என் மலர்
விளையாட்டு
சீனாவில் நடைபெற்ற உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் தொடரில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டா சாம்பியன் பட்டம் வென்றார்.
டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த கென்டோ மொமோட்டா இந்தோனேசியாவைச் சேர்ந்த இளம் வீரரான அந்தோணி சினிசுகாவை எதிர்கொண்டார். நம்பர் ஒன் வீரரான கென்டோ மொமோட்டாவிற்கு அந்தோணி சினிசுகா கடும் சவாலாக விளங்கினார்.
இதனால் முதல் செட்டை அந்தோணி 21-17 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் மொமோட்டா சிறப்பாக விளையாடி அதை 21-17 தன்வசமாக்கினார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் அந்தோணி முன்னிலை பெற்றிருந்தாலும், அதன்பின் கோட்டை விட்டதால் கென்டோ மொமோட்டா 21-14 எனக்கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
3-வது செட்டில் மொமோட்டா ஒரு கட்டத்தில் 5-12 என பின்தங்கியிருந்தார். அதன்பின் சிறப்பாக விளையாடி புள்ளிகளை பெற்றார். 17-14 என முன்னிலைப் பெற்றிருந்தபோது, அந்தோணி காயம் அடைந்தார். அதன்பின் 21-14 என மொமோட்டா வெற்றி பெற்றார்.

முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அவுட்டான நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் அணியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிவம் டுபே அறிமுகம் ஆனார்.
கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லோகேஷ் ராகுல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
இதனால் இந்தியா 7 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கையுடன் பந்தை எதிர்கொண்டார். அதேவேளையில் ரோகித் சர்மாவால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இருவரும் நிதானமாக விளையாட இந்தியாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. ஆனால் 19-வது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 36 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 56 பந்தில் 6 பவுண்டரியுடன் அந்த ரன்னை எடுத்தார்.
அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடி வருகிறது.
40 ஓவர் வரை இந்த ஜோடி நிலைத்து நின்றார் இந்தியா 250 ரன்களை தாண்ட வாய்ப்புள்ளது. தற்போது இந்தியா 29 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 45 ரன்னுடனும், ரிஷப் பந்த் 28 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையில் ஏபி டிவில்லியர்ஸ்-ஐ விளையாட வைக்க தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு முயற்சி செய்து வருகிறது.
தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். 360 டிகிரி என்று அழைக்கப்படும் அவர், இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார்.
மேலும் ஹசிம் அம்லா, ஸ்டெயின் போன்றோர் ஓய்வு பெற்றதால் அந்த அணி திணறியது. தற்போது அணியை சீரமைக்கும் வேலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தீவிரம் காட்டி வருகிறது.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு இயக்குனராக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களின் முதல் இலக்கே அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு சிறந்த அணியை தயார் செய்வதே ஆகும்.
முதற்கட்டமாக ஏபி டி வில்லியர்ஸ்-ஐ மீண்டும் டி20 சர்வதேச அணிக்கு அழைத்து வர முயற்சி செய்கிறது. இதுகுறித்து அவரிடம் பேசுவேன் என்று மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க் பவுச்சர் கூறுகையில் ‘‘நீங்கள் உலகக்கோப்பை தொடருக்கு செல்லும்போது, தலைசிறந்த வீரர்களுடன் விளையாட விரும்புவீர்கள். ஏபி டி வில்லியர்ஸ் சிறந்த வீரர்களில் ஒருவர் என நான் உணர்ந்தால், அவருடம் பேசி மீண்டும் அணிக்கு திரும்ப ஏன் அழைக்கக் கூடாது? ’’ என்றார்.
இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரில் விளையாட ஏபி டி வில்லியர்ஸ் தயாராக இருந்து நிலையில், தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரரான பிரித்வி ஷா எனக்கு அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்கை நினைவு படுத்துகிறார் என முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு உறுப்பினருமான வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா. டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார். மேலும், அந்த தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்று சாதனைப் படைத்தார். ஆனால் ஆஸ்திரேலியா தொடரில் விளையாட சென்றபோது காயத்தால் அணியில் இடம் பெற முடியாமல் போனது.
