என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் 2020 ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாசில்வுட்டை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.

    பல்வேறு அணிகள் போட்டி போட்டுக்கொண்டு வீரர்களை ஏலம் எடுத்துவருகின்றனர். சென்னை அணியை பொறுத்தவரை 1 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட இங்கிலாந்து வீரரான ஆல்-ரவுண்டர் சாம் கரனை 5.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இதையடுத்து பந்துவீச்சாளர்கள் ஏலத்தின் போது 1 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நெய்தன் குர்டர் நைலை ஏலம் எடுக்க சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. 

    ஆனால், இறுதியில் குர்டர் நைலை 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. 

    அதேபோல், 1 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவை ஏலம் எடுக்க பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

    இறுதியில், சென்னை அணி பியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இந்நிலையில், ஏலத்தின் முதல்பாதியில் இறுதிகட்டத்தில் 2 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாசில்வுட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதே 2 கோடி ரூபாய் விலையிலேயே ஏலம் எடுத்தது. 

    இதன் மூலம் சாம் கரன், பியூஸ் சாவ்லா, ஜோஷ் ஹாசில்வுட் ஆகிய மூன்று வீரர்களை சென்னை அணி வாங்கியுள்ளது. 

    இதன் மூலம் சென்னை அணியின் வீரர்கள் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. மேலும், சென்னை அணிக்கு இன்னும் 35 லட்ச ரூபாய் மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஐபிஎல் ஏலத்தில் 19 வயதிற்கு உட்பட்ட இளம் வீரர்களை கோடிக்கணக்கில் கொடுத்து அணிகள் ஏலம் எடுத்தன.
    ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அணிகள் வாங்கின.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் 19 வயதிற்கு உட்பட்ட இளம் வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டனர். இவர்களின் அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய்தான். ஆனால் கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டனர்.

    யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் ராயல்ஸ் 2.40 கொடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அதேபோல் அனுஜ் ராவத்திற்கு 80 லட்சம் ரூபாய் கொடுத்தது.
    பிரியம் கார்க்
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிரியம் கார்க்-ஐ 1.90 கோடி ரூபாய்க்கும், விராட் சிங்கை வயது (22) 1.90 கோடி ரூபாய்க்கும் வாங்கியது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரவி பிஷ்னோய்-ஐ 2 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது.
    ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரரும், சுழல்பந்து வீச்சாளருமான வருண் சக்ரவர்த்தியை கொல்கத்தா அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. 

    இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றுவருகிறது.

    ஏலம் தொடங்கியது முதலே பல்வேறு அணி உரிமையாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வீரர்களை தங்கள் வசப்படுத்த முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

    இந்நிலையில், 30 லட்ச ரூபாய் துவக்க விலையாக நிர்ணயிக்கப்பட்ட தமிழக வீரரும், சுழல்பந்து வீச்சாளருமான வருண் சக்ரவர்த்தியை கொல்கத்தா அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 

    கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது வருண் சக்ரவர்த்தியை 8.40 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கும், ஆல்-ரவுண்டர் சாம் கரனை 5.50 கோடி ரூபாய்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றுவருகிறது.

    ஏலம் தொடங்கியது முதலே பல்வேறு அணி உரிமையாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வீரர்களை தங்கள் வசப்படுத்த முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

    மற்ற அணிகள் வீரர்களை ஏலம் எடுக்க போட்டி போட்டுக்கொண்டிருந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதானமாக செயல்பட்டுவந்தது. 

    பின்னர் 1 கோடி ரூபாய் துவக்க விலையாக நிர்ணயிக்கப்பட்ட இங்கிலாந்து அணியியை சேர்ந்த ஆல்-ரவுண்டரான சாம் கரனை சென்னை அணி 5.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 

    சாம் கரன்

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நெய்தன் குர்டர் நைலை ஏலம் எடுக்க சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இறுதியில் குர்டர் நைலை 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.

    இதையடுத்து,  1 கோடி ரூபாய் துவக்க விலையாக நிர்ணயிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவை ஏலம் எடுக்க பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

     இறுதியில், சென்னை அணி பியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த இரு வீரர்களை ஏலம் எடுத்ததன் மூலம் சென்னை அணியின் ஏலம் எடுத்ததன் மூலம் 2.35 கோடி ரூபாய் மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலிய வீரர்கள் பேட் கம்மின்ஸ் 15.50 கோடி ரூபாய்க்கும், மேக்ஸ்வெல் 10.75 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. 

    இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றுவருகிறது.

    ஏலம் தொடங்கியது முதலே பல்வேறு அணி உரிமையாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வீரர்களை தங்கள் வசப்படுத்த முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

    இந்நிலையில், 2 கோடி ரூபாய் என்ற துவக்க தொகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மனான மேக்ஸ்வெல்லை 10.75 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. 

