என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ‘ஒவ்வொரு நாளும் எனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண விரும்புகிறேன்’ என்று ரிஷப் பண்ட் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் அரைசதம் அடித்த இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்  (71 ரன்கள்) போட்டிக்கு பிறகு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உள்ளூர் போட்டிகளை போல் சர்வதேச போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பதை சில சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவத்தின் மூலம் உணர்ந்து இருக்கிறேன். சர்வதேச போட்டியை பொறுத்தமட்டில் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரியும், அணியின் தேவை என்ன? என்பதற்கு தகுந்த மாதிரியும் தான் விளையாட வேண்டும். இது நான் கற்றுக்கொள்ளும் காலமாகும். எனது ஆட்டம் அணிக்கு உதவும் வகையிலும், நல்ல ரன்கள் குவிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன்.

    இந்த போட்டியில் ஓரளவு ரன் எடுத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்தில் முழு கவனம் செலுத்தவே விரும்புகிறேன். என்னை பற்றி அதிகம் பேசப்படுகிறது. அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் உள்ளது. நான் ரன் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் எனது திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்து இருக்கிறேன். இந்திய அணிக்காக விளையாடுகையில் எல்லா இன்னிங்சும் எனக்கு முக்கியமானதாகும். இளம் வீரரான நான் ஒவ்வொரு நாளும் எனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்று விரும்புகிறேன்.

    சில சமயங்களில் ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு முக்கியமானதாகும். நானும், ஸ்ரேயாஸ் அய்யரும் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு தான் செயல்பட்டோம். அது நமது அணியின் ரன்னை உயர்த்த உதவியது. பும்ரா சிறந்த பவுலர் என்பது எல்லோருக்கும் தெரியும். காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை. மற்ற பவுலர்களும் மோசமாக செயல்படவில்லை. இளம் பவுலர்கள் பாடம் கற்று வருகிறார்கள். நான் பயிற்சியில் ஈடுபடும்போது தான் கிரிக்கெட் குறித்து சிந்திப்பேன். மற்ற நேரங்களில் கிரிக்கெட் குறித்து அதிகம் சிந்திக்க மாட்டேன். அமைதியாக செயல்படுவதுடன், ஆட்ட திறனையும், உடல் தகுதியையும் மேம்படுத்தும் படி அணி நிர்வாகம் எனக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி நான் செயல்பட்டு வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஹெட்மயர் அளித்த பேட்டியில், ‘சர்வதேச போட்டியில் எனது அதிகபட்ச ரன் (139) இதுவாகும். எனது இந்த இன்னிங்ஸ் எனக்கு சிறப்பானதாகும். இலக்கை நிர்ணயிப்பதை விட இலக்கை விரட்டி பிடிப்பது எப்பொழுதும் சிறப்பானதாகும். சேசிங்கில் அணியை வெற்றி பெற வைப்பது அதிக சுகமானதாகும். கடைசி வரை நின்று ஆட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனது வருத்தம் தான். அதனை செய்ய நான் முயற்சித்து வருகிறேன். ஷாய் ஹோப்புக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு. எனவே அவருடன் இணைந்து பேட்டிங் செய்தது நான் ஆக்ரோஷமாக செயல்பட உதவிகரமாக இருந்தது.

    எனது பேட்டிங்கை அனுபவித்து விளையாடி வருகிறேன். சில சமயங்களில் ரன்கள் குவிக்க முடியும். சில நேரங்களில் ரன் வராது. கடந்த சீசனில் நான் ஐ.பி.எல். போட்டியில் சரியாக ரன் எடுக்கவில்லை. அதேநேரத்தில் அந்த அனுபவம் வலுவான நிலைக்கு திரும்ப வழிவகுப்பதாக இருந்தது. கரீபியன் லீக் போட்டியில் சீனியர் வீரர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம் சிறப்பாக விளையாட தூண்டுதலாக இருந்தது. பொல்லார்ட் போன்ற சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவது சிறப்பானதாகும்’ என்று தெரிவித்தார்.
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 139 ரன்கள் எடுத்ததன் மூலம் டோனியின் சாதனையை ஹெட்மயர் சமன் செய்துள்ளார்.
    சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது வீரராக களம் இறங்கிய ஹெட்மயர் வானவேடிக்கை நிகழ்த்தினார். 26 வயதான அவர் 106 பந்துகளில் 139 ரன் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். 41-வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய அவருக்கு இது 5-வது சதமாகும்.

    139 ரன் குவித்ததன் மூலம் ஹெட்மயர் புதிய சாதனை படைத்தார். வெற்றிகரமான சேசிங்கில் அதிக ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை புரிந்தார். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு ரிக்கார்டோ போவெல் 124 ரன் எடுத்து இருந்தார். இதை முறியடித்தார்.