அதன்பின் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டதாக தடைவிதிக்கப்பட்டது. தடையில் இருந்து மீண்ட அவர் சையத் முஷ்டாக் அலி டிராபில் விளையாடினார். தற்போது ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பிரித்வி ஷாவின் ஆட்டத்தை பார்க்கும்போது சேவாக்கை நினைவுப் படுத்துகிறார் என திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திலிப் வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘பிரித்வி ஷா தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அவருடைய திறமையில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் சங்கடமான சோதனையை சந்தித்தார். ஏனென்றால், இருமல் டானிக்கில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து கலந்திருந்ததால் அந்த நிலை ஏற்பட்டது.
தற்போது அதிக அளவில் முதிர்ச்சி அடைந்துள்ளார். மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஏராளமான ஷாட்டுகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. ஏராளமான ஷாட்டுகளை பார்க்கும்போது அவர் எனக்கு சேவாக்கை நினைவு படுத்துகிறார்’’ என்றார்.

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கரால் தேடப்பட்ட நபர் சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என தெரியவந்துள்ளது.
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். சச்சின் போன்ற பிரபலங்களை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம்.
அவர்கள் பதிவிடும் தகவல்களை, செய்திகளை லைக் செய்வதும் இணையவாசிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வகையில் சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்ட குறுந்தகவல் ஒன்றை இணையவாசிகள் வைரல் ஆக்கியுள்ளனர்.
‘எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான நான் ஒருமுறை சென்னை வந்த போது நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டல் பணியாளர் ஒருவரை சந்தித்தேன்.
கிரிக்கெட் ஆட்டத்தின்போது முழங்கைகளில் அணியும் பாதுகாப்பு பட்டை (எல்போ பேட்) குறித்து அந்த ஓட்டலின் ஊழியர் அப்போது எனக்கு ஆலோசனை கூறினார். அவர் கூறிய பின்னர் உடனடியாக பட்டையின் வடிவத்தை மாற்றினேன்.

அவரை மீண்டும் சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரை கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்’ என டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
2001-ம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தபோது சச்சின் டெண்டுல்கர் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் தங்கியிருந்தபோது அவருக்கு காபி பரிமாற வந்த ஓட்டல் பணியாளர் அளித்த ஆலோசனை மிகப்பெரிய பலனை அளித்தது.
2001-ம் ஆண்டு மார்ச் 18 முதல் 21-ம் தேதிவரை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அந்தப் போட்டித்தொடரில் முதல் இன்னிங்சில் சதம் அடித்திருந்த சச்சின் 126 ரன்களை குவித்து இந்திய அணி 501 ரன்களுடன் வெற்றிவாகை சூடுவதற்கு களம் அமைத்து தந்தார்.
மேலும், ஆஸ்திரேலியாவுடனான அந்த போட்டித்தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வென்றது.
இந்நிலையில், சச்சின் சந்திக்க விரும்பிய நபர் சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என்று தற்போது தெரியவந்துள்ளது.
’சச்சினுக்கு அன்று நான் ஆலோசனை கூறிய சம்பவம் எனது வாழ்நாளில் மறக்க முடியாத அற்புதமான தருணமாகும். என்னை அவர் சந்திக்க விரும்புவதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன்’ என
நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், குருபிரசாத்.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை:
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இரு அணிகளின் பட்டியல் வருமாறு:
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது ஷமி.
வெஸ்ட் இண்டீஸ்: சுனில் அம்ப்ரிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ்,
காட்ரெல், ஜாசன் ஹோல்டர், ஹேடன் வால்ஷ், கீமோ பால், அல்ஜாரி ஜோசப்.
