என் மலர்
விளையாட்டு
இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. பெண்கள் கனவு லெவன் அணியில் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
துபாய்:
இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் எல்சி பெர்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் 441 ரன்னும், 21 விக்கெட்டும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 3 சதம் அடித்துள்ளார்.
அத்துடன் 20 ஓவர் போட்டியில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி சிறந்த 20 ஓவர் வீராங்கனை விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். அவர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 148 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தார். தாய்லாந்து வீராங்கனை சனிதா சுதிருயாங் வளர்ந்து வரும் வீராங்கனை விருதை பெறுகிறார்.
இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. கனவு லெவன் அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான அணியில் இந்திய வீராங்கனைகள் மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் ஆகியோரும், 20 ஓவர் போட்டிக்கான அணியில் இந்திய வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் போது இனவெறியை குறிக்கும் வகையில் திட்டியதாக நடுவர் மீது புகார் வந்ததையடுத்து இந்திய கால்பந்து சம்மேளனம் விசாரணை நடத்தி வருகிறது.
புதுடெல்லி:
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியின் போது மும்பை சிட்டி அணியின் நடுகள வீரர் செர்ஜி கெவினை (காபோன்) நடுவர் துர்கி முகமது அல்குதார் (சவுதி அரேபியா) இனவெறியை குறிக்கும் வகையில் குரங்கு என்று திட்டியதாக மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா புகார் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இனவெறியை குறிப்பிடும் செயல்கள் எதுவும் போட்டியில் இருக்கக்கூடாது என்ற கொள்கையை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது.
மும்பை அணியின் பயிற்சியாளர் அளித்த புகார் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் தவறு நடந்து இருந்தது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.
கவுகாத்தி:
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன. முதலில் இந்த போட்டி ரசிகர்களுக்கு அனுமதியின்றி பூட்டிய ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் தற்போது இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கமாக இரவு 7.30 மணிக்கும் தொடங்கும் இந்த போட்டி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருவதால் இந்த போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. முந்தைய தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
விசாகப்பட்டினம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 287 ரன்கள் சேர்த்த போதிலும் அதை கொண்டு எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹெட்மயரும், ஷாய் ஹோப்பும் சதம் அடித்து தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இந்திய அணியில் கேப்டன் கோலி 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதே போல் துணை கேப்டன் ரோகித் சர்மாவின் மந்தமான பேட்டிங்கும் (56 பந்தில் 36 ரன்) ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போடுவது போல் அமைந்தது. சென்னை ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் தலா 10 ஓவர்கள் பந்து வீசிய போதிலும் ஒரு விக்கெட்டும் எடுக்காதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அறிமுக வீரர் ஷிவம் துபே 7.5 ஓவர்களில் 68 ரன்களை வாரி வழங்கினார்.
விசாகப்பட்டினம், பொதுவாக பேட்டிங்குக்கு உகந்த மைதானம் ஆகும். இங்கு 300 ரன்களுக்கு மேல் குவித்தால் தான் சவாலான ஸ்கோராக இருக்கும். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து ஆடுவது அவசியமாகும். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் வரிசையில் அரைசதம் அடித்தனர். அவர்கள் பார்முக்கு வந்திருப்பது அணிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகும்.
இது இந்தியாவுக்கு வாழ்வா- சாவா? ஆட்டமாகும். இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் இந்தியா தோல்வி கண்டால் சில பெருமைகளை இழக்க வேண்டி இருக்கும். இந்திய மண்ணில் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களை வென்று கடைசி 3 ஆட்டங்களில் தோற்று தொடரை பறிகொடுத்தது.
விசாகப்பட்டினத்திலும் இந்தியா சறுக்கினால், கடந்த 15 ஆண்டுகளில் உள்ளூரில் தொடர்ச்சியாக 2 ஒரு நாள் தொடர்களை இழந்த முதல் நிகழ்வாக இருக்கும். மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 5 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி இதற்கு முன்பு தோற்றதில்லை. அந்த மோசமான சாதனையும் ஒட்டிக் கொள்ளும்.
