என் மலர்
விளையாட்டு
கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், இரண்டாவது பாதியில் கேரளாவின் மெஸ்சி பவுலி அடித்த அதிரடி கோல்களால் ஜாம்ஷெட்பூருடனான ஆட்டம் சமனானது
திருவனந்தபுரம்:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கேரளா மாநிலம் கொச்சியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் 36வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பிட்டி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார். இதனால் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் ஜாம்ஷெட்பூர் வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் வினீத் ஒரு கோல் அடித்தார். இதனால் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
ஆனால், கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் 75 மற்றும் 87வது நிமிடங்களில் கேரளா அணியின் மெஸ்சி பவுலி தலா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.
இறுதியில், கேரளா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனில் முடிந்தது.
இதன்மூலம், ஜாம்ஷெட்பூர் அணி தான் விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றி, 4 டிரா மற்றும் ஒரு தோல்வி என 13 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.
கேரளா அணி தான் ஆடிய 8 போட்டிகளில் 1 வெற்றி, 3 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 7 புள்ளிகள் பெற்றது.
தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஜோ ரூட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
இன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் ஜோ ரூட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்த வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான சிறந்த காம்பினேசனை உருவாக்க ஒவ்வொரு அணியும் முயற்சி செய்து வருகிறது.
அதனடிப்படையில் ஜோ ரூட் நீக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஜோ ரூட்டின் டி20 கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறி என்றும் கூறப்படுகிறது.
தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இங்கிலாந்து டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. மோர்கன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. பேர்ஸ்டோவ், 5. பட்லர், 6. பேட் பிரவுன், 7. சாம் குர்ரான், 8. டாம் குர்ரான், 9. ஜோ டென்லி, 10. கிறிஸ் ஜோர்டான், 11. தாவித் மாலன், 12. மேத்யூ பார்கின்சன், 13. அடில் ரஷித், 14. ஜேசன் ராய், 15. பென் ஸ்டோக்ஸ், 16. மார்க் வுட்.

உலக டூர் பேட்மிண்டன் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நடைபெற்று வருகிறது.
‘ஏ’ பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இடம் பிடித்திருந்தார். நடப்பு சாம்பியனான பிவி சிந்து இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்து நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் இன்று கடைசி போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-19, 21-19 என வெற்றி பெற்றார்.
முதல் செட்டில் சீன வீராங்கனை 11-6 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 18-9 என முன்னிலைப் பெற்றார். பின்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து தொடர்ச்சியாக 9 புள்ளிகள் பெற்று 18-18 என சமநிலைப் பெற்றார். அதன்பின் 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டில் பிவி சிந்து 7-3 எனவும், 11-6 எனவும் முன்னிலைப் பெற்றார். பின்னர் சீன வீராங்கனை 16-18 என நெருங்கி வந்தார். அதன்பின் பிவி சிந்து தொடர்ச்சியாக மூன்று புள்ளிகள் பெற்று 21-19 என 2-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பிவி சிந்து ‘ஏ’ பிரிவில் 3-வது இடம் பிடித்து வெளியேறினார்.

பிரிமீயர் லீக் கால்பந்தின் முன்னணி அணியான லிவர்பூல் ஜூர்கன் க்ளோப்பின் பதவிக்காலத்தை 2024 வரை நீட்டித்துள்ளது.
பிரிமீயர் லீக்கில் முன்னணி கால்பந்து அணியாக திகழ்ந்து வருவது லிவர்பூல். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஜூர்கன் க்ளோப் இருந்து வருகிறார். 2019 யூரோப்பியன் சாம்பியன் லீக் கோப்பையை லிவர்பூல் அணி இவரது தலைமையில் கைப்பற்றியது. அதற்கு முந்தைய சீசனில் 2-வது இடம் பிடித்திருந்தது.
2015-ல் இருந்து லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தற்போதைய பிரிமீயர் லீக்கில் 8 புள்ளிகள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் 10 வருடத்திற்குப் பிறகு தொடங்கிய ராவல்பிண்டி டெஸ்ட், மழைக்காரணமாக டிராவை நோக்கி செல்கிறது.
இலங்கை அணி 10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. ராவல்பிண்டியில் முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை குறுக்கீட்டால் முதல் நாளில் 68.1 ஓவர்களே வீசப்பட்டது. அப்போது இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. டி சில்வா 38 ரன்களுடனும், டிக்வெல்லா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. நேற்றும் மழை பெய்தது. இதனால் 18.2 ஓவர்கள் வீசிய நிலையில் 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது. டி சில்வா 72 ரன்களுடனும், பெரேரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று பெய்த மழையின் காரணமாக தண்ணீர் மைதானத்தில் தேங்கி நின்றதால் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியது. ஆனால் 5.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தற்போது வரை இலங்கை 91.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. இலங்கை அணியின் ஒரு இன்னிங்சே இன்னும் முடியவில்லை. இதனால் போட்டி டிராவில்தான் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். டி சில்வா 87 ரன்களுடனும், பெரேரா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக கருதப்படும் வெயின் பிராவோ மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ. தனது துல்லியமான பந்து வீச்சால் டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்விகளை சந்தித்ததால், சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பும் வகையில் விதிமுறையை மாற்றி அமைத்தது. இதனால் கிறிஸ் கெய்ல், பொல்லார்டு போன்றோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் டி20 அணிக்கு மீண்டும் திரும்புகிறேன் என்று பிராவோ அறிவித்துள்ளார். அதேவேளையில் டி20 கிரிக்கெட்டை தவிர மற்ற வகை கிரிக்கெட்டிற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிராவோ கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிற்கு திரும்புவதை தெரிவிக்க விரும்புகிறேன். நான் தேர்வு செய்யப்பட்டால், டி20 கிரிக்கெட்டிற்காக முழுவீச்சில் களம் இறங்குவேன். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட், ரசிகர்கள் மற்றும் இளைஞர்களுடன் விளையாடுவது உற்சாகமாக இருக்கும்’’ என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க வேண்டாம் என அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் அந்த இடத்தில் களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் 4-வது இடத்தில் ஷ்ரேயாஸ் அய்யரை களம் இறக்கலாம் என்ற கருத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன்.
நான் இந்தியாவின் பந்து வீச்சு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்களுக்கு சவால் காத்திருக்கிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் பவர்புல் ஹிட்டர்ஸ். ஆடுகளமும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் இருக்கும். ஆகவே, பந்து வீச்சு சிறப்பானதாக இருக்க வேண்டும்’’ என்றார்.