பெர்த்தில் நடைபெற்று வரும் பகல் இரவு டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 468 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
பெர்த்:
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லாபஸ்சாக்னேயின் சிறப்பாக ஆட்டத்தால் 146.2 ஓவரில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லாபஸ்சாக்னே 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து 56 ரன்னில் வெளியேறினார்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஸ் டெய்லர் 80 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 34 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 23 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், நாதன் லியான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
250 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. ஆனால் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய வீரர்களை கட்டுப்படுத்தினர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோ பர்ன்ஸ் 54 ரன்னும், லாபஸ்சாக்னே 50 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 69.1 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், நீல் வாக்னர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.
சென்னை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை போராடித் தான் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குறுகிய வடிவிலான போட்டிகளில் எப்போதும் அபாயகரமானவர்கள். அதனால் மிகவும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.
கோலி, லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா சூப்பர் பார்மில் உள்ளனர். அதே வேகத்துடன் ஒருநாள் தொடரிலும் ரன்மழை பொழிய காத்திருக்கிறார்கள். ரிஷப் பந்தின் பேட்டிங்கும், விக்கெட் கீப்பிங்கும் விமர்சனத்துக்கு உள்ளானாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
காயமடைந்துள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வாலும், புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரும் அணியில் இணைந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வெகுவாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி அதே வீறுநடையை இந்த தொடரிலும் நீட்டிக்க ஆர்வம் காட்டுகிறது.
பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் என்று அதிரடி சூரர்களுக்கு குறைவில்லை. பந்து வீச்சிலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்துவது தான் அவர்களுக்குரிய சவாலாகும். இதை சரியாக செய்தால் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.
பொதுவாக சென்னை ஆடுகளம் வேகமின்றி (ஸ்லோ) காணப்படும். இத்தகைய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபடும். கடைசியாக இங்கு நடந்த 7 ஆட்டங்களில் 6-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கக்கூடும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி.
வெஸ்ட் இண்டீஸ்: சுனில் அம்ப்ரிஸ், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ரோமரியோ ஷெப்பர்டு அல்லது காட்ரெல், கேரி பியர் அல்லது ஜாசன் ஹோல்டர், ஹேடன் வால்ஷ், கீமோ பால், அல்ஜாரி ஜோசப்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
2 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஒரு நாள் போட்டி நடக்க உள்ள நிலையில் மழையால் போட்டிக்கு ஆபத்து வந்துவிடுமோ? என்று ஒரு பக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர். ஆனால் இன்றைய தினம் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் ஆட்டம் பாதிப்பின்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் என சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். சச்சின் போன்ற பிரபலங்களை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம்.
அவர்கள் பதிவிடும் தகவல்களை, செய்திகளை லைக் பண்ணுவதும் இணையவாசிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வகையில் சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்ட குறுந்தகவல் ஒன்றை இணையவாசிகள் வைரல் ஆக்கியுள்ளனர்.
‘எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான நான் ஒருமுறை சென்னை வந்த போது நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியர் ஒருவரை சந்தித்தேன்.

கிரிக்கெட் ஆட்டத்தின்போது முழங்கைகளில் அணியும் பாதுகாப்பு பட்டை (எல்போ பேட்) குறித்து அந்த ஓட்டலின் ஊழியர் அப்போது எனக்கு ஆலோசனை கூறினார். அவர் கூறிய பின்னர் பட்டையின் வடிவத்தை மாற்றினேன்.
அவரை மீண்டும் சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரை கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ முடியுமா இணையவாசிகளே’, என டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெர்த்:
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லாபஸ்சாக்னேயின் சிறப்பாக ஆட்டத்தால் 146.2 ஓவரில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லாபஸ்சாக்னே 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து 56 ரன்னில் வெளியேறினார்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடியது. ஆஸ்திரேலிய வீரர்களின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி நியூசிலாந்து வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
அந்த அணியின் ரோஸ் டெய்லர் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். டெய்லர் 80 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 34 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 23 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இறுதியில், நியூசிலாந்து அணி 55.2 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், நாதன் லியான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
விராட்கோலி போல் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் தெரிவித்தார்.
