என் மலர்
விளையாட்டு
- 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன.
- புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் அணி 44-29 என்ற புள்ளிகள் கணக்கில வெற்றி பெற்றது.
- அபராதம் குறித்த அறிவிப்பானது 2-வது ஒருநாள் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னரே வெளியானது.
- இதனால் இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் ஜோசப்பின் பெயர் இடம்பெறவில்லை.
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியின் போது கள நடுவர்களிடம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் அநாகரிமாக நடந்து கொண்டதாகவும் அவர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஐசிசி நடத்தை விதிகள் படி வீரர்கள் போட்டி நடுவர்களிடம் மோதல் போக்கை கொண்டிருப்பது குற்றமாகும். அதனடிப்படையில் தற்போது அல்சாரி ஜோசப்பிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீத கட்டணம் அபராதமாக விதிக்கப்படுகிறது என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்சாரி ஜோசப்பும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவர் மேற்கொண்டு விசாரனைக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் ஐசிசி கூறியுள்ளது.
அதேசமயம் அல்சாரி ஜோசப்பின் இந்த அபராதம் குறித்த அறிவிப்பானது 2-வது ஒருநாள் போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னரே வெளியானது. இதனையடுத்து இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் அல்சாரி ஜோசப்பின் பெயரானது இடம்பெறவில்லை. மேலும் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் மார்க்வினோ மைண்ட்லிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
- முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
டாக்கா:
வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
தற்போது இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் நடந்து வருகிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடருக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 தொடருக்கான அணியின் விவரம் வருமாறு:
லிட்டன் தாஸ் (கேப்டன்), சவுமியா சர்க்கார், தன்ஜித் ஹசன் தமிம், பர்வேஸ் ஹொசைன் ஏமான், ஆபிப் ஹொசைன், மெஹிதி ஹசன், ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன், ஷேக் மெஹிதி ஹசன், ரிஷித் ஹொசைன், நசன் அகமது, தஸ்கின் அகமது, தன்ஜிம் ஹசன் ஷாகிப், ஹசன் மஹ்முது, ரிபான் மாண்டல்
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டிசம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் ஜெய்ப்பூர் அணி 9வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜெய்ப்பூர் அணி 42-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.
- லீக் போட்டியில் ஆடும் லெவனில் விதிகள் மீறப்பட்டுள்ளது.
- லீக் போட்டியில் ஆறு வெளிநாட்டு வீரர்கள் களத்தில் விளையாடி உள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. ஆடும் லெவனில் விதிகளை மீறியதற்காக அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கை (என்சிஎல்) ஐசிசி தடை செய்துள்ளது.
குறைந்தபட்சம் 7 யுஎஸ்ஏ கிரிக்கெட்டைச் சேர்ந்த அல்லது அசோசியேட் வீரர்கள் எல்லா நேரங்களிலும் களத்தில் இருக்க வேண்டும் என்ற விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் லீக் போட்டியில் ஆறு வெளிநாட்டு வீரர்கள் களத்தில் விளையாடி உள்ளனர். இதன் காரணமாக எதிர்கால லீக்கை அனுமதிக்க மாட்டோம் என்று ஐசிசி கூறியுள்ளது.
- பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
- 4-1 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி தற்சமயம் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வி உள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான வழிகள் குறித்து பார்ப்போம்.
அதன்படி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கக்கூடாது. அந்தவகையில் இந்திய அணி இத்தொடரை 4-1 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
ஒருவேளை எஞ்சியுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினால் கூட பிற அணிகளின் வெற்றி தோல்வியை கணக்கில் கொண்ட இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகும். அந்தவகையில் இந்திய அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றியை ஈட்ட வேண்டும்.
அதேசமயம் இந்த தொடரை இந்திய அணி 2-2 என சமநிலையில் முடிக்கும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியும் அல்லது இரண்டு போட்டிகளையும் டிரா செய்தால் மட்டுமே இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பானது கிடைக்கும்.
ஒருவேளை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இத்தொடரை இழக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை முழுமையாக வீழ்த்தியும், அஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கான வாய்ப்பு இருக்கும்.
- களத்தில் நீண்ட நேரம் இருக்க பொறுமை மிக அவசியம்.
- நாம் நமது கட்டுப்பாட்டில் பேட்டிங்கை வெளிப்படுத்தினால் கிடைப்பதுதான் மிகப்பெரிய ஸ்கோர்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
முன்னதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியதால் மீண்டும் பார்முக்கு திரும்பியதாக ரசிகர்கள் கருதினர். ஆனால் 2-வது போட்டியில் 7, 11 ரன்கள் அடித்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதனால் மீண்டும் அவர் மீது விமர்சனங்கள் விழுந்துள்ளன.
இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் எவ்வாறு விளையாடினாரோ அதைப் போன்று விராட் கோலி செய்தால் நிச்சயம் அவரால் மீண்டும் ரன் குவிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய ஸ்கோர் என்பது உங்களை நோக்கி வீசும் பந்துவீச்சாளர்களிடம் இருந்து வருவதோ, எதிரணியின் திறமையிடமிருந்து வருவதோ கிடையாது. நாம் நமது கட்டுப்பாட்டில் பேட்டிங்கை வெளிப்படுத்தினால் கிடைப்பதுதான் மிகப்பெரிய ஸ்கோர்.
2004-ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின் எவ்வாறு வெளியே சென்ற பந்துகளை துரத்தி விளையாடாமல் 241 ரன்கள் குவித்தாரோ அதேபோன்று விராட் கோலியும் சூழலுக்கு ஏற்றவாறு பந்தை துரத்தாமல் தனக்கு நேராக வரும் பந்துகளை அடித்து விளையாடினால் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க முடியும். களத்தில் நீண்ட நேரம் இருக்க பொறுமை மிக அவசியம்.
