என் மலர்
விளையாட்டு
கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 என்ற கணக்கில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது.
கவுகாத்தி:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என சமனிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் பெங்களுரு அணியின் சுனில் சேத்ரி 68வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து, ஆல்பர்ட் சேரன் 80வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், பெங்களூரு அணி 2-0 என நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் பெங்களூரு அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
ரோகித், ராகுல் சதமடிக்க, குல்தீப் யாதவ் ஹாட்ரிக் எடுத்து அசத்த வெஸ்ட் இண்டீசை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை சமன் செய்தது இந்தியா அணி.
விசாகப்பட்டினம்:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இருவரும் ஒன்று, இரண்டு என ரன்களை எடுத்தனர். கிடைத்த பந்துகளில் சிக்சர், பவுண்டரிகளை அடிக்க தவறவில்லை. இருவரும் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு ராகுல், ரோகித் சர்மா ஜோடி 227 ரன்கள் எடுத்தது. ராகுல் 102 ரன்னில் அவுட்டானார். கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ரோகித் சர்மா 138 பந்துகளில் 5 சிக்சர், 17 பவுண்டரி என 159 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்தார். அவர் 53 ரன்னும், ரிஷப் பந்த் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 388 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்து அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 75 ரன்னில் வெளியேறினார். இறுதியில், கீமோ பால் போராடி 46 ரன் எடுத்து அவுட்டானார்.
ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் 280 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். மொகமது ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.
இரு அணிகளில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் பதவியை ஏற்க அதிகமான வீரர்கள் இல்லை. ஷுப்மான் கில்லை நியமிக்க வேண்டும் என காம்பிர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணி 2012 மற்றும் 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு முறையும் கவுதம் காம்பிர்தான் கேப்டனாக இருந்தார்.
கடந்த முறை காம்பிர் டெல்லி அணிக்குச் சென்றார். இதனால் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2019 சீசனில் சக வீரர்களை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போட்டியின் போதே மோதல் ஏற்பட்டது வெளிப்படையாக தெரியவந்தது.
இந்நிலையில் இளம் வீரரான ஷுப்மான் கில்லை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் பதவிக்கு அதிகப்படியான வீரர்கள் இல்லை. நான் ஷுப்மான் கில்லுக்கு ஆதரவாக இருப்பேன். என்னுடைய ஆதரவு இளைஞருக்குதான்.
தினேஷ் கார்த்திக் இன்னும் இரண்டு வருடங்கள் விளையாடலாம். எதிர்பார்த்த அளவிற்கு அவர் சிறப்பாக விளையாடவில்லை. ஷுப்மான் கில்லுடன் புதிய முகத்துடன் செல்ல வேண்டும். அவரால் புதிய திட்டங்கள் மூலம் நல்ல முடிவுகளை கொடுக்க முடியும்’’ என்றார்.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 2வது சுற்றில் தமிழ்நாடு அணியை முதல் இன்னிங்சில் 96 ரன்னில் சுருட்டிய இமாசல பிரதேசம், 2ம் நாள் ஆட்ட முடிவில் 195 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
திண்டுக்கல்:
ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் இரண்டாவது சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - இமாசல பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இமாசல பிரதேசம் அணி முதலில் களமிறங்கியது. சிறப்பாக பந்து வீசிய தமிழ்நாடு அணி இமாசல் அணி வீரர்களை வெளியேற்றினர். இமாசல பிரதேசம் அணியின் ஆகாஷ் வசிஷ்ட் மற்றும் மயங்க் தகார் ஓரளவு தாக்குப்பிடித்தனர்.
இறுதியில் இமாசல பிரதேசம் அணி 71.4 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆகாஷ் வசிஷ்ட் 35 ரன்களும், மயங்க் தகார் 33 ரன்களும், சுமித் வர்மா 30 ரன்களும் எடுத்தனர்.
தமிழ்நாடு சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தமிழ்நாடு அணி களமிறங்கியது. இரண்டாவது நாளில் இமாசல் அணியினர் துல்லியமாக பந்து வீசினர். இதனால் தமிழ்நாடு அணி 39 ஓவரில் 96 ரன்னில் சுருண்டது.
இமாசல் அணி சார்பில் வைபவ் அரோரா 3 விக்கெட், மயங்க தகார், ரிஷி தவான் மற்றும் ஆகாஷ் வசிஷ்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 62 ரன்கள் முன்னிலையுடன் இமாசல பிரதேசம் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இரண்டாவது இன்னிங்சிலும் இமாசல் வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இதனால், இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இமாசல பிரதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அணியை விட 195 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.
தமிழ்நாடு அணி சார்பில் நடராஜன், அஷ்வின் மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ரோகித் சர்மா, கேஎல் ராகுலின் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 388 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.
