search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோஷ் ஹாசில்வுட்
    X
    ஜோஷ் ஹாசில்வுட்

    ஐபிஎல் ஏலம்: ஜோஷ் ஹாசில்வுட்டை ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2020 ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாசில்வுட்டை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.

    பல்வேறு அணிகள் போட்டி போட்டுக்கொண்டு வீரர்களை ஏலம் எடுத்துவருகின்றனர். சென்னை அணியை பொறுத்தவரை 1 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட இங்கிலாந்து வீரரான ஆல்-ரவுண்டர் சாம் கரனை 5.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இதையடுத்து பந்துவீச்சாளர்கள் ஏலத்தின் போது 1 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நெய்தன் குர்டர் நைலை ஏலம் எடுக்க சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. 

    ஆனால், இறுதியில் குர்டர் நைலை 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. 

    அதேபோல், 1 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவை ஏலம் எடுக்க பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

    இறுதியில், சென்னை அணி பியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இந்நிலையில், ஏலத்தின் முதல்பாதியில் இறுதிகட்டத்தில் 2 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாசில்வுட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதே 2 கோடி ரூபாய் விலையிலேயே ஏலம் எடுத்தது. 

    இதன் மூலம் சாம் கரன், பியூஸ் சாவ்லா, ஜோஷ் ஹாசில்வுட் ஆகிய மூன்று வீரர்களை சென்னை அணி வாங்கியுள்ளது. 

    இதன் மூலம் சென்னை அணியின் வீரர்கள் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. மேலும், சென்னை அணிக்கு இன்னும் 35 லட்ச ரூபாய் மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×