டிராவிஸ் ஹெட் அரைசதம், டிம் பெய்ன் 39, ஸ்டார்க் 30 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லாபஸ்சாக்னேயின் சிறப்பாக ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்திருந்தது.

கேப்டன் டிம் பெய்ன் 39 ரன்னும், பேட் கம்மின்ஸ் 20 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 30 ரன்னும் அடிக்க ஆஸ்திரேலியா 146.2 ஓவரில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
லாபஸ்சாக்னே 110 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லாபஸ்சாக்னே 143 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்னில் வெளியேறினார்.

கேப்டன் டிம் பெய்ன் 39 ரன்னும், பேட் கம்மின்ஸ் 20 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 30 ரன்னும் அடிக்க ஆஸ்திரேலியா 146.2 ஓவரில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுக்கு நீட்டித்து அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இங்கு 1934-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. 21 ஒரு நாள் போட்டிகளும், இரண்டு 20 ஓவர் ஆட்டங்களும் நடந்துள்ளன. ஏராளமான சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒரு நாள் போட்டி நடக்க உள்ளது.
புகழ்பெற்ற இந்த மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி இந்த ஸ்டேடியத்தை நிர்வகித்து வரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரூபா குருநாத், செயலாளர் ராமசாமி ஆகியோர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘விளையாட்டை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் ஆர்வத்தை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த மைதானத்தில் சீல் வைக்கப்பட்டிருக்கும் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரி சம்பந்தமான பின்னடைவுகளை ஒழுங்குமுறைப்படுத்தி, அதை மீண்டும் திறந்து பயன்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
அடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (15-ந் தேதி) நடக்கிறது.
பகல் - இரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் இந்த ஒரு நாள் போட்டியை காண ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். டிக்கெட்டுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
முதல் ஒரு நாள் போட் டிக்கான இரு அணி வீரர்களும் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் இருந்து பஸ்களில் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் நட்சத்திர ஓட்டலில் இருந்து பஸ்சில் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தனர். காலை 9 மணி முதல் 12 மணி வரை பயிற்சியில் ஈடுபட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சியை முடித்த பிறகு இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்காக மதியம் மைதானத்திற்கு வந்தனர். அவர்கள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டி கடைசியாக 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விஸ்வநாதன் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:
செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான தமிழகத்தை சேர்ந்த 50 வயதான விஸ்வநாதன் ஆனந்த் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஹரிகிருஷ்ணன், விதித், சேகர் கங்குலி, சசிகிரண் ஆகியோரில் இருந்து யாராவது விரைவில் டாப்-10 இடத்திற்குள் வந்து விடுவார்கள். இதே போல் பிரக்ஞானந்தா, நிஹல் சரின், டி.குகேஷ், ராவ்னக் சத்வானி என்று நம்மிடம் திறமையான வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று உறுதியாக சொல்ல முடியும்’ என்றார்.
செஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்புள்ளதா? என்று கேட்டபோது, ‘எனக்கு தெரியாது. அது பற்றி நான் அதிகமாக சிந்திக்கவும் இல்லை. ஒரு வேளை ஆலோசகராக செயல்பட வாய்ப்புள்ளது. வரும் ஆண்டில் எனக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. அதில் தான் இப்போது முழு கவனமும் உள்ளது’ என்றார்.

அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருவதன் எதிரொலியாக இன்று நடைபெற இருந்த ரஞ்சி டிராபி, ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.
குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருவதன் எதிரொலியாக இன்று நடைபெற இருந்த ரஞ்சி டிராபி மற்றும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
அசாம் மற்றும் சர்வீசஸ் அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியும், சென்னையின் எப்.சி. மற்றும் கவுகாத்தி எப்.சி. அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஐ எஸ் எல் கால்பந்து போட்டியும் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.