search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஸ் டெய்லர்"

    வங்காளதேசம் அணிக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டியில் ரோஸ் டெய்லரின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 432 ரன்கள் குவித்தது. #BANvsNZ #RossTaylor

    வெலிங்டன்:

    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

    முதல் 2 நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 211 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவர் 212 பந்துகளில் 200 ரன் குவித்தார். அவரது 3-வது இரட்டை சதமாகும். நிக்கோலஸ் சதம் அடித்தார். அவர் 107 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 74 ரன்னும் எடுத்தனர்.

    221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காள தேசம் அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 80 ரன்னில் 3 விக்கெட் இழந்தது. #BANvsNZ

    வங்காளதேச அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் ரோஸ் டெய்லர் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #NZvBAN #RossTaylor #StephenFleming
    டுனிடின்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டத்தில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.

    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது.

    முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் 69 ரன்னும், நிக்கோலஸ் 64 ரன்னும், தற்காலிக கேப்டன் டாம்லாதம் 59 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வங்காளதேச அணி 242 ரன் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது.

    இந்த ஆட்டத்தில் டெய்லர் 43-வது ரன்னை எடுத்தபோது 8 ஆயிரம் ரன்னை தொட்டார். ஒருநாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    51-வது ரன்னை எடுத்த போது ஒருநாள் ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை டெய்லர் படைத்தார். அவர் ஸ்டீபன் பிளெமிங்கை முந்தி முதல் இடத்தை பிடித்தார்.



    34 வயதான டெய்லர் 218 ஒருநாள் போட்டி, 203 இன்னிங்சில் விளையாடி 8026 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.34 ஆகும். இதில் 20 சதமும், 47 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 181 ரன் குவித்துள்ளார்.

    பிளெமிங் 279 போட்டியில் 268 இன்னிங்சில் ஆடி 8007 ரன் எடுத்துள்ளார். சராசரி 32.41 ஆகும். 8 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 134 ரன் எடுத்துள்ளார். #NZvBAN #RossTaylor #StephenFleming
    ×