    அதேபோல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் 15.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர்.
    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இயான் மோர்கனை 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி.
    கொல்கத்தா:

    13-வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று மதியம் நடைபெற்றது.

    இதில், முதல் வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் லின்னை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    அடுத்ததாக, இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனை 5.25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

    இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது.

    கிறிஸ் லின்

    இந்திய வீரர்கள் புஜாரா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோரை ஏலத்தில் எடுக்கவில்லை.
    ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ரன் குவிப்பால் வெற்றி கிடைத்துள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 107 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஜோடியான ரோகித்சர்மா (159 ரன்), லோகேஷ் ராகுல் (102 ரன்) சதம் அடித்தனர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 227 ரன் எடுத்தனர். கேப்டன் கோலி டக்-அவுட் ஆனார். அதன் பின் ஸ்ரேயாஸ் அய்யர் (53 ரன் 32 பந்து), ரி‌ஷப்பண்ட் (39 ரன் 16 பந்து) ஆகியோரின் அதிரடியில் இந்திய அணி 50 ஓவர் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன் குவித்தது.

    கடினமான இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவருக்கு 280 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தொடக்கத்தில் ரன்கள் சேர்த்தது. ஆனால் முகமது சமி, குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்தது.

    இதில் குல்தீப் யாதவ் 2-வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய்ஹோப் 78 ரன்னும், நிகோலஸ் பூரன் 75 ரன்னும் எடுத்தனர்.

    ரோகித்சர்மா.

    நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. தவறவிட்ட கேட்சுகளை பிடித்து இருந்தால் வெஸ்ட் இண்டீசை இன்னும் குறைவான ரன்னில் ஆல்-அவுட் ஆக்கி இருக்கலாம்.

    வெற்றி குறித்து இந்திய கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

    கடந்த 3 ஆட்டங்களில் (மும்பையில் நடந்த கடைசி 20 ஓவர் போட்டியை சேர்த்து) நல்ல வி‌ஷயம் என்னவென்றால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நன்றாக விளையாடினோம் என்பதுதான். 2-வது பேட்டிங் செய்வது பிரச்சினையல்ல. சேசிங்கில் நாங்கள் சிறந்த அணிகளில் நன்றாக இருக்கிறோம். 40 முதல் 50 ரன்கள் கூடுதலாக எடுப்பது எப்போதுமே நல்லது.

    ரோகித்சர்மா-லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களது தொடக்க ஜோடி ரன் குவிப்பால் வெற்றி கிடைத்தது. ஸ்ரேயாஸ் அய்யர்- ரி‌ஷப்பண்ட் ஆட்டமும் அற்புதமாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ரன் குவித்ததால் நம்பிக்கை மேலும் அதிகரித்தது.

    தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய தொடர்கள் எதுவும் இல்லாததால் பயமின்றி விளையாடலாம். ஒரு கேப்டனாக டாசை தோற்றாலும், முதலில் பேட்டிங் செய்து ரன் குவித்த விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது நாங்கள் டாஸ் ஜெயிப்பதை நம்பியிருக்கவில்லை என்பதை காட்டுகிறது.

    பேட்டிங் மூலம் எதிரணியை போட்டியில் இருந்து வெளியேற்ற விரும்புகிறோம். பீல்டிங்கில் முன்னேற்றம் காண்பது அவசியம். கேட்ச்களை நாங்கள் தவறவிட கூடாது. பீல்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்றார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் அய்யர்- ரி‌ஷப் பண்ட் அதிரடியாக விளையாடினர். அவர்கள் 24 பந்தில் 73 ரன் குவித்தனர்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    சேஸ் வீசிய 47-வது ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 31 ரன் எடுக்கப்பட்டது. ஒரு ஓவரில் இந்தியா எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

    இதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக (1999-ம் ஆண்டு) தெண்டுல்கர்- அஜய் ஜடேஜா ஜோடி ஒரு ஓவரில் 28 ரன் எடுத்து இருந்தது. அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 32 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் சேர்த்தார்.

    ஷ்ரேயாஸ் அய்யர்

    இந்தியா 350 ரன் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிடில் ஆர்டர் வரிசையில் ஷ்ரேயாஸ்- ரி‌ஷப் பண்ட் அதிரடியால் 387 ரன் எடுத்தது. இந்திய வீரர்களில் அஜித் அகர்கர் 21 பந்தில் அரை சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை ரி‌ஷப் பண்ட் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அவர் 16 பந்தில் 39 ரன்னில் அவுட் ஆனார். காட்ரெல் வீசிய 46-வது ஓவரில் ரிஷப் பண்ட் 3 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 24 ரன்கள் அடித்தார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தொடக்க ஜோடியான ரோகித் சர்மா - லோகேஷ் ராகுல் 17 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2-வது ஒருநாள் போட்டியில் தொடக்க ஜோடியான ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் 37 ஓவரில் 227 ரன் குவித்தது. இதன் மூலம் முன்னாள் தொடக்க ஜோடியான சவுரவ் கங்குலி - சேவாக் ஆகியோரின் சாதனை முறியடிக்கப்பட்டது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2002-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் கங்குலி- சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 196 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 17 ஆண்டு கால சாதனையை ரோகித் சர்மா- லோகேஷ் ராகுல் ஜோடி முறியடித்தது.

    லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா

    ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 200 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 6-வது முறையாகும்.
    சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை குல்தீப் யாதவ் தன்வசப்படுத்தி உள்ளார்.
    இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டத்தின் 33-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக கபளீகரம் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். அந்த ஓவரின் 4-வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே கோலி சூப்பராக கேட்ச் செய்து சிலிர்க்க வைத்தார். 5-வது பந்தில் ஜாசன் ஹோல்டர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். 6-வது பந்தில் அல்ஜாரி ஜோசப், ‘ஸ்லிப்’ பகுதியில் நின்ற ஜாதவிடம் பிடிபட்டார்.

    25 வயதான குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதிலும் 33-வது ஓவரில் தான் ஹாட்ரிக் நிகழ்ந்தது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.

    இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை தன்வசப்படுத்தினார். ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக், இலங்கையின் மலிங்கா, சமிந்தா வாஸ், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் ஒன்றுக்கு மேற்பட்ட ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தவர்கள் ஆவர். இந்த அரிய பட்டியலில் குல்தீப் யாதவ் இணைந்துள்ளார். இதில் மலிங்கா மட்டும் 3 முறை ஹாட்ரிக் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியர்களில் குல்தீப் யாதவை தவிர்த்து சேத்தன் ஷர்மா, கபில்தேவ், முகமது ஷமி தலா ஒரு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருப்பது நினைவு கூரத்தக்கது. 
    ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இந்த ஆண்டில் 7 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சவுரவ் கங்குலி, டேவிட் வார்னர் ஆகியோரை சமன் செய்துள்ளார்.
    விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 17 பவுண்டரி, 5 சிக்சருடன் 159 ரன்கள் நொறுக்கி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதன் விவரம் வருமாறு:-

    * ரோகித் சர்மா இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 27 ஆட்டத்தில் விளையாடி 7 சதம் உள்பட 1,427 ரன்கள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் ஷாய் ஹோப்பும் (1,303 ரன்), 3-வது இடத்தில் விராட் கோலியும் (1,292 ரன்) உள்ளனர்.

    * ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இந்த ஆண்டில் 7 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சவுரவ் கங்குலி (2000-ம் ஆண்டில் 7 சதம்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (2016-ம் ஆண்டில் 7 சதம்) ஆகியோரை சமன் செய்துள்ளார். இந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் முதலிடம் வகிக்கிறார். அவர் 1998-ம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 சதங்களை சுவைத்திருந்தார்.

    * நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா எடுத்த 159 ரன்களே, இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டியில் இந்தியர் ஒருவரின் தனிநபர் அதிகபட்சமாகும். 2013-ம் ஆண்டில் இருந்து ரோகித் சர்மாவின் ஸ்கோரே இந்தியாவின் தனிநபர் அதிகபட்சமாக நீடிக்கிறது. 2013-ம் ஆண்டில் 209 ரன், 2014-ம் ஆண்டில் 264 ரன், 2015-ல் 150 ரன், 2016-ல் 171* ரன், 2017-ல் 208*ரன், 2018-ல் 162 ரன் என்றவாறு தனிநபர் அதிகபட்சத்தை பதிவு செய்துள்ளார்.

    * ஒரு போட்டியில் அதிக முறை 150 ரன்களை கடந்தவர்களில் ரோகித் சர்மா முதலிடத்தில் (8 முறை) தொடருகிறார். ஆஸ்திரேலியாவின் வார்னர் 2-வது இடத்தில் (6 தடவை) உள்ளார்.

    * ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டில் மட்டும் ரோகித் சர்மா 77 சிக்சர்கள் கிளப்பியிருக்கிறார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் விரட்டிய தனது முந்தைய சாதனையை (2018-ம் ஆண்டில் 74 சிக்சர்) மாற்றி அமைத்திருக்கிறார்.

    * ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் திரட்டினர். ஒரு நாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 6-வது நிகழ்வாகும். இந்த வரிசையில் இந்தியாவின் 4-வது சிறந்த பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது.

    கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 என்ற கணக்கில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது.
    கவுகாத்தி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என சமனிலை வகித்தது. 

    இரண்டாவது பாதியில் பெங்களுரு அணியின் சுனில் சேத்ரி 68வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து, ஆல்பர்ட் சேரன் 80வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், பெங்களூரு அணி 2-0 என நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது.

    இதன்மூலம் பெங்களூரு அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
    ×