என் மலர்
விளையாட்டு
- இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி உள்ளது.
- 10-வது இடத்தில் சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி தேடப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட போட்டிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு - சென்னை போட்டி இடம் பெற்றுள்ளது. இந்த போட்டி 9-ம் இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் சென்னை வீழ்த்தி பெங்களூரு அணி குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியின் முடிவில் பெங்களூரு அணி வெற்றியை அதிக நேரம் கொண்டாடியதால் கடுப்பான டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றார். இது சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
10-வது இடத்தில் சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி தேடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, 4 போட்டிகளில் வென்று கம்பேக் கொடுத்து அசத்தியது.
2004-ம் ஆண்டு அதிக தேடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்:-
1. இந்தியா vs இங்கிலாந்து
2. இந்தியா vs பங்களாதேஷ்
3. இந்தியா vs ஜிம்பாப்வே
4. இலங்கை vs இந்தியா
5. இந்தியா vs ஆப்கானிஸ்தான்
6. இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
7. இந்தியா vs பாகிஸ்தான்
8. பாகிஸ்தான் vs இங்கிலாந்து
9.ராயல் சேலஞ்சர்ஸ் vs சூப்பர் கிங்ஸ்
10. சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- முதலில் பேட்டிங் செய்த விதர்பா 221 ரன்கள் குவித்தது.
- மும்பை 19.2 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.
இந்தியாவில் சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் விதர்பா- மும்பை அணிகள் மோதின. முதலில் விளையாடிய விதர்வா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.
பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ரகானே ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரித்வி ஷா 26 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார். ரகானே 45 பந்தில் 84 ரன்கள் விளாசினார்.
ஷிபம் டுபே 22 பந்தில் 37 ரன்களும், சூரயான்ஷ் ஷெட்ஜ் 12 பந்தில் 36 ரன்களும் அடிக்க மும்பை அணி 19.2 ஓவரில் 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
222 இலக்கை எட்டியதன் மூலம் டி20 நாக்அவுட் போட்டியில் அதிக ரன்களை துரத்திப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக 2010-ல் நடைபெற்ற பைசல் பேங்க் டி20 கோப்பை (Faysal Bank T20 Cup 2010) கோப்பையில் கராச்சி அணி ராவல்பிண்டி அணிக்கெதிராக 210 ரன்களை சேஸிங் செய்தது.
- ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது.
- ஜிம்பாப்வே வெற்றி பெற 6 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது.
ஹராரே:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செடிகுல்லா அடல் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் ரன் எடுக்காமலும், செடிகுல்லா அடல் 3 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களமிறங்கிய ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 20 ரன், முகமது இஷாக் 1 ரன், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 13 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதனை தொடர்ந்து கரீம் ஜனத் மற்றும் முகமது நபி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் கரீம் ஜனத் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் ங்வாரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக பிரையன் பென்னட்- தடிவானாஷே மருமணி களமிறங்கினர். இதில் தடிவானாஷே மருமணி 9 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த டியான் மியர்ஸ் பென்னட்டுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்தது. டியான் மியர்ஸ் 32 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராசா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய பென்னட் 49 பந்தில் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஜிம்பாப்வே வெற்றி பெற 6 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 2 பந்தில் 6 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே அணி அடுத்த 3 பந்தில் 4 ரன்கள் எடுத்து டிரா செய்தது. இதனால் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் ஜிம்பாப்வே அணி 1 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதனால் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 13-ந் தேதி நடக்கிறது.
- டி20 உலகக் கோப்பையுடன் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20யில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
- மற்றொரு இந்திய வீரரான தவான் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
2024-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். சிலர் டி20 என ஒரு வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த வீரர்கள் யார் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
டீன் எல்கர்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு அறிவிப்பை தொடங்கிய வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டீன் எல்கர் உள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அனைத்து விதமான போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 86 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். 86 போட்டியில் 14 சதம் 23 அரைசதம் விளாசியுள்ளார். இவர் தலைமையில் தென் ஆப்பிரிக்கா 18 போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும் 8-ல் தோல்வியும் கண்டுள்ளது.
டேவிட் வார்னர்

