன் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    ஜார்ஜ் டவுன்:

    பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து, அங்குள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இந்நிலையில், அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் பிரதமர் மோடி கயானாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்துப் பேசினர். கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். அப்போது பேசிய அவர், இரு நாடுகளையும் கிரிக்கெட் இணைத்துள்ளது என தெரிவித்தார்.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் தோல்வி அடைந்தார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத், தாய்லாந்து வீராங்கனை சுபநிதா உடன் மோதினார்

    இந்தப் போட்டியில் மாளவிகா 9-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஷென்ஜென்:

    பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசிய வீரர் லீ ஜி ஜியா உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் லக்ஷயா சென் 21-14, 13-21, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் லீயிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்தார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 31-29 என்ற புள்ளிக்கணக்கில் திரில் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை 32-26 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

    ×