என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக டூர் பேட்மிண்டனில் பிவி சிந்து 2-வது ஆட்டம் கடும் போராட்டத்திற்குப்பின் சென் யு ஃபெய் இடம் வீழ்ந்தார்.
    டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நேற்று தொடங்கியது.

    நடப்பு சாம்பியன் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் சீனாவின் சென் யு ஃபெய்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 22-20 என பிவி சிந்து கைப்பற்றினார். 2-வது செட்டில் சென் முதல் பாதியில் 11-7 என முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் 21-16 என சென் 2-வது செட்டை கைப்பற்றினார்.

    3-வது செட்டில் பிவி சிந்து 11-10 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் பிவி சிந்து 12-21 என தோல்வியடைந்தார்.
    பெர்த்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்டில் லாபஸ்சாக்னேயின் சதத்தால் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது.
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு பிங்க் பால் டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. டேவிட் வார்னர் - ஜோ பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 9 ரன்னிலும், டேவிட் வார்னர் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து 3-வது விக்கெட்டுக்கு லாபஸ்சாக்னே உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த லாபஸ்சாக்னே நிதானமாக விளையாட ஸ்டீவ் ஸ்மித் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வடே 12 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு பக்கம் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் லாபஸ்சாக்னே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த அவர், இந்த போட்டியிலும் சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்டில் சதம் விளாசினார்.

    5-வது விக்கெட்டுக்கு லாபஸ்சாக்னே உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் அடித்துள்ளது.

    லாபஸ்சாக்னே 110 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி சார்பில் வாக்னர் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    கடைசி ஓவரை தாக்குப்பிடித்தால் டிரா செய்து கொள்ளலாம் என்ற நிலையில் கிருஷ்ணப்பா கவுதம் தமிழ்நாடு அணியின் கனவை சிதறடித்தார்.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. கர்நாடகா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது. தமிழ்நாடு 307 ரன்கள் அடித்தது.

    29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய கர்நாடகா 151 ரன்னில் சுருண்டது. விக்னேஷ் 3 விக்கெட்டும், ஆர். அஸ்வின் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினார்.

    பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு களம் இறங்கியது. அபிநவ் முகுந்த்- முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 49 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் தமிழ்நாடு அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 10-வது ஓவரின் முதல் பந்தில் முரளி விஜய் எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார். அதன்பின் தமிழ்நாடு அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. அபிநவ் முகுந்த் 42 ரன்னிலும், பாபா அபரஜித் ரன்ஏதும் எடுக்காமலும், ஆர். அஸ்வின் 2 ரன்னிலும், விஜய் சங்கர் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் டிரா செய்தாலே போதும் என்ற நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டது. தினேஷ் கார்த்திக் (17), முருகன் அஸ்வின் (23 அவுட் இல்லை), சித்தார்த் (20) ஆகியோரின் போராட்டத்தால் போட்டி டிராவை நோக்கிச் சென்றது.

    கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை தமிழ்நாடு 9 விக்கெட் இழந்திருந்தது. கடைசி விக்கெட்டுக்கு முருகன் அஸ்வின் உடன் கே. விக்னேஷ் களத்தில் இருந்தார். கிருஷ்ணப்பா கவுதம் பந்து வீசினார்.

    6 பந்தை தாக்குப்பிடித்தால் டிரா ஆகிவிடும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 3-வது பந்தில் விக்னேஷ் எல்பிடபிள்யூ ஆனார். இதனால் 154 ரன்னில் சுருண்டு 26 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    சமீபத்தில் முடிவடைந்த சையத் முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. கடைசி ஓவரில் நான்கு பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. அப்போதும் கிருஷ்ணப்பா கவுதம்தான் பந்து வீசினார். பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன்னில் கர்நாடகா வெற்றி பெற்றது.

    ஏற்கனவே கர்காடகாவிடம் கடைசி போட்டியில் தோல்வியடைந்த தமிழ்நாடு,  தற்போதும் கடைசி ஓவரிலேயே தோல்வியடைந்துள்ளது.