அதே மாதத்தில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடருடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஒருநாள் தொடரில் இருந்து 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வை அறிவித்தார்.
இவர் ஆஸ்திரேலியாவுக்காக 112 டெஸ்ட் போட்டி விளையாடி 8786 ரன்களும் 161 ஒருநாள் போட்டியில் விளையாடி 6932 ரன்களும் எடுத்துள்ளார். 2 வடிவத்திலும் சேர்த்து 48 சதம் விளாசியுள்ளார்.
கிளாசன்

ஜனவரி மாதத்தில் 3 வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிளாசன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் 2019-ம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய இவர் 4 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடி உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கவனத்தை செலுத்தி அதிரடியாக விளையாடி வருகிறார்.
நீல் வாக்னர்

நியூசிலாந்து அணியை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர். இவரும் இந்த ஆண்டில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகமாகினார். 64 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர் 260 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2021-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை வென்ற அணியில் இவர் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலின் மன்ரோ

நியூசிலாந்து அணியின் தொடங்க வீரர் கொலின் மன்ரோ. இவர் கடந்த மே மாதம் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். 2020-ம் ஆண்டு டி20 அணியில் இடம் பிடித்த இவர் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 57 ஒருநாள் போட்டி ஒரு டெஸ்ட்டில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற டி20 அணியில் இவர் இடம் பிடிக்காத நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தவர் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக். இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் 2022-ம் ஆண்டு இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். அந்த தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லவில்லை.
அதன்பிறகு 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தான் கடைசி என அறிவித்தார். இதனையடுத்து 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி, 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக ஒரு சதம் 17 அரை சதம் விளாசியுள்ளார்.
கேதர் ஜாதவ்

இந்த ஆண்டு ஜூன் மாதம் கேதர் ஜாதவ் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் கடைசியாக 2020-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். 73 ஒருநாள் போட்டி, 9 டி20 போட்டியில் விளையாடியுள்ள இவர், 2 சதம், 6 அரை சதம் விளாசியுள்ளார். 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்டர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஆல் ரவுண்டரான ஜடேஜா ஆகியோர் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையுடன் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர்.
விராட் கோலி இந்திய அணிக்காக 125 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம் 38 அரைசதம் விளாசியுள்ளார். ரோகித் சர்மா 159 டி20 போட்டிகளில் விளையாடி 5 சதம் 32 அரைசதம் விளாசியுள்ளார். ஜடேஜா 74 டி20 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டும் 515 ரன்களும் எடுத்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து அணியின் மிகவும் வயதான வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்(42). இவர் 2009-ல் டி20யிலும் 2015 ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த இவர் இவர் இந்த ஆண்டு மே மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இவர் 3-வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட்டில் 704 விக்கெட்டும் ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டும் டி20 18 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
ஷிகர் தவான்

இந்திய அணியின் தொடங்க வீரர் ஷிகர் தவான். இடதுகை பேட்டரான இவர் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார்.
இவர் 2013-ம் ஆண்டு இந்திய அணி ஐசிசி சாம்பியன் டிராபியை வெல்ல உதவினார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஷிகர் தவான் ஆவார். இதுமட்டுமல்லாமல் 2014 ஆசிய கோப்பை, 2015 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் இந்தியாவின் அதிக ரன்கள் குவித்த வீரர் ஷிகர் தவான்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட் (2315 ரன்கள்), 167 ஒருநாள் போட்டி (6793 ரன்கள்), 68 டி20 போட்டிகளில் (1759 ரன்கள்) விளையாடி உள்ளார். மொத்தமாக 24 சதம், 55 அரை சதம் விளாசியுள்ளார்.
இவர் 2022-ம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.
டேவிட் மலான்

ஐசிசி தரவரிசையின் முன்னாள் நம்பர் ஒன் டி20 பேட்டர் இங்கிலாந்து அணியை சேர்ந்த டேவிட் மலான். இவர் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்களில் (ஜாஸ் பட்லர்) இவரும் ஒருவர். இவர் இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 8 சதம், 32 அரை சதம் விளாசியுள்ளார்.
மொயின் அலி

