என் மலர்
விளையாட்டு
- அடிலெய்டு டெஸ்டில் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- அப்போது முகமது சிராஜ் வெளியே போ... என்ற வகையில் சைகை காட்டுவார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணம் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் 140 ரன்கள் குவித்ததுதான்.
அவர் இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 141 பந்தில் 17 பவுண்டரி, 4 சிக்சருடன் 140 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் முகமது சிராஜ் பந்தில் க்ளீன் போல்டானார். அப்போது டிராவிஸ் ஹெட்டை பார்த்து முகமது சிராஜ் முறைப்பார். அதற்கு டிராவிஸ் ஹெட் ஏதோ கூறுவார். இதனால் முகமது சிராஜ் வெளியே போ... வெளியே போ.. என சைகை காட்டுவார்.
இருவரும் மைதானத்தில் மோதிக்கொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. வார்த்தைபோர், ஸ்லெட்ஜிங்கை தாண்டி முகம் சுழிக்க வைத்தது.
இந்த விவகாரம் குறித்து ஐசிசி நடுவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து முகமது சிராஜிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இருவருக்கும் தலா ஒரு தகுதி இழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டது.
- பிசிசிஐ செயலாளராக இருந்த ஐசிசி-யின் புதிய தலைவராக கடந்த 1-ந் தேதி பொறுப்பேற்றார்.
- சைகியா இதற்கு முன்னர் இணை செயலாளர் பதவியில் இருந்தார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த 1-ந் தேதி பொறுப்பேற்றார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய செயலாளரை நியமிக்க வேண்டியுள்ளது கிரிக்கெட் வாரிய விதிப்படி இந்த பதவியை 45 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியாவை தலைவர் ரோஜர் பின்னி நியமித்துள்ளார். சைகியா இதற்கு முன்னர் இணை செயலாளர் பதவியில் இருந்தார். புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரையில் இவர் இந்த பதவியில் தொடர உள்ளார்.
- 63.330 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
- இந்திய அணி 57.290 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
துபாய்:
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களும் இலங்கை 328 ரன்களும் சேர்த்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கைக்கு 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி தற்போது தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.
63.330 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 2-வது 3-வது இடங்கள் முறையே ஆஸ்திரேலியா 60.710 புள்ளிகளுடன் இந்திய அணி 57.290 புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை அணி 45.45 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும்.
- பாகிஸ்தானில் சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்த ஐசிசி பேச்சுவார்த்தை.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட முடியாது என அறிவித்து விட்டது.
இதனால் பாகிஸ்தானிடம் ஹைபிரிட் மாடலாக இந்த தொடரை நடத்த ஐசிசி கேட்டுக்கொண்டது. நாங்கள் ஹைபிரிட் மாடலாக நடத்த தயார். அதேவேளையில் இந்தியாவில் நடைபெறும் தொடர்களையும் இதுபோது ஹைபிரிட் மாடலாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.
2027 வரை ஹைபிரிட் மாடலாக நடத்தலாம் என ஐசிசி தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட முடியாது என்றால், பாகிஸ்தான் அணியும் இந்தியா சென்று விளையாட எந்த காரணமும் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்ரிடி கூறுகையில் "பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் இருக்க வேண்டும் மற்றும் வலுவான கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தியாவால் பாகிஸ்தானில் வந்து விளையாட முடியாவிட்டால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரிலும் விளையாடுவதற்கு எந்த காரணமும் இல்லை.
ஒவ்வொரு உறுப்பு நாடும் கிரிக்கெட் விளையாடுவது அல்லது பணம் சம்பாதிக்க விரும்புகிறதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு ஐசிசி-க்க உள்ளது. இது தொடர்பாக ஐசிசி முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
- பிரிஸ்பேனில் நடந்த பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
- துபாயில் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
இந்திய கிரிக்கெட்டுக்கு நேற்றைய தினத்தை சோகமான நாள் என்று தான் வர்ணிக்க வேண்டும். அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்டில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இதே போல் பிரிஸ்பேனில் நடந்த பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
துபாயில் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் கோப்பையை கோட்டை விட்டது.
இந்த நிலையில் ஒரே நாளில் இந்திய கிரிக்கெட் அணி 3 தோல்விகளை தழுவியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 2-வது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹேட் தேர்வு செய்யப்பட்டார்.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
அடிலெய்டு:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 180 ரன்களும், ஆஸ்திரேலியா 337 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் டிராவிஸ் ஹெட்டுக்கு எப்படி பீல்டிங் அமைப்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கிண்டலடித்துள்ளார்.
