search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள்
    X
    ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

    பெர்த் பகல்-இரவு டெஸ்ட்: நியூசிலாந்தை 296 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

    மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் அபாரமாக பந்து வீச நியூசிலாந்தை 296 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
    • ஆஸி. முதல் இன்னிங்சில் 416 ரன்கள், டிம் சவுத்தி, வாக்னர் 4 விக்கெட்
    • நியூ. முதல் இன்னிங்சில் 166-ல் சுருண்டது. ஸ்டார்க் 5 விக்கெட்
    • ஆஸி. 2-வது இன்னிங்சில் 217-9 டிக்ளேர். நியூசிலாந்து 171-ல் சுருண்டது. ஸ்டார்க் 4 விக்கெட்
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு பிங்க் பால் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் லாபஸ்சாக்னேயின் (143) சூப்பரான சதத்தால் 416 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 56 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ராஸ் டெய்லரை (80) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து 166 ரன்னில் சுருண்டது.

    250 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த லாபஸ்சாக்னேவும் (50), தொடக்க வீரர் ஜோ பேர்ன்ஸும் (53) அரைசதம் அடிக்க ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், வாக்னர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 467 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    468 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    ஜீத் ராவல் 1 ரன்னிலும், டாம் லாதம் 18 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 14 ரன்னிலும், ராஸ் டெய்லர் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் வாட்லிங் மட்டும் தாக்குப்பிடித்து 40 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நியூசிலாந்து 171 ரன்னில் சுருண்டது.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

    இதனால் ஆஸ்திரேலியா 196 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்டார்க், நாதன் லயன் தலா நான்கு விக்கெட்டுக்களும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 9 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
    Next Story
    ×