    மேலும் இந்திய மண்ணில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக ரன் எடுத்தவர்களில் 2-வது இடத்தை பிடித்தார். ஜெயசூர்யா 1997-ம் ஆண்டு 151 ரன் (அவுட் இல்லை). குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

    சேப்பாக்கம் மைதானத்தில் 139 ரன் குவித்ததன் மூலம் ஹெட்மயர் அதிக ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ள டோனியை சமன் செய்தார். டோனி 2007-ம் ஆண்டு ஆசிய லெவன் அணிக்காக சேப்பாக்கத்தில் ஆப்பிரிக்க லேவனுக்கு எதிராக 139 ரன் (அவுட் இல்லை) குவித்து இருந்தார். சயீத் அன்வர் 1997-ம் ஆண்டு 194 ரன் குவித்ததே இன்னும் சாதனையாக இருக்கிறது.

    சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 198 பந்துகள் வீசப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றாத மோசமான சாதனையை சுழற்பந்து வீச்சாளர்கள் படைத்துள்ளனர்.

    சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மொத்தம் 10 விக்கெட்டுகள் விழுந்தன. இந்திய அணியில் விழுந்த 8 விக்கெட்டுகளில் 7 பேர் வேகப்பந்துக்கு ‘அவுட்’ ஆனார்கள். ஒரு வீரர் ‘ரன் அவுட்’ ஆனார் வெஸ்ட் இண்டீசுக்கு விழுந்த 2 விக்கெட்டும் வேகப்பந்து வீரர்கள் கைப்பற்றியது.

    198 பந்துகள் வீசியும் சுழற்பந்து வீரர்கள் யாராலும் விக்கெட் எடுக்கப்படவில்லை. இந்திய சுழற்பந்து வீரர்கள் 126 பந்தும், வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீரர்கள் 72 பந்தும் வீசினார்கள். சர்வதேச போட்டியில் இது 4-வது நிகழ்வாகும்.

    வங்காளதேசம்- ஜிம்பாப்வே (2001) அணிகள் மோதிய போட்டியில் 228 பந்துகள் வீசியும் சுழற்பந்து வீரர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றாததால் முதல் நிலையில் இருக்கிறது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்களுக்கு இடையேயான ஆட்டத்தில் ஜடேஜாவுக்கு ரன் அவுட் கொடுத்தது அதிருப்தியை ஏற்படுத்தியதாக விராட் கோலி கூறியுள்ளார்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது ஜடேஜா ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஜடேஜா ரன் அவுட் ஆன காட்சி.


    48-வது ஓவரில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (21 ரன்) ரன்-அவுட் செய்யப்பட்டார். ஜடேஜா ஒரு ரன்னுக்கு வேகமாக ஓடிய போது வெஸ்ட் இண்டீஸ் பீல்டர் ரோஸ்டன் சேஸ் பந்தை ஸ்டம்பின் மீது சரியாக எறிந்தார். முதலில் நடுவர் ஷான் ஜார்ஜ் அவுட் கொடுக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அப்பீல் செய்யவில்லை.

    ஆனால் மைதானத்தில் உள்ள மெகா திரையில் ரீப்ளேயை பார்த்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் இது அவுட் என்று கூறி நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து 3-வது நடுவரின் கவனத்துக்கு சென்றது. டி.வி. ரீப்ளேயில் ஜடேஜா ரன்-அவுட் தான் என்பது தெரிய வந்ததால், அவுட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் இவ்வளவு தாமதமாக டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தது இந்திய கேப்டன் கோலியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

    வெளியில் இருந்த அவர் உடனடியாக தனது இருக்கையை விட்டு எழுந்து ஆட்சேபனையை தெரிவித்தார். எது எப்படியோ அவர் மைதானத்திற்குள் வரவில்லை.

    விராட் கோலி


    ஆட்டம் முடிந்ததும் ரன்-அவுட் சர்ச்சை குறித்து பேசிய கோலி, ‘பீல்டர் கேட்கும் போது, நடுவர் நாட்-அவுட் என்கிறார். அத்துடன் அது முடிந்து விட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு டி.வி. ரீப்ளேயில் பார்த்து விட்டு அப்பீல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மைதானத்துக்கு வெளியே டெலிவி‌ஷனில் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் நடுவரின் முடிவில் எப்படி தலையிட முடியும். கிரிக்கெட்டில் இது போன்று நிகழ்ந்ததை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை’ என்றார்.
    சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியடைந்ததையடுத்து விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் வீரரை பாராட்டி உள்ளார்.
    சென்னை:

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது.

    ரி‌ஷப்பண்ட் 69 பந்தில் 71 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிரேயாஸ் அய்யர் 88 பந்தில் 70 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேதர்ஜாதவ் 35 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    கோட்ரெல் கீமோபவுல், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட்டும், போல்லார்ட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    288 ரன் என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி பின்னர் விளையாடியது.

