என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது.
    மும்பை:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன் குவித்தது.

    லோகேஷ் ராகுல் 56 பந்தில் 91 ரன்னும், (9பவுண்டரி, 4 சிக்சர்), ரோகித்சர்மா 34 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 29 பந்தில் 70 ரன்னும் (4 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தனர்.

    கோட்ரெல், வில்லியம்ஸ், பொல்லார்ட் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 67 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் பொல்லார்ட் 39 பந்தில் 68 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), ஹெட்மயர் 24 பந்தில் 41 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), எடுத்தனர்.

    முகமது‌ஷமி, தீபக்சாஹர், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தன.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்தது.

    இந்த தொடரின் தொடர்நாயகன் விருது விராட் கோலிக்கு கிடைத்தது. 2 அரை சதத்துடன் அவர் 183 ரன்கள் குவித்தார். வெற்றி குறித்து அவர் கூறியதாவது:-

    நான் விளையாடிய ஆட்டங்களில் இதுதான் சிறந்த இன்னிங்ஸ் ஆகும். முதலில் பேட்டிங் செய்து பெற்ற இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    தொடரை முடிவு செய்யும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் முக்கிய பங்காற்றினார்கள்.

    முதலில் பேட்டிங் செய்ய தயக்கம் இருந்தது. ஆனால் இந்த ஆடுகளத்தில் எங்களால் மிகவும் இயல்பாக ஆட முடிந்தது. இது எங்களுக்கு நல்ல பாடமாக அமைந்தது. தற்போது நாம் அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெறுவது குறித்த நிறைய பேசிவிட்டோம். களத்தில் இறங்கி திட்டங்களை செயல்படுத்துவதுதான் முக்கியம்.

    எனது பேட்டிங்கில் வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் வழக்கமாக இப்படி ஆட மாட்டேன். கே.எல். ராகுலிடம் கடைசிவரை களத்தில் இருக்குமாறு கூறி நான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். இது ஒரு அழகான சிறப்பான இன்னிங்ஸ் ஆகும்.

    அனைத்து போட்டியிலும் ரன்களை குவிக்க முடியும் என்பது எனது தன்னம்பிக்கை. எதுவாக இருந்தாலும் அதில் மனதை செலுத்தினால் போதும்.

    எனது பங்களிப்பு முக்கியமானது. நான் இரண்டு பங்களிப்புகளையும் செய்ய வேண்டும். அதிரடியாக ஆட வேண்டும். களத்தில் சிறப்பாக ஆடி நம்பிக்கை பெற வேண்டியுள்ளது.

    வர இருக்கும் உலக கோப்பை போட்டி எங்களுக்கு ஊந்து சக்தியாக இருக்கும். திட்டங்களை பற்றி பேசுவதை விட அதை களத்தில் செயல்படுத்துவதில் தான் வெற்றி காணவேண்டும்.

    இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

    அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டித்தொடர் நடைபெறுகிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் ஆட்டம் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
    காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ரவிக்குமார் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.
    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்றவர் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ரவிக்குமார். சமீபத்தில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 2 ஆண்டு வரை தடை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி சில தினங்களில் அவருக்கு என்ன தண்டனை என்பதை அறிவிக்க இருக்கிறது.

    தலைவலி மற்றும் ரத்தகொதிப்புக்காக டாக்டர் தந்த மருந்துகளை சாப்பிட்டதாகவும், உலக ஊக்கமருந்து தடுப்பு கழகத்தால் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இருந்த மருந்தை கவனக்குறைவாக உட்கொண்டது பின்னர் தான் தெரிய வந்ததாகவும் ரவிக்குமார் தெரிவித்தார். ‘எனது விளக்கத்தை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை புரிந்து கொண்டுள்ளது. வேண்டுமென்றே ஊக்கமருந்தை சாப்பிடவில்லை. கவனக்குறைவாக தவறு நடந்து விட்டதை சுட்டிகாட்டியுள்ளேன். அதனால் குறைந்த தண்டனை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டார். 29 வயதான ரவிக்குமார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் 70 ரன்கள் அடித்ததன் மூலம் சொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று கேப்டன் விராட்கோலி (70 ரன்), துணை கேப்டன் ரோகித்சர்மா (71 ரன்), லோகேஷ் ராகுல் (91 ரன்) ஆகிய 3 வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    3 பேட்ஸ்மேன்களும் 70 ரன்னுக்கு மேல் ஒரு இன்னிங்சில் எடுப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

