என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 30 ரன்னில் அவுட்டானார்.
3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் சூர்யகுமார் இணைந்தார். இந்த ஜோடி பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன் குவித்து அவுட்டானார்.
இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியில் மிரட்டினார். அவர் 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத், சீனாவின் ஹுவாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 22-20, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தேவிகா, மலேசியாவின் ஜின் வெய் உடன் மோதுகிறார்.
- இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
- கேப்டன் சூர்யகுமார் 30 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் 30 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் (1822) 3000* ரன்களை கடந்து சூர்யகுமார் சாதனை படைத்தார்.
- இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
இதற்கு முன்பு 5 போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் 64 சிக்சர்கள் அடித்திருந்த இங்கிலாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
- சொந்த மாநிலத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்
- சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும் அபிஷேக் சர்மா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - சூரியகுமார் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சூரியகுமார் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார். 103 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
- 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. .
- சொந்த மாநிலத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியிலும் சொற்ப ரன்னில் அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
- சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியின் மூலம் சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். இதனால் கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் சபலென்காவை கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா எதிர்கொண்டார்.
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் மகளிர் ஒன்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சபலென்காவை கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா எதிர்கொண்டார்.
இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரைபகினா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனை ஒருவர் பட்டம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
- 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
- சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதன்மூலம் சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். இதனால் கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் போட்டி நடைபெறுவதால் மைதானத்தில் சஞ்சு சாம்சனுக்கு அவரது ரசிகர்கள். பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர்.
- 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
- மாற்று வீரர்களாக பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இதனிடையே 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணம் அடைந்த கம்மின்ஸ், ஹேசல் வுட், டிம் டேவிட் ஆகியோரும் அணியில் இடம்பெற்று இருந்தனர்.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும், மேட் ஷார்ட்டும் தொடரில் இருந்து விலகினார். இதனால் மாற்று வீரர்களாக பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி
மிச்சேல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாட் குனெமன், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா, பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா
- உதயநிதியை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகன் சந்தித்து பேசினர்.
- இது தொடர்பான புகைப்படங்களை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னாள் கிரிக்கெட் விரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகன் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இது தொடர்பான புகைப்படங்களை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், விளையாட்டு மேம்பாடு, தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தினோம்" என்று தெரிவித்துள்ளார்.
- 6 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா?
- இருவரும் மோதிய போட்டியில் அல்காரஸ் 4-ல், ஜோ கோவிச் 5-ல் வெற்றி பெற்றுள்ளனர்.
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் நம்பர் ஒன் வீரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-4ம் நிலை வீரரான ஜோகோவிச் ( செர்பியா ) மோதுகிறார்கள்.
6 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 22 வயதான அவர் தற்போது தான் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். கடந்த ஆண்டு அல்காரஸ் பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 8-வது தடவையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார்.
38 வயதான ஜோகோவிச் 25-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.
24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் இருக்கும் சாதனையாளரான அவர், கடைசியாக 2023-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற பிறகு எந்த கிராண்ட்சிலாமும் பெறவில்லை.
5 கிராண்ட் சிலாம் போட்டிக்கு பிறகு ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர் 38-வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். இருவரும் மோதிய போட்டியில் அல்காரஸ் 4-ல், ஜோ கோவிச் 5-ல் வெற்றி பெற்றுள்ளனர்.
இன்று பிற்பகல் நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 2 தடவை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையுமான சபலென்கா ( பெலாரஸ்)-ஐந்தாவது வரிசையில் உள்ள எலினா ரைபகினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள்.
சபலென்கா 5-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறார். ரைபகினா முதல் கிராண்ட் சிலாம் பட்டத்துக்கு காத்திருக்கிறார்.