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி. இவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 37 வயதான அலி கடைசியாக வெற்றி பெற்ற இரண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2022-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கியமான வீரராக இருந்தவர்.
இவர் இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 6678 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதம் விளாசியுள்ளார். 366 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
ஷகிப் அல் ஹசன்

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடுவதாக தெரிவித்தார்.
டி20-யில் 13 அரைசதம் உள்பட 2251 ரன்களும் 149 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட்டில் 4000 ரன்களும் 240 விக்கெட்டும் இவர் வீழ்த்தியுள்ளார்.
மஹ்முதுல்லாஹ்

வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்முதுல்லாஹ். இவர் 2021-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வந்த இவர் இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருடன் ஓய்வை அறிவித்தார். வங்கதேச அணியில் டி20 போட்டிகள் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர் 2-வது இடத்தில் உள்ளார். இவர் 141 டி20 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களும் 40 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் இன்னும் ஓய்வை அறிவிக்காமல் உள்ளார்.
மேத்யூ வேட்

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011-ல் அறிமுகமான வேட், ஆஸ்திரேலியாவுக்காக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்டில் 1613 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1867 ரன்களும், டி20-யில் 1202 ரன்களும் எடுத்துள்ளார். 2021-ல் ஆஸ்திரேலியாவின் முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல இவர் முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
விருத்திமான் சகா

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் விருத்திமான் சகா நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2024-25 ரஞ்சி டிராபி சீசனின் முடிவில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.
சகா 2010 முதல் 2021 வரை 40 டெஸ்ட் மற்றும் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார். டெஸ்ட்டில் மூன்று சதங்களுடன் 1353 ரன்களை எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் பேட்டிங் செய்த ஐந்து போட்டிகளிலும் சேர்ந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தியாவுக்கான அவரது கடைசி போட்டி 2021-ல் நியூசிலாந்திற்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.
சித்தார்த் கவுல்