    அந்த அணி இந்த இலக்கை 13 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. வெஸ்ட்இண்டீஸ் 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஹெட்மயர், ‌ஷகி ஹோப் ஆகியோர் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். ஹெட்மயர் 106 பந்தில் 139 ரன்னும் (11 பவுண்டரி, 7 சிக்சர்), ஹோப் 151 பந்தில் 102 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். தீபக் சாஹர், முகமது‌ஷமி தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    நானும், ரோகித்சர்மாவும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இரண்டு இளம் வீரர்களுக்கு (ரி‌ஷப்பண்ட், ஷிரேயாஸ் அய்யர்) நல்ல வாய்ப்பு கிடைத்தது. மெதுவான இந்த ஆடுகளத்தில் இருவரும் சிறப்பாக ஆடினார்கள்.

    மெதுவான பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தது. கேதர்ஜாதவ் பந்து வீசினார். ஆனால் மின்னொளியில் விளையாடுவது என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

    என்னை பொறுத்தவரை வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் உண்மையிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹெட்மயர் பிரமாதமாக ஆடினார். ஹோப்பும் நன்றாக விளையாடினார்.

    ஹெட்மயர் - ஹோப்


    ஆனால் வேகப்பந்து வீரர்கள் சிரமப்பட்டார்கள். பந்தை பிடித்து நேர்த்தியாக வீச திணறினார்கள். இது ஒரு கடுமையான மாற்றம் இல்லை. ஆனால் சிறிய அளவில் மாற்றம் இருந்தது. ஒட்டு மொத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எங்களை விட நன்றாக ஆடினார்கள்.

    இவ்வாறு கோலி கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் ஆட்டம் வருகிற 18-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
    சென்னை சேப்பாக்கம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெட்மையர் அதிரடி சதத்தால் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரிஷப் பந்த் (71), ஷ்ரேயாஸ் அய்யர் (70), கேதர் ஜாதவ் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுனில் அம்ப்ரிஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஷாய் ஹோப் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷாய் ஹோப் ஒரு பக்கம் நிதானமாக விளையாட மறுபக்கம் ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஹெட்மையர் 50 பந்திலும், ஷாய் ஹோப் 92 பந்திலும் அரைசதம் அடித்தனர். 50 பந்தில் அரைசதம் அடித்த ஹெட்மையர் 85 பந்தில் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹெட்மையரின் 5-வது சதம் இதுவாகும்.

    சதம் அடித்த ஹெட்மையர், 106 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷாய் ஹோப் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். 47-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி அடித்து 8-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

    ஹெட்மையர், ஷாய் ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 47.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் 102 ரன்னுடனும், பூரன் 29 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    இலங்கைக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அபித் அலி உலக சாதனை படைத்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அபித் அலி. 32 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    அதன்பின் ராவல்பிண்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். டிராவில் முடிந்த இந்த டெஸ்டின் கடைசி நாளான இன்று அபித் அலி சதம் அடித்தார்.

    இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் போட்டியிலும், டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் போட்டியிலும் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் அபாரமாக பந்து வீச நியூசிலாந்தை 296 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
    • ஆஸி. முதல் இன்னிங்சில் 416 ரன்கள், டிம் சவுத்தி, வாக்னர் 4 விக்கெட்
    • நியூ. முதல் இன்னிங்சில் 166-ல் சுருண்டது. ஸ்டார்க் 5 விக்கெட்
    • ஆஸி. 2-வது இன்னிங்சில் 217-9 டிக்ளேர். நியூசிலாந்து 171-ல் சுருண்டது. ஸ்டார்க் 4 விக்கெட்
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு பிங்க் பால் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் லாபஸ்சாக்னேயின் (143) சூப்பரான சதத்தால் 416 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 56 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ராஸ் டெய்லரை (80) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து 166 ரன்னில் சுருண்டது.

    250 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த லாபஸ்சாக்னேவும் (50), தொடக்க வீரர் ஜோ பேர்ன்ஸும் (53) அரைசதம் அடிக்க ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், வாக்னர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 467 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    468 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    ஜீத் ராவல் 1 ரன்னிலும், டாம் லாதம் 18 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 14 ரன்னிலும், ராஸ் டெய்லர் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் வாட்லிங் மட்டும் தாக்குப்பிடித்து 40 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நியூசிலாந்து 171 ரன்னில் சுருண்டது.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

    இதனால் ஆஸ்திரேலியா 196 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்டார்க், நாதன் லயன் தலா நான்கு விக்கெட்டுக்களும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 9 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
    ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம் அடிக்க வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிவம் டுபே அறிமுகம் ஆனார்.

    கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லோகேஷ் ராகுல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    இதனால் இந்தியா 7 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கையுடன் பந்தை எதிர்கொண்டார். அதேவேளையில் ரோகித் சர்மாவால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

    இருவரும் நிதானமாக விளையாட இந்தியாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. ஆனால் 19-வது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 36 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 56 பந்தில் 6 பவுண்டரியுடன் அந்த ரன்னை எடுத்தார்.

    அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர்.

    அரைசதம் அடித்த பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் எளிதாக 300 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஷ்ரேயாஸ் அய்யர்

    அப்போது இந்தியாவின் ஸ்கோர் 36.4 ஓவரில் 194 ரன்கள் எடுத்திருக்கும்போது ஷ்ரேயாஸ் அய்யர் 88 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 39.4 ஓவரில் 210 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஷப் பந்த் 69 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 71 ரன்கள் சேர்த்தார்.

    கேதர் ஜாதவ் 35 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஷிவம் டுபே அதிரடி ஆட முயன்றார். அவர் 9 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.

    பின்னர் 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்கிறது.
    மழையால் மூன்று நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், கடைசி நாளில் பாபர் அசாம், அபித் அலி சதம் அடித்தனர்.
    பாகிஸ்தான் மண்ணில் 10 வருடத்திற்குப் பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழைக்காரணமாக முதல் நாளில் 68.1 ஓவர்கள் வீசப்பட்டன. இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் 18.2 ஓவர்களே வீசப்பட்டது.

    3-வது நாள் 5.2 ஓவர்களே வீசப்பட்டது. இதனால் போட்டி டிரா என்பது உறுதியானது. இன்று கடைசி நாள் மழை இல்லாததால் ஆட்டம் தொடர்ந்தது. தனஞ்ஜெயா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    அதன்பின் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷான் மசூத் ரன்ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். அடுத்து வந்த வந்த கேப்டன் அசார் அலி 36 ரன்கள் சேர்த்தார்.

    அப்போது பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு அபித் அலியுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இருவரும் சதம் அடித்தனர். அபித் அலி 109 ரன்களுடனும், பாபர் அசாம் 102 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக் கொள்வதாக இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    10 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்டின் மூன்று நாட்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்ததால் பாகிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் 19-ந்தேதி தொடங்குகிறது.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4-வது இடத்தில் களம் இறங்க இவர் சரியான நபர் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடுவதற்கு இன்னும் நிரந்தரமான பேட்ஸ்மேன் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப பேட்ஸ்மேன்களை களம் இறக்கி வருகிறது.

    இந்நிலையில்தான் உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்த போது ஷ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்தில் களம் இறங்கினார். விராட் கோலியுடன் இணைந்து இரண்டு போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஷ்ரேயாஸ் அய்யர்தான் 4-வது இடத்திற்கு சரியான நபர் என்றார்.

    இந்நிலையில் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் அந்த இடம் எனக்குதான் என்று சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘தற்போது ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது, 4-வது இடத்திற்கு நான் இல்லை என்று ஷ்ரேயாஸ் அய்யர் சொன்னால், எனக்கு அது மிகமிக ஆச்சர்யமானதாக இருக்கும்.

    அவருக்கு 25 வயதுதான் ஆகிறது. ஆனால், ஏராளமான முதல்-தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். 4-வது இடத்தில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அவர் உணர்ந்திருப்பார். இதுதான் முக்கியமான விஷயம்’’ என்றார்.
    சீனாவில் நடைபெற்ற உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் தொடரில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டா சாம்பியன் பட்டம் வென்றார்.
    டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த கென்டோ மொமோட்டா இந்தோனேசியாவைச் சேர்ந்த இளம் வீரரான அந்தோணி சினிசுகாவை எதிர்கொண்டார். நம்பர் ஒன் வீரரான கென்டோ மொமோட்டாவிற்கு அந்தோணி சினிசுகா கடும் சவாலாக விளங்கினார்.

    இதனால் முதல் செட்டை அந்தோணி 21-17 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் மொமோட்டா சிறப்பாக விளையாடி அதை 21-17 தன்வசமாக்கினார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் அந்தோணி முன்னிலை பெற்றிருந்தாலும், அதன்பின் கோட்டை விட்டதால் கென்டோ மொமோட்டா 21-14 எனக்கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

    3-வது செட்டில் மொமோட்டா ஒரு கட்டத்தில் 5-12 என பின்தங்கியிருந்தார். அதன்பின் சிறப்பாக விளையாடி புள்ளிகளை பெற்றார். 17-14 என முன்னிலைப் பெற்றிருந்தபோது, அந்தோணி காயம் அடைந்தார். அதன்பின் 21-14 என மொமோட்டா வெற்றி பெற்றார்.
    ×