என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிங் லிரென்- குகேஷ் மோதிய 13-வது சுற்று ஆட்டம் டிரா
    X

    உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிங் லிரென்- குகேஷ் மோதிய 13-வது சுற்று ஆட்டம் டிரா

    • 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர்.
    • நாளை 14-வது சுற்று ஆட்டம் நடைபெறும்.

    சிங்கப்பூர்:

    தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்றுகள் முடிந்துள்ளது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.

    இந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று 13-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடினார். பரபரப்பாக சென்ற இந்த சுற்று கடைசியில் டிராவில் முடிந்தது.

    நாளை 14-வது சுற்று ஆட்டம் நடைபெறும். இந்த சுற்றும் ஒரு வேளை டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.

    Next Story
    ×