இந்திய பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல். 34 வயதான பஞ்சாப் கிரிக்கெட் வீரர், இந்தியாவிற்கு வெளியே உள்ள மற்ற லீக்குகளிலும், இந்தியாவில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான டி20 லீக்குகளிலும் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கவுல் 2018 முதல் 2019 வரை இந்தியாவுக்காக மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாத அவர் டி20-யில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவர்களை தவிர சௌரப் திவாரி (இந்தியா), வருண் ஆரோன் (இந்தியா), பரிந்தர் ஸ்ரான் (இந்தியா), சித்தார்த் கவுல் (இந்தியா), டேவிட் வைஸ் (தென்னாப்பிரிக்கா), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் (நெதர்லாந்து), ஷானன் கேப்ரியல் (வெஸ்ட் இண்டீஸ்), வில் புகோவ்ஸ்கி (ஆஸ்திரேலியா), டி20-யில் மட்டும் பிரையன் மசாபா (உகாண்டா) ஆகிய வீரர்களும் இந்த ஆண்டில் ஓய்வை அறிவித்துள்ளனர்.
- 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர்.
- நாளை 14-வது சுற்று ஆட்டம் நடைபெறும்.
சிங்கப்பூர்:
தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்றுகள் முடிந்துள்ளது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.
இந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று 13-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடினார். பரபரப்பாக சென்ற இந்த சுற்று கடைசியில் டிராவில் முடிந்தது.
நாளை 14-வது சுற்று ஆட்டம் நடைபெறும். இந்த சுற்றும் ஒரு வேளை டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.
- இந்தியாவின் மந்தனா 105 ரன்களில் அவுட் ஆனார்.
- ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பெர்த்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சதர்லேண்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 110 ரன்னில் அவுட் ஆனார். இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கடினமான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - ரிச்சா கோஷ் களமிறங்கினர். ரிச்சா கோஷ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மந்தனாவுடன் ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது. தியோல் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்மன்பிரீத் கவுர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மந்தனா சதம் (105) அடித்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியில் இந்தியா 45.1 ஓவரில் 215 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
- மும்பை அணியில் ரகானே 84 ரன்கள் குவித்தார்.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் மும்பை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா, பெங்கால், உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இன்று காலை நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தி மத்திய பிரதேசம் அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பரோடா - பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பரோடா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய பெங்கால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 131 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பரோடா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்ற காலிறுதி ஆட்டத்தில் விதர்பா - மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதர்வ தைடே, வான்கடே ஆகியோர் அரை சதம் விளாசினர்.
இதனை தொடர்ந்து விளையாடிய மும்பை அணியில் ரகானே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 45 பந்தில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் மும்பை 224 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ரகானே தட்டிச்சென்றார்.
இதன் மூலம் சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதிக்கு 3-வது அணியாக மும்பை முன்னேறி உள்ளது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் டெல்லி - உத்தர பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 4-வது அணியாக இடம் பெறும்.
- முதலில் விளையாடி தென் ஆப்பிரிக்கா அணி 183 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டர்பன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 40 பந்தில் 82 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி, அப்ரார் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ரிஸ்வான் 74 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து சொதப்பி வரும் பாபர் அசாம் இந்த போட்டியில் டக் அவுட் ஆனார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி வரும் 13-ம் தேதி சென்சூரியனில் நடைபெறுகிறது.
- டிராவிஸ் ஹெட் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
- டாப் 10-ல் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.
ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதன்படி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோரூட்டை (897) பின்னுக்கு தள்ளி சக நாட்டவர் ஹாரி புரூக் (898) முதல் இடம் பிடித்துள்ளார். இருவருக்கும் 1 புள்ளிகள் மட்டும் வித்தியாசம் ஆகும்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
டாப் 10-ல் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் ரிஷப் பண்ட் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும் ரிஷப் பண்ட் 3 இடங்கள் பின் தங்கி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
விராட் கோலி 6 இடங்கள் பின் தங்கி 20-வது இடத்திலும் ரோகித் சர்மா 5 இடங்கள் பின் தங்கி 31-வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பெரும் அளவில் மாற்றம் இல்லை. பும்ரா முதல் இடத்தில் தொடர்கிறார். இந்திய வீரர் அஸ்வின் ஒரு இடம் பின் தங்கி 5-வது இடத்தையும் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
- வங்காளதேசம் அணி227 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது.
- வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரண்டன் கிங் 82 ரன்களை அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்சில் உள்ள பசாட்ரே நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 45.5 ஓவர்களில் 227 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது.
அந்த அணியின் மகமதுல்லா 62 ரன்களையும், தன்ஜித் ஹசன் 33 பந்துகளில் 46 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், குடாகேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 228 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரண்டன் கிங் 82 ரன்களையும், லீவிஸ் 49 ரன்களையும் எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகளை கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 12) நடைபெறுகிறது.
முன்னதாக இரு அணிகள் இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
- 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்று முடிந்துள்ளது.
- குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார்.
இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்று முடிந்துள்ளது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.
இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு இன்று 13-வது சுற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார். முந்தைய சுற்றில் தாக்குதல் பாணியை கையாண்ட லிரென் 39-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார். இதனால் இந்த தடவை புதிய வியூகங்களுடன் குகேஷ் களம் காணுவார். குகேஷ் தனது இரு வெற்றியையும் வெள்ளை நிற காய்களுடன் ஆடும்போது தான் பெற்றார். எனவே இன்று அவர் வெள்ளை நிற காய்களுடன் ஆடுவது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
முக்கியமான இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் வீரருக்கு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும். ஒரு வேளை எஞ்சிய இரு சுற்றும் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்தார்.
- 74-வது டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றுவகை போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷாஹீன் அப்ரிடி பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் ஷாஹீன் அப்ரிடி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அப்போது தான் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்தார்.
இதுதவிர இவர் ஒருநாள் போட்டிகளில் 112 விக்கெட்டுகளையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 116 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஷதாப் கான் ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.
இதன் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷாஹீன் அப்ரிடி பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 74-வது டி20 போட்டியில் விளையாடிய போது ஷாஹீன் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
முன்னதாக தனது 71வது டி20 போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப்-க்கு பிறகு பாகிஸ்தான் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை மிக வேகமாக எடுத்த இரண்டாவது வீரர் ஆனார் ஷாஹீன் அப்ரிடி.