    கிருஷ்ணப்பா கவுதம் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட் கைப்பற்றினார்.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு உறுதியாக தகுதி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தால் இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் ஒவ்வொரு தொடரின்போதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது பிங்க்-பாலில் விளையாட மறுத்துவிட்டது.

    தற்போது முதல்முறையாக வங்காளதேச அணிக்கெதிராக பிங்க்-பால் பகல் இரவு ஆட்டத்தில் விளையாடியது. இதனால் 2020 - 2021 தொடரின்போது இந்தியா பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என நம்புகிறது.

    மேலும் நான்கு போட்டிகளில் இரண்டில் பகல்-இரவு போட்டியாக நடத்தப்படும். அதில் இந்தியா விளையாட வேண்டும் என ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, நான்கு போட்டிகள் கொண்ட தொடலில் இரண்டு போட்டிகள் கொண்ட கொஞ்சம் அதிகம் எனத் தெரிவித்திருந்தார்.

    ஏறக்குறைய ஆஸ்திரேலியா தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிக் கட்டத்தில் இருக்கும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பதால் ஒவ்வொரு வெற்றியும் முக்கியமானதாக கருதப்படும்.

    தற்போது முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் நிலை இருந்தால் பகல்-இரவு டெஸ்ட் சாத்தியமே என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில் ‘‘அடுத்த வருடம் இந்திய அணி ஆஸ்திரேலிய வரும்போது ஒரு பிங்க்-பால் டெஸ்டில் விளையாடுவோம் என்று உறுதியாக நம்புகிறேன்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா அவர்களுக்கான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. தற்போது உள்ள நிலையை பார்க்கும்போது அவர்கள் 2021 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடுவார்கள்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, மீண்டும் தரவரிசையில் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார்.
    இந்திய அணியின் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருந்தார். சமீப காலமாக அவருக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்குள் இருந்து வெளியேறினார். இந்நிலையில்தான் தற்போது முடிந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    முதல் போட்டியிலும், 3-வது போட்டியிலும் அரைசதம் அடித்த விராட் கோலி இரண்டிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்று போட்டிகளிலும் 183 ரன்கள் குவித்தார். சராசரி 183 ஆகும். இதனால் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 15-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இரண்டு அரைசதம் அடித்த மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் ராகுல் மூன்று இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா ஒரு இடங்கள் சறுக்கி 9-வது இடத்தில் உள்ளார்.
    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்திற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவரது ரசிகர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்திற்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினி சார், திரையில் உங்களது ஸ்டைலும், நிஜ வாழ்வில் உங்களது பணிவும் உங்களை எல்லா தர்பாரிலும் தலைவர் ஆக்குகிறது’, என பதிவிட்டுள்ளார்.

    ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    சர்வதேச அணிக்கு வருவதும், போவதுமாக இருந்தால், அது எந்தவொரு வீரருக்கும் எளிதானதல்ல என லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தொடக்க வீரரான ஷிகர் தவான் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

    இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். அவர் ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் 91 ரன்கள் விளாசினார்.

    மூன்று போட்டிகளிலும் 164 ரன்கள் விளாசினார். இந்தத் தொடரில் விராட் கோலிக் (183) அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்த அவர், சர்வதேச போட்டிக்கு வருவதும், போவதுமாக இருந்தால் அது எளிதானது அல்ல என லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘நெருக்கடி இல்லை என்று நான் சொல்லமாட்டேன். அணிக்கு வருவதும் செல்வதுமாக இருந்தால், அது எந்தவொரு வீரருக்கும் எளிதானதாக இருக்காது. சர்வதேச போட்டிக்கான நெருக்கடியாக எதிர்கொண்டால்தான், எளிதாக சென்று ரன்கள் அடிக்க முடியும். மேலும், டி20 கிரிக்கெட் ஆட்டம் வீரர்களின் நம்பிக்கையை பொறுத்துதான்’’ என்றார்.
    தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
    நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. இதில் 174 தங்க பதக்கத்துடன் இந்தியா 312 பதக்கங்கள் வென்று 13-வது முறையாக முதல் இடத்தை பிடித்தது.