என்று கில்கிறிஸ்ட் கூறினார்.
கில்கிறிஸ்ட் சொல்வது போல 2004-ம் ஆண்டு நடந்த போட்டியில் சச்சின் கவர் டிரைவ் ஷாட்டுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சிலர் எனது பந்து வீச்சுப் பாணியை நிறுத்த வேண்டும் என்றார்கள்.
- தொலைக்காட்சியை பார்த்தே கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியாவும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
2 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (12) வீழ்த்தியுள்ளார். இந்திய பந்து வீச்சின் முதுகெழும்பாக பும்ரா விளங்குகிறார்.
இந்நிலையில் உலகில் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் பும்ராவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளிக்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பும்ரா கூறியதாவது:-
ஆரம்பத்தில் என்னுடைய பௌலிங் ஆக்ஷனை பார்த்தவர்கள் நான் ஆறு அல்லது ஏழு மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் என நினைத்தார்கள். அதனால் எனக்கு பயிற்சி அளிக்க பலரும் முன் வரவில்லை. சிலர் எனது பந்து வீச்சுப் பாணியை நிறுத்த வேண்டும் என்றார்கள். என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் நான் என் மேல் நம்பிக்கை வைத்தேன். தொலைக்காட்சியை பார்த்தே கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன்.
என அவர் கூறினார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
- 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ளது.
- 4-வது டெஸ்ட் போட்டி மெர்ல்போனில் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட்டில் இந்தியாவும் 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் உள்ளது. இதனையடுத்து 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி கப்பா மைதானத்தில் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டி மெர்ல்போனில் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் 4-வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இந்த டெஸ்ட் போட்டி பாக்சிங் டே போட்டியாக நடைபெற உள்ளது. பொதுவாகவே, டிசம்பர் 26-ம் தேதி துவங்கும் டெஸ்ட்களை பாக்சிங் டே டெஸ்ட் என அழைப்பார்கள்.
கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் துவங்கும் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என ஒவ்வொரு ஆண்டும் விளையாடப்படுகிறது. இதனால் இந்த போட்டிகளுக்கு ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பார்கள். மெர்போர்ன் ஒரு லட்சம் பார்வையாளர்கள் பார்க்ககூடிய அளவில் மிக பெரிய ஸ்டேடியம் என்பது குறிப்பிடத்தக்கது.
- 11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
- பரபரப்பான 12-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் தோல்வியடைந்தார்.
11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார். At the end of 11 rounds, Gukesh was leading by a score of 6 - 5.இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில் 12-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கடந்த சுற்றில் வெற்றிபெற்று குகேஷ் முன்னிலை வகிக்க, இந்த சுற்றில் டிங் வெற்றியால் கூடுதல் ஒரு புள்ளி பெற்றதன் மூலம் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
தற்போது 2 சுற்று ஆட்டங்களே எஞ்சியிருப்பதால் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
- ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்தினார்.
- ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மாவுக்கு பதில் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்தினார்.
பெர்த்-ல் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்பிய ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தினார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர், ரோகித் சர்மாவுக்கு பதில் ஜஸ்பிரித் பும்ராவை இந்திய அணி கேப்டனாக நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கபில் தேவ், "அதைப் பற்றி இப்போதே பேசுவது மிக சீக்கிரமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு போட்டியில், அவர் சிறந்தவர் என்று சொல்ல முடியாது, ஒரு மோசமான ஆட்டத்தால், அவர் அதற்குத் தகுதியற்றவர் என்றும் சொல்லிவிட முடியாது."
"ஒரு வீரர் நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும். இதில் நிறைய ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கடினமான நேரத்தில் அவர் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர முடியும்," என்று தெரிவித்தார்.
- சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.4 கோடிக்கு டோனியை தக்க வைத்துக்கொண்டது.
- இந்த ஆண்டின் முதல் பாதியில் அவரது சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர் எம்.எஸ். டோனி. இவர் அடிக்கும் ஹெலிகாப்டர் சிக்ஸரை யாராலும் மறக்க முடியாது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
டோனி தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இதற்காக சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.4 கோடிக்கு டோனியை தக்க வைத்துக்கொண்டது.
இதனிடையே, ஐ.பி.எல். போட்டிகளை தவிர்த்து வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்காத போதிலும் எம்.எஸ். டோனியின் சந்தை மதிப்பு சரியவில்லை. மாறாக இந்த ஆண்டின் முதல் பாதியில் அவரது சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் பிராண்ட் ஒப்புதல்கள் அடிப்படையில் அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக் கான் போன்ற பாலிவுட் ஜாம்பவான்களை டோனி பின்னுக்குத்தள்ளி உள்ளதாக என்று அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் யூரோக்ரிப் (Eurogrip) டயர்களின் விளம்பர தூதராக மாறிய தோனி, கல்ஃப் ஆயில் (Gulf Oil), க்ளியர்-ட்ரிப் (Cleartrip), மாஸ்டர் கார்டு (Master Card), சிட்ரோயன் (Citroen), லேஸ் (Lay's) மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் (Karuda Aerospace) போன்ற பெரிய பிராண்டுகளின் தூதராகி உள்ளார்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் எம்.எஸ். டோனி 42 விளம்பர ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார். இந்த எண்ணிக்கை அமிதாப்பை விட ஒன்றும், ஷாருக்கை விட 8 அதிகம்.