விசாகப்பட்டினம்:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினர்.
ஆரம்பத்தில் இருந்தே இருவரும் ஒன்று, இரண்டு என ரன்களை எடுத்தனர். கிடைத்த பந்துகளில் சிக்சர், பவுண்டரிகளை அடிக்க தவறவில்லை.
இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினர். இந்திய அணி 24 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா சதமடித்தார்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். அவர் 102 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு ராகுல், ரோகித் சர்மா ஜோடி 227 ரன்கள் எடுத்தது.
அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து ஷ்ரேயஸ் அய்யர் களமிறங்கினார்.
சதம் கடந்த ரோகித் அதிரடியாக ஆடினார். இதனால் 35 ஓவருக்கு பிறகு இந்திய அணியின் ரன்ரேட் 6 ஆக உயர்ந்தது. அவருக்கு அய்யர் ஓத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இணைந்து 60 ரன்கள் எடுத்தனர்.
ரோகித் சர்மா 138 பந்துகளில் 5 சிக்சர், 17 பவுண்டரி என 159 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் இறங்கினார். இருவரும் அடித்து ஆடினர். 45 ஓவர் முடிவில் இந்தியா 300 ரன்களை கடந்தது.
இறுதிக்கட்டத்தில் ரிஷப் பந்தும் ஷ்ரேயஸ் அய்யரும் அதிரடி காட்டினர். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ரிஷப் பந்த் 16 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரி என 39 ரன்களை எடுத்து அவுட்டானார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து 53 ரன்னில் வெளியேறினார்.
முடிவில், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை குவித்துள்ளது.
இதையடுத்து, 388 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதமடிக்க, இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது.
விசாகப்பட்டினம்:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இருவரும் ரன்களை ஒன்று, இரண்டு என ரன்களை எடுத்தனர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளையும் அடிக்க தவறவில்லை. இதனால், இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராகுல் 5-வது அரை சதமடித்து அசத்தினார். அவரை தொடர்ந்து, ரோகித் சர்மாவும் 43வது அரை சதமடித்தார்.
இந்திய அணி 24 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 74 ரன்னுடனும், ரோகித் சர்மா 62 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
விசாகப்பட்டினம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி விபரம்-
ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகுர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது ஷமி.
வெஸ்ட் இண்டீஸ் விபரம்:-
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், லீவிஸ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கீமோ பால், அல்ஜாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல், கரி பியர்

3 நாடுகள் பங்கேற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நாளை சுவீடனை எதிர்கொள்கிறது.
மும்பை:
இந்தியா, தாய்லாந்து, சுவீடன் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. கூடுதல் நேரத்தில் இந்திய வீராங்கனை கிறிட்டினா தேவி இந்த கோலை அடித்தார்.
இந்திய அணி நாளை இறுதிப்போட்டியில் சுவீடனை எதிர் கொள்கிறது. அந்த ஏற்கனவே 2 வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது.

கொல்கத்தாவில் நாளை ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள நிலையில் அதிக விலைக்கு ஏலம் போகும் வெளிநாட்டு வீரர் யார் என்று ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கபடுகிறது.
கொல்கத்தா:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நாளை (19-ந் தேதி) நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.
ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் மொத்தம் 332 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 186 இந்தியர்கள், வெளிநாட்டு வீரர்களில் 146 பேருக்கு பட்டியலில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில் இருந்தே 8 அணிகளும் 73 வீரர்களை ஏலத்தில் எடுக்கிறார்கள்.
ஐ.பி.எல். ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடம் இல்லை.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ்வெல், கிறிஸ் லின், மிச்சேல் மார்ஷ், கம்மின்ஸ், ஹாசில்வுட் மற்றும் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), மேத்யூஸ் (இலங்கை) ஆகிய 7 வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.
அதற்கு அடுத்தபடியாக ரூ.1½ கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியர்களில் ராபின் உத்தப்பா மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளார். அவர் கடந்த காலங்களில் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணி நிர்வாகம் அவரை கழற்றி விட்டதால் ஏலபட்டியலுக்கு வந்துள்ளார். மற்ற 9 பேரும் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள்.
ரூ.1 கோடி அடிப்படை விலைக்கு 3 இந்தியர்கள் உள்பட 23 வீரர்களும், ரூ.75 லட்சத்துக்கு 16 வீரர்களும், ரூ.50 லட்சத்துக்கு 9 இந்தியர்கள் உள்பட 78 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு ரூ.40 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலப்பட்டியலில் 11 தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் டி.என்.பி.எல். போட்டியில் ஆடியவர்கள்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விளையாடும் பெரியசாமி மற்றும் வருண் சக்கரவர்த்தி, சாய்கிஷோர், சித்தார்த், மணிகண்டன், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், முகமது, எம்.அபினவ், ஷாருக்கான் ஆகிய தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் இந்த ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு போவாரா? என்று ஆர்வமுடன் எதிர் பார்க்கப்படுகிறது. அவர் கடந்த காலங்களில் மும்பை, டெல்லி, பஞ்சாப் அணிகளில் விளையாடி இருக்கிறார்.
ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய அணிகள் மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல கிறிஸ்லின், கம்மின்ஸ், ஹோட்ரெல், அலெக்ஸ்கேரி, ஜெய்தேவ் உனட்கட், கிறிஸ்மோரிஸ், டாம் பேன்டன் ஆகியோர் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
கடந்த காலங்களில் பவன் நெகி, வருண் சக்கரவர்த்தி, பென் ஸ்டோக்ஸ், மில்ஸ், ஜடேஜா ஆகியோர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். போட்டியில் மோசமான நிலையில் இருப்பதால பெங்களூர் அணிக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விசாகப்பட்டினம்:
ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிக மோசமாக இருக்கிறது. அந்த அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை.
கடந்த 3 ஐ.பி.எல். போட்டியில் அந்த அணி 2 முறை கடைசி இடத்தை பிடித்தது. 2017-ல் 8-வது இடத்தையும், 2018-ல் 6-வது இடத்தையும், 2019-ல் 8-வது இடத்தையும் பிடித்து பிளேப் ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். அவர், கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் இருந்தும் அந்த அணியின் நிலை ஐ.பி.எல்.லில் பரிதாபமாக உள்ளது.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டு டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அணி நிர்வாகம் அதை நிராகரித்தது.
மேலும் அந்த அணிக்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்குமா? என்ற நிலையும் ஏற்பட்டது.
ஐ.பி.எல். ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி ரசிகர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியிட்டுள்ள வீடியோவில் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
அணியை கட்டமைப்பது பற்றி நாங்கள் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறோம். வலுவான அணியை உருவாக்கி 2020 ஐ.பி.எல். சீசனில் நன்றாக ஆடத்தேவையான அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்வோம்.
எனவே ரசிகர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு தேவை.
உங்களின் (ரசிகர்கள்) ஆதரவுதான் அணிக்கு விலை மதிப்பில்லாதது. ஆகவே நன்றியை தெரிவிக்கிறேன். நாளை நடைபெறும் ஏலத்தை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
இந்த ஏலம் அணிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். நிர்வாக குழுவில் உள்ள மைக் ஹெசன், சைமன் கேடிச் பிரமாதமாக பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியிட்ட நிலையில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்கிறது.
டோக்கியோ:
ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி போட்டிக்கான அட்டவணையை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று வெளியிட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பெறும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை (ஜூலை 25-ந் தேதி) சந்திக்கிறது. ஆஸ்திரேலியாவை ஜூலை 26-ந் தேதியும், ஸ்பெயினை ஜூலை 28-ந் தேதியும், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை ஜூலை 30-ந் தேதியும், போட்டியை நடத்தும் ஜப்பானை ஜூலை 31-ந் தேதியும் இந்திய அணி எதிர்கொள்கிறது. இதே போல் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் (ஜூலை 25-ந் தேதி) மோதுகிறது. அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் ஜெர்மனியை ஜூலை 27-ந் தேதியும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ஜூலை 29-ந் தேதியும், அயர்லாந்தை ஜூலை 31-ந் தேதியும், தென்ஆப்பிரிக்காவை ஆகஸ்டு 1-ந் தேதியும் சந்திக்கிறது.

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட உள்ள நிலையில் வங்காளதேச சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் லக்ஷயா சென் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
கோலாலம்பூர்:
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் சென் யூ பே ஒரு இடம் முன்னேறி முதல் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். உலக டூர் இறுதி சுற்றில் மகுடம் சூடியதன் மூலம் நம்பர் ஒன் அரியணை அவருக்கு கிடைத்துள்ளது.
சீன வீராங்கனை ஒருவர் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது 2015-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதுவரை முதலிடத்தில் இருந்த சீனதைபேயின் தாய் ஜூ யிங் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்தியாவின் பி.வி.சிந்து மாற்றமின்றி 6-வது இடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஒரு இடம் இறங்கி 12-வது இடம் வகிக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனான ஜப்பானின் கென்டோ மோமோட்டா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக சாய் பிரனீத் 11-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 12-வது இடத்திலும் உள்ளனர். வங்காளதேச சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் லக்ஷயா சென் 9 இடங்கள் உயர்ந்து தனது சிறந்த நிலையாக 32-வது இடத்தை பெற்றுள்ளார்.