அடிலெய்டு மைதானத்தில் 2 1/2 நாட்களில் போட்டி முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்ள மைதான நிர்வாகம் அனுமதித்தது. அதன் காரணமாக ஏராளமான ரசிகர்கள் அடிலெய்ட் மைதானத்திற்குள் வந்து தங்களுடைய நேரத்தை செலவிட்டனர்.
அந்த புகைப்படத்துடன் "டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியாவுக்கு இந்த பீல்டிங்தான் தேவைப்படுகிறது" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
- சிராஜ் வீசிய புல்டாஸ் பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் போல்டானார்.
- அதனை மிகவும் ஆக்ரோஷமாக சிராஜ் கொண்டாடினார்.
அடிலெய்டு:
அடிலெய்டு டெஸ்டில் முகமது சிராஜ் வீசிய புல்டாஸ் பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் போல்டானார். அதனை மிகவும் ஆக்ரோஷமாக சிராஜ் கொண்டாடினார். முகமது சிராஜ், அவரை பெவிலியன் செல்லுமாறு ஆக்ரோஷமாக கையால் சைகை செய்தார். இதனையடுத்து ஹெட்டும் பதிலுக்கு ஏதோ கூறிவிட்டு பெவிலியன் திரும்பினார்.
முகமது சிராஜ் நன்றாக பந்துவீசியதாக கூறியதாக டிராவிஸ் ஹெட்டும், டிராவிஸ் ஹெட் பொய் கூறுவதாக முகமது சிராஜும் தெரிவித்தனர்.
டிராவிஸ் ஹெட்-முகமது சிராஜ் இடையேயான இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலியா கேப்டன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரோகித் சர்மா கூறியதாவது:-

ஆக்ரோஷமாக செயல்படுவதற்கும், அதிகப்படியாக ஆக்ரோஷமாக செயல்படுவதற்கும் இடையே மிக மெல்லிய கோடு இருக்கிறது. அணியின் கேப்டனாக யாரும் அந்த கோட்டை கடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எனது வேலை. ஆனால், வீரர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளலாம். அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது முகமது சிராஜுக்கு நன்றாக தெரியும். அணிக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அவர் செய்வார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும்போது இது போன்ற விஷயங்கள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கம்மின்ஸ் கூறியதாவது:- டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன். அவர் மிகுந்த முதிர்ச்சியுடையவர். அவர் தொடர்புடைய விஷயங்களை அவரே பேசுவார். வீரர்கள் அவர்களாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும். அணியின் கேப்டனாக என்னுடைய தலையீடு தேவைப்பட்டால், நான் கண்டிப்பாக தலையிடுவேன். ஆனால், நான் தலையிடுவதற்கான தேவை இருந்ததாக ஒருபோதும் உணரவில்லை என்றார்.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.
- பெண்கள் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் லி ஹுவா, வாங் ஜி ஜோடியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் இந்திய ஜோடி 21-18, 21-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீனாவின் காய் யான் யானிடம் 21-14, 13-21, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டார்.
- முதலில் ஆடிய வங்கதேசம் 294 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 295 ரன்கள் எடுத்து வென்றது.
செயிண்ட்கிட்ஸ்:
வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்களை எடுத்தது. தன்ஜித் ஹசன் 60 ரன்னில் அவுட்டானார். கேப்டன் மெஹிதி ஹசன் 74 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணியின் ரூதர்போர்ட் அதிரடியாக ஆடினார். அவர் 80 பந்தில் 8 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 113 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அவருக்கு ஷாய் ஹோப் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 86 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.
- இதில் இந்திய வீரரான சதீஷ்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சதீஷ்குமார் கருணாகரன், சீனாவின் ஜூ ஜுவான் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் சதீஷ்குமார் 21-17, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
கடந்த ஆண்டு நடந்த ஒடிசா மாஸ்டர்ஸ் சூப்பர் 100 போட்டியில் சதீஷ்குமார் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்களை எடுத்தது.
- 6வது விக்கெட்டுக்கு இணைந்த மஹமதுல்லா-ஜேகர் அலி ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.
செயிண்ட்கிட்ஸ்:
வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அரை சதமடித்து 60 ரன்னில் அவுட்டானார். கேப்டன் மெஹிதி ஹசன் 74 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஜேகர் அலி 48 ரன்னில் அவுட்டானார்.
6வது விக்கெட்டுக்கு இணைந்த மஹமதுல்லா-ஜேகர் அலி ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்களை எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் குஜராத் அணி 5வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
இதில், பாட்னா அணி 38-28 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.
மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 34-33 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.






