search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தோணி சினிசுகா, கென்டோ மொமோட்டா
    X
    அந்தோணி சினிசுகா, கென்டோ மொமோட்டா

    உலக டூர் பேட்மிண்டன்: கென்டோ மொமோட்டா சாம்பியன்

    சீனாவில் நடைபெற்ற உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் தொடரில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டா சாம்பியன் பட்டம் வென்றார்.
    டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த கென்டோ மொமோட்டா இந்தோனேசியாவைச் சேர்ந்த இளம் வீரரான அந்தோணி சினிசுகாவை எதிர்கொண்டார். நம்பர் ஒன் வீரரான கென்டோ மொமோட்டாவிற்கு அந்தோணி சினிசுகா கடும் சவாலாக விளங்கினார்.

    இதனால் முதல் செட்டை அந்தோணி 21-17 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் மொமோட்டா சிறப்பாக விளையாடி அதை 21-17 தன்வசமாக்கினார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் அந்தோணி முன்னிலை பெற்றிருந்தாலும், அதன்பின் கோட்டை விட்டதால் கென்டோ மொமோட்டா 21-14 எனக்கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

    3-வது செட்டில் மொமோட்டா ஒரு கட்டத்தில் 5-12 என பின்தங்கியிருந்தார். அதன்பின் சிறப்பாக விளையாடி புள்ளிகளை பெற்றார். 17-14 என முன்னிலைப் பெற்றிருந்தபோது, அந்தோணி காயம் அடைந்தார். அதன்பின் 21-14 என மொமோட்டா வெற்றி பெற்றார்.
    Next Story
    ×