பொல்லார்ட் தலையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியினர் தொடக்க ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைப்பார்கள். சென்னை ஆட்டத்தில் ஹெட்மயரும், ஷாய் ஹோப்பும் 2-வது விக்கெட்டுக்கு திரட்டிய 210 ரன்களே இலக்கை விரட்டும் போது வெஸ்ட் இண்டீசின் சிறந்த பார்ட்னர்ஷிப்பாகும். சூழ்நிலைக்கு தக்கபடி இருவரும் பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதே போல் பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் காட்ரெல், அல்ஜாரி ஜோசப் மிரட்டினர்.

இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் விராட் கோலி (1,292 ரன்), ரோகித் சர்மா (1,268 ரன்), வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் (1,225 ரன்) உள்ளனர். தொடரின் முடிவில் இவர்களில் யார் ‘நம்பர் ஒன்’ ஆகப்போகிறார்கள் என்பது சுவாரஸ்யமான அம்சமாகும்.
விசாகப்பட்டினத்தில் இதுவரை 8 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 6-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டம் சமன் (டை) ஆனது. இதில் 5 ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 356 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். கடந்த ஆண்டு இங்கு இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய பரபரப்பான ஆட்டம் சமனில் (இரு அணியும் தலா 321 ரன்கள் எடுத்தன) முடிந்தது நினைவிருக்கலாம். இந்த மைதானம் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மிகவும் ராசியானதாகும். இங்கு இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களில் 3 சதம், 2 அரைசதம் அடித்திருக்கிறார்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா அல்லது யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது ஷமி.
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் அல்லது இவின் லீவிஸ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கீமோ பால், ஹேடன் வால்ஷ், அல்ஜாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஆகஸ்டு மாதம் வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடாத பும்ரா இங்கிலாந்துக்கு சென்று சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்றார். ஆபரேஷன் தேவைப்படவில்லை என்ற போதிலும் காயத்தன்மை பெரியதாகி சிக்கலாகி விடக்கூடாது என்பதால் அவர் விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் கவனமுடன் கையாள்கிறது.
இந்த நிலையில் காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு விட்ட பும்ரா நேற்று விசாகப்பட்டினத்தில் இந்திய வீரர்களுடன் இணைந்து உற்சாகமாக வலை பயிற்சியில் ஈடுபட்டார். சக வீரர்களான ரிஷப் பண்ட், மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே உள்ளிட்டோருக்கு அவர் பந்து வீசினார். அவரது பந்து வீச்சில் அகர்வால், பண்ட் தடுமாறியதை பார்க்க முடிந்தது. பும்ராவின் பந்து வீச்சை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தேர்வாளர் தேவங் காந்தி ஆகியோர் உன்னிப்பாக கண்காணித்தனர். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பும்ரா அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் வரிந்து கட்டி நிற்பார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை நடக்கிறது. ஜி.பெரியசாமி, சாய் கிஷோர் உள்பட தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் இந்த ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
கொல்கத்தா:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 332 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து 73 வீரர்கள் ஏலம் மூலம் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.85 கோடியை ஏலத்தில் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே தக்க வைத்துள்ள வீரர்களுக்கான ஊதியத்தை கழித்து மீதமுள்ள தொகையைத் தான் ஏலத்தில் பயன்படுத்த முடியும். உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 20 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஒட்டுமொத்த சம்பளத் தொகை ரூ.70.40 கோடி போக மீதமுள்ள ரூ.14.60 கோடியை கொண்டு தங்களது அணிக்கு தேவையாக உள்ள எஞ்சிய 5 வீரர்களை எடுக்க முடியும்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் அடிப்படை விலை ரூ.50 லட்சம், ரூ.75 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1½ கோடி, ரூ.2 கோடி ஆகும். இதில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இலங்கையின் மேத்யூஸ் ஆகிய 7 வீரர்களின் தொடக்க விலை அதிகபட்சமாக ரூ.2 கோடியாகும். இவர்களின் விலை ரூ.2 கோடியில் இருந்து ஆரம்பிக்கும்.
சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் என்று அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்கள் ஆவர். இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் சேலத்தை சேர்ந்த ஜி.பெரியசாமி கவனத்தை ஈர்த்துள்ளார். 26 வயதான பெரியசாமி மலிங்கா சாயலில் யார்க்கர் வீசுவதில் கில்லாடி. இந்த ஆண்டு நடந்த டி.என்.பி.எல். தொடரில் 9 ஆட்டத்தில் 21 விக்கெட்டுகளை சாய்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். இவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம் ஆகும்.
இதே போல் கடந்த முறை ரூ.8.4 கோடிக்கு விலை போன சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர், சித்தார்த், மணிகண்டன், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், முகமது, எம்.அபினவ், ஷாருக் கான் ஆகிய தமிழக வீரர்களும் இறுதிக்கட்ட ஏலப்பட்டியலில் உள்ளனர்.
ஏலம் விடுவதில் பிரபலமான இங்கிலாந்தை சேர்ந்த ஹக் எட்மீட்ஸ் ஐ.பி.எல். ஏலத்தை நடத்துகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 2வது சுற்றில் இமாசல பிரதேசம் அணியை முதல் இன்னிங்சில் 158 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு அணி.
திண்டுக்கல்:
ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - இமாசல பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இமாசல பிரதேசம் அணி முதலில் களமிறங்கியது. தமிழ்நாடு அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இமாசல் அணி வீரர்களை வெளியேற்றினர்.
இதனால், இமாசல பிரதேசம் அணி 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து இறங்கிய ஆகாஷ் வசிஷ்ட் மற்றும் மயங்க் தகார் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதனால் அந்த அணி 130 ரன்களை கடந்தது.
இறுதியில் இமாசல பிரதேசம் அணி 71.4 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆகாஷ் வசிஷ்ட் 35 ரன்களும், மயங்க் தகார் 33 ரன்களும், சுமித் வர்மா 30 ரன்களும் எடுத்தனர்.
தமிழ்நாடு சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தமிழ்நாடு அணி களமிறங்கியது. முதல் நாள் முடிவில் தமிழக அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
புதுடெல்லி:
ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இந்த பட்டியலில் 928 புள்ளிகள் பெற்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில் 4-வது இடத்தில் புஜாரா, 6-வது இடத்தில் ரஹானே ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இந்தியா சார்பில் பும்ரா 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆல் ரவுண்டர்களை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஷ்வின் 6-வது இடத்திலும் உள்ளனர்.
அணிகளை பொறுத்தவரை 120 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.
பிளாக் ஷீப் குழுவினர் தயாரிக்கும் வலைத் தொடரில் ஐடி ஊழியர்களுக்கு திருக்குறள் சொல்லும் திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் நடிக்க இருக்கிறார்.
தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
பிளாக் ஷீப் குழு புதிதாக 6 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், தொலைக்காட்சி புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.
அறிவிப்புகளில் ஒன்று, சிஎஸ்கே அணியில் சுழர்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்கும் வலைத் தொடர் ஒன்றை DUDE விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது. இந்த வலைத்தொடரின் 10 பகுதிகளை கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2, 2020 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. தற்போதுள்ள இளைய தலைமுறைகள், குறிப்பாக ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை திருக்குறள் வாயிலாக ஹர்பஜன் சிங், அவரது ஸ்டைலில் சொல்ல இருக்கிறார். இந்த வலைத் தொடருக்கு திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அதுபோல், ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சிதான் ஆண் பாவம். இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் கதாநாயகனான டாக்டர் சேதுராமன் நடிப்பில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தன் முத்திரியை பதித்த கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. 12 பகுதிகளை கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.