சென்னை:
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியினர் பிற்பகலில் பயிற்சி மேற்கொண்டனர்.
பயிற்சிக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஹெட்மயர், பூரன், ஹோப் ஆகிய இளம் வீரர்கள் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. நீங்கள் எந்த அளவுக்கு கடினமாக உழைத்து போட்டிக்கு தயாராகிறீர்கள் என்பது தான் முக்கியமானதாகும். கடினமான உழைப்பின் மூலம் தான் விராட்கோலி உயர்ந்த நிலையை எட்டி இருக்கிறார். அவரிடம் இருந்து இதனை நிறைய வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும், கடினமாக உழைக்கவில்லை என்றால் சாதிக்க முடியாது. கடின உழைப்பு உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது தான் உங்களுக்கு சிறந்த வெற்றியை தேடிக்கொடுக்கும்.
இந்த போட்டி தொடரில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். உண்மையிலேயே எங்கள் வீரர்கள் கடினமாக உழைத்து வருகிறார்கள். இதனால் வெற்றியை ருசிக்க தொடங்கி உள்ளனர். 20 ஓவர் போட்டியில் ஹெட்மயர் ஆட்டம் அருமையாக இருந்தது. டெஸ்ட் போட்டி போன்ற நீண்ட நேர போட்டிகளை எடுத்து கொண்டால் அவர் இளம் வயது வீரர் என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள். ஒருநாள் போட்டியில் அவர் 4 சதங்கள் அடித்து இருக்கிறார். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஒருபோதும் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரில் எங்கள் அணியினர் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. கரீபியனில் நடந்த இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான செயல்பாட்டில் அதிக வித்தியாசம் இருந்தது. ஆனால் இந்த 20 ஓவர் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே சிறிய வித்தியாசம் தான் தெரிந்தது. இதேபோல் ஒருநாள் போட்டி தொடரிலும் நாங்கள் நன்றாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியில், ‘ஷிவம் துபே ஒவ்வொரு ஆட்டத்தில் இருந்தும் நம்பிக்கையை பெற்று வருகிறார். மும்பையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் முதல் ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அவர் பின்னர் சரிவை சமாளித்து சிறப்பாக பந்து வீசினார். அவர் மீது கேப்டன் விராட்கோலி நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்தார். அதனை அவர் சரியாக பயன்படுத்தினார். அவரிடம் அபாரமான திறமை உள்ளது. அவர் நல்ல நம்பிக்கையை பெறும் போது சிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுப்பார். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் பந்து வீச்சில் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படுகிறார்.
சிறந்த கலவை கொண்ட அணியை உருவாக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆல்-ரவுண்டராக வாய்ப்பு அளிக்கப்படுவது அணிக்கு உதவிகரமாக இருக்கிறது. அவர் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் அசத்துகிறார். சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் மீண்டும் இணைந்து பந்து வீசுவார்களா? என்று கேட்கிறீர்கள். அதற்குரிய சூழ்நிலை அமைந்தால் இரண்டு பேருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும் போதும் அதை சரியாக பயன்படுத்தி கொள்கிறார். வருங்காலத்தில் அவருக்கு ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம் கிடைக்கும்’ என்றார்.
முதலாவது ஒரு நாள் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் தர்மராஜன் ஆகியோர் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று ஆய்வு செய்தனர். இன்றும், நாளையும் மோப்ப நாய் உதவியுடன் மைதானத்தில் சோதனை நடத்தப்படும் என்றும், பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வெஸ்ட் இண்டீசுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில், டி20 போட்டிகள் முதலில் நடந்தன. இதில் இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகிற 18-ம் தேதி 2-வது போட்டியும், 22-ம் தேதி 3-வது போட்டியும் நடைபெறும்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்திய அணி வீரர்களின் பட்டியல் வருமாறு:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், மொகமது ஷமி, ஷர்துல் தாக்குர்
ஏற்கனவே, தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயத்தால் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.