search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிம் சவுத்தி"

    • டி20 வரலாற்றில் 150 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் டிம் சவுத்தி.
    • அவருக்கு அடுத்த இடத்தில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் உள்ளார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் அதிரடியில் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடியை அவுட்டாக்கியபோது டி20 கிரிக்கெட்டில் தனது 150-வது விக்கெட்டை வீழ்த்தினார் சவுத்தி. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானிம் ரஷித் கான் 130 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்தின் இஷ் சோதி 127 விக்கெட்டுடன் 4-வது இடத்திலும், இலங்கையின் லசித் மலிங்கா 107 விக்கெட்டுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சஹல் 96 விக்கெட்டுடன் 14-வது இடத்தில் உள்ளார்.

    • நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    • டெஸ்ட் போட்டிகளில் 109 சிக்சர்களுடன் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

    நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.

    டாம் ப்ளூன்டெல் 25 ரன்னுடனும், கேப்டன் டிம் சவுத்தி 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஜாக் லீச் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் பேட்டிங் சாதனையை டிம் சவுத்தி சமன் செய்துள்ளார். ஸ்டுவார்ட் பிராட் வீசிய பந்தில் சிக்சர் அடித்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் டோனியுடன் 12வது இடத்தை பகிர்ந்துள்ளார். டோனி 144 இன்னிங்ஸ்களில் 78 சிக்சர் அடித்திருந்தார். சவுத்தி 131வது இன்னிங்சில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 109 சிக்சர்களுடன் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

    • நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்.
    • ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர்.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களை அடித்து இந்திய ரசிகர்களை உற்சாக படுத்தினார்.

    மேலும் இன்றைய சதம் மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். மேலும் நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் பெற்றுள்ளார். 


    இந்நிலையில் சூரிய குமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் இருந்து பல சிறந்த டி20 வீரர்கள் உள்ளனர், டி20 போட்டிக்கு மட்டுமல்ல, மூன்று வடிவ போட்டிகளுக்கும் பல அற்புதமான கிரிக்கெட் வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.

    அவர் (சூர்யகுமார்) பல வழிகளில் அடிக்கக் கூடிய ஒரு வீரர். அவர் கடந்த 12 மாதங்களில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இன்று அவர் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும், அவர் இந்தியாவின் சிறந்த வீரராக மாற, தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு சவுத்தி தெரிவித்துள்ளார்.

    இதனிடையே. இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் போது இறுதி ஓவரை வீசிய டிம் சவுத்தி, அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்த ஹாட்ரிக் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×