இதைத்தவிர, பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள், பிளாக் ஷீப் வேல்யூ, பிளாக் ஷீப் F3 (FACES FOR THE FUTURE), பிளாக் ஷீப் ரீவேம்ப் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பையில் விளையாடிய 7 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மெல்போர்ன்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது. வருகிற 22-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.
இதன்பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் ஆட்டம் ஜனவரி 14-ந் தேதி மும்பையிலும், 2-வது போட்டி 17-ந் தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 19-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது.

மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஷான்மார்ஷ், நாதன் ஹோல்டர் நைல், ஸ்டோனிஸ், நாதன் லயன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக பெஹரன் டார்ப் இடம் பெறவில்லை.
டெஸ்ட் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் மார்னஸ் லபுஸ்சேன் ஒருநாள் போட்டிக்கான அணியில் அறிமுகமாகி உள்ளார். அவரது டெஸ்ட் சராசரி 58.05 ஆகும்.
ஆல் ரவுண்டர் அபோட், ஆஸ்டன் அகர் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் வருமாறு:-
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் சுமித், ஆஸ்டன் டர்னர், கானே ரிச்சர்ட்சன், அலெக்ஸ் கேரி, அபோட், ஆஸ்டன் அகர், கம்மின்ஸ், ஹேண்ஸ்ஹோம், ஹாசில்வுட், ஸ்டார்க், ஆடம் சம்பா.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
விசாகப்பட்டினம்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டி தொடரில் சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (18-ந் தேதி) நடக்கிறது.
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் ஆர்வத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது.
மேலும் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் உள்ளது. தோல்வி அடைந்தால் ஒருநாள் தொடரை இழந்து விடும்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 9 ஒருநாள் தொடரையும் கைப்பற்றியிருந்தது. தொடர்ச்சியாக 10-வது தொடரை வெல்ல வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும்.
பேட்டிங்கில் பலத்துடன் திகழும் இந்திய அணி பந்து வீச்சில் பலவீனமாக இருக்கிறது. சேப்பாக்கத்தில் 287 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது பரிதாபமே.
இதனால் விசாகப்பட்டினம் போட்டியில் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பந்துவீச்சிலும் மாற்றம் செய்யப்படலாம்.
முதல் ஆட்டத்தில் ‘டாப் 3’ பேட்ஸ்மேன்களான ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. இளம் வீரர்களான ரிஷப்பண்ட், ஷிரேயாஸ் அய்யர் பொறுப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
‘டாப் 3’ பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடினால் மட்டுமே மிகப்பெரிய ஸ்கோரை எட்ட இயலும். இதனால் அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.
பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை மீண்டும் வீழ்த்தி தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. கடைசியாக 2006-ம் ஆண்டு தனது நாட்டில் 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக 9 தொடர்களை இழந்திருந்தது. இதற்கு நாளை ஆட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கில் ஹெட்மயர், ஹோப், ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன், கேப்டன் பொல்லார்ட் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹோட்ரெல், கீமோ பவுல், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் முத்திரை பதிக்கக் கூடியவர்கள்.
இரு அணிகளும் வெற்றிபெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 132-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 131 போட்டியில் இந்தியா 62-ல், வெஸ்ட் இண்டீஸ் 63-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 4 போட்டி முடிவில்லை.
நாளைய ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

போராட்டங்கள் நடந்து வந்தாலும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிடப்படி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு நடைபெறும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 73 இடங்களுக்கான இந்த ஏலத்தில் 332 வீரர்கள் இறுதிபட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா) உள்பட 143 வெளிநாட்டு வீரர்களும் இந்த பட்டியலில் அடங்குவார்கள். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
போராட்டங்கள் நடந்து வந்தாலும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிடப்படி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘ஒவ்வொரு நாளும் எனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண விரும்புகிறேன்’ என்று ரிஷப் பண்ட் தெரிவித்தார்.