    இந்நிலையில் 174 தங்கப்பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

    அத்துடன் வெள்ளிப் பதக்கம் வென்ற 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், வெண்கல பதக்கம் வென்ற 45 பேருக்கு தலா ஐம்பதாயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
    திருமண நாளில் சிறந்த ஆட்டங்களில் ஒன்று, தொடர் நாயகன் விருது எனது மனைவிக்கு சிறப்பு பரிசு என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். 5 ஆண்டு காதலுக்கு பிறகு இருவரும் மணந்து கொண்டனர்.

    நேற்று கோலி - அனுஷ்காவின் 2-வது ஆண்டு திருமண நாளாகும். இந்த தினத்தில் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மனைவி அனுஷ்காவுக்கு திருமண பரிசு கொடுத்தார்.

    இதுகுறித்து கோலி கூறும்போது, “எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். எனது சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று. இன்று எங்கள் திருமண நாள். இந்நாளில் அதிரடியாக ஆடி உள்ளேன். தொடரை நாயகன் விருதையும் வென்றுள்ளேன். இது எனது மனைவிக்கான சிறப்பு பரிசாகும்” என்றார்.

    மும்பையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. 21 பந்தில் 3 பவுண்டர், 5 சிக்சருடன் அரைசதம் அடித்த விராட் கோலி, 29 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 70 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    மூன்று ஆட்டங்களில் இரண்டு அரைசதங்கள் அடித்ததால் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில், டி20 போட்டிகள் முதலில் நடந்தன. இதில் இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது.

    இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.  முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ளது.  இதனைத் தொடர்ந்து, வருகிற 18-ந்தேதி 2-வது போட்டியும், 22-ந்தேதி 3-வது போட்டியும் நடைபெறும்.

    இந்த போட்டி தொடரில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயத்தினால் விளையாடவில்லை.  அவருக்கு பதிலாக அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார். மயங்க் அகர்வால் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்று விளையாடும் உலக டூர் இறதி சுற்று பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
    டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நேற்று தொடங்கியது.

    இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தனது முதலாவது ஆட்டத்தில் அகானே யமா குச்சியை (ஜப்பான்) சந்தித்தார். 68 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் சிந்து 21-18, 18-21, 8-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

    சிந்து அடுத்த லீக்கில் இன்று சீனாவின் சென் யூ பேவை எதிர்கொள்கிறார். அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் சிந்து கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
    நாங்கள் நினைத்ததை செயல்படுத்தாத காரணத்தினாலேயே இந்த டி20 தொடரில் தோல்வி அடைந்தோம் என வெஸ்ட் அணி கேப்டன் கிரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 க்கு என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. நேற்று மும்பை நகரில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்தது. இந்த தொடரின் தொடர்நாயகன் விருது விராட் கோலிக்கு கிடைத்தது. இந்த டி20 தொடரில் அவர் 2 அரை சதத்துடன் 183 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில், நாங்கள் நினைத்ததை செயல்படுத்தாத காரணத்தினாலேயே இந்த டி20 தொடரில் தோல்வி அடைந்தோம் என வெஸ்ட் அணி கேப்டன் கிரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

    ‘இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதன் பின்னர்  இரு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அந்த இடத்தில் நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. அதுவே இந்த தொடரின் தோல்விக்கு காரணம். நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். 

    இதற்கு முன்பு 200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்குகளை சேசிங் செய்துள்ளோம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன்களை சேசிங் செய்துள்ளோம். இந்த மைதானத்திலேயே (மும்பை) 220 ரன்கள் சேசிங் செய்யப்பட்டுள்ளது. அதனால் நேற்றைய இலக்கு (240 ரன்கள்) ஒன்றும் கடினமானது இல்லை. ஆனால் இறுதியில் நாங்கள் தடுமாறிவிட்டோம்’ என பொல்லார்ட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
    ×