சென்னை:
சென்னையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் அரைசதம் அடித்த இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (71 ரன்கள்) போட்டிக்கு பிறகு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உள்ளூர் போட்டிகளை போல் சர்வதேச போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பதை சில சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவத்தின் மூலம் உணர்ந்து இருக்கிறேன். சர்வதேச போட்டியை பொறுத்தமட்டில் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரியும், அணியின் தேவை என்ன? என்பதற்கு தகுந்த மாதிரியும் தான் விளையாட வேண்டும். இது நான் கற்றுக்கொள்ளும் காலமாகும். எனது ஆட்டம் அணிக்கு உதவும் வகையிலும், நல்ல ரன்கள் குவிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன்.
இந்த போட்டியில் ஓரளவு ரன் எடுத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்தில் முழு கவனம் செலுத்தவே விரும்புகிறேன். என்னை பற்றி அதிகம் பேசப்படுகிறது. அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் உள்ளது. நான் ரன் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் எனது திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்து இருக்கிறேன். இந்திய அணிக்காக விளையாடுகையில் எல்லா இன்னிங்சும் எனக்கு முக்கியமானதாகும். இளம் வீரரான நான் ஒவ்வொரு நாளும் எனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்று விரும்புகிறேன்.
சில சமயங்களில் ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு முக்கியமானதாகும். நானும், ஸ்ரேயாஸ் அய்யரும் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு தான் செயல்பட்டோம். அது நமது அணியின் ரன்னை உயர்த்த உதவியது. பும்ரா சிறந்த பவுலர் என்பது எல்லோருக்கும் தெரியும். காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை. மற்ற பவுலர்களும் மோசமாக செயல்படவில்லை. இளம் பவுலர்கள் பாடம் கற்று வருகிறார்கள். நான் பயிற்சியில் ஈடுபடும்போது தான் கிரிக்கெட் குறித்து சிந்திப்பேன். மற்ற நேரங்களில் கிரிக்கெட் குறித்து அதிகம் சிந்திக்க மாட்டேன். அமைதியாக செயல்படுவதுடன், ஆட்ட திறனையும், உடல் தகுதியையும் மேம்படுத்தும் படி அணி நிர்வாகம் எனக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி நான் செயல்பட்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஹெட்மயர் அளித்த பேட்டியில், ‘சர்வதேச போட்டியில் எனது அதிகபட்ச ரன் (139) இதுவாகும். எனது இந்த இன்னிங்ஸ் எனக்கு சிறப்பானதாகும். இலக்கை நிர்ணயிப்பதை விட இலக்கை விரட்டி பிடிப்பது எப்பொழுதும் சிறப்பானதாகும். சேசிங்கில் அணியை வெற்றி பெற வைப்பது அதிக சுகமானதாகும். கடைசி வரை நின்று ஆட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனது வருத்தம் தான். அதனை செய்ய நான் முயற்சித்து வருகிறேன். ஷாய் ஹோப்புக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு. எனவே அவருடன் இணைந்து பேட்டிங் செய்தது நான் ஆக்ரோஷமாக செயல்பட உதவிகரமாக இருந்தது.
எனது பேட்டிங்கை அனுபவித்து விளையாடி வருகிறேன். சில சமயங்களில் ரன்கள் குவிக்க முடியும். சில நேரங்களில் ரன் வராது. கடந்த சீசனில் நான் ஐ.பி.எல். போட்டியில் சரியாக ரன் எடுக்கவில்லை. அதேநேரத்தில் அந்த அனுபவம் வலுவான நிலைக்கு திரும்ப வழிவகுப்பதாக இருந்தது. கரீபியன் லீக் போட்டியில் சீனியர் வீரர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம் சிறப்பாக விளையாட தூண்டுதலாக இருந்தது. பொல்லார்ட் போன்ற சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவது சிறப்பானதாகும்’ என்று தெரிவித்தார்.