    கோலியும், ரோகித்தும் அபாரமாக ஆடியதால் இருவரும் 20 ஒவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் சமநிலையில் உள்ளனர். கோலி 70 இன்னிங்சில் 2633 ரன்னும், ரோகித்சர்மா 96 இன்னிங்சில் 2633 ரன்னும் எடுத்துள்ளனர். கோலி சதம் அடித்தது இல்லை. 24 அரை சதம் எடுத்துள்ளார். ரோகித்சர்மா 4 சதமும், 19 அரை சதமும் அடித்துள்ளார்.

    நேற்றைய ஆட்டத்தில் 6-வது ரன்னை தொட்ட போது சொந்த மண்ணில் 1000 ரன் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை கோலி படைத்தார். 14-வது ஓவரில் ஹைடன் வீசிய பந்தை சிக்சர் அடித்து இந்த சாதனையை புரிந்தார்.

    இதற்கு முன்பு சர்வதேச அளவில் இரண்டு வீரர்கள் மட்டுமே 20 ஓவரில் சொந்த மண்ணில் 1000 ரன்னை எடுத்து உள்ளனர். நியூசிலாந்தை சேர்ந்த மார்ட்டின் குப்தில் 1430 ரன்னும், காலின் முன்ரே ஆயிரம் ரன்னும் எடுத்து உள்ளனர்.

    கோலி 21 பந்தில் அரை சதத்தை தொட்டார். அவரது அதிவேக அரை சதம் இதுவாகும். இந்தியாவின் 5-வது அதிவேக அரை சதமாகும்.

    யுவராஜ்சிங் 3 முறையும் (12 பந்து, 20 பந்து, 20 பந்து), காம்பீர் ஒரு முறையும் (19 பந்து) அரை சதத்தை அதிவேகத்தில் எடுத்து இருந்தனர்.
    மும்பையில் நேற்றிரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் இவின் லீவிஸ் பீல்டிங்கின் போது காயமடைந்தார்.

    மும்பையில் நேற்றிரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் இவின் லீவிஸ் பீல்டிங்கின் போது காயமடைந்தார். அவரது வலது கால் முட்டி மைதானத்தில் பலமாக இடித்ததால் வலியால் துடித்த அவர், ஸ்டிரச்சர் மூலம் வெளியே அழைத்து செல்லப்பட்டார்.

    ஆஸ்பத்திரியில் ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பதிலாக எஞ்சிய நேரம் கீமோ பால் பீல்டிங் செய்தார். காயம் காரணமாக அவர் பேட்டிங் செய்யவும் வரவில்லை. இது வெஸ்ட் இண்டீசுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது.
    நியூசிலாந்து அணிக்கெதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    பெர்த்:

    3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக பெர்த்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மின்னொளியின் கீழ் நடக்கும் இந்த டெஸ்டில் பிரத்யேகமான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பந்து) பயன்படுத்தப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணி இதுவரை ஆடியுள்ள 6 பிங்க் பந்து டெஸ்டிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த டெஸ்டிலும் அவர்களின் ஆதிக்கம் தொடர வாய்ப்புள்ளது. சமீபத்தில் சொந்த மண்ணில் பாகிஸ்தானை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா, தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 335 ரன்கள் குவித்து சாதனை படைத்தது நினைவிருக்கலாம். அதே அணி அப்படியே இந்த போட்டியிலும் அடியெடுத்து வைக்கிறது.

    உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆடுவது இது 13-வது முறையாகும். இதில் 1985-ம் ஆண்டில் மட்டும் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. தற்போது எந்த வித பயிற்சி ஆட்டமும் இல்லாமல் நேரடியாக ஆஸ்திரேலியாவின் தாக்குதலை எதிர்கொள்வது மனரீதியாக நியூசிலாந்துக்கு கடினமாக அமையும்.

    பெர்த் ஆடுகளத்தில் வேகத்துடன் கூடிய பவுன்ஸ் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்கு 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால் ஆடுகளத்தில் வெடிப்பு சீக்கிரம் உண்டாகும். பிங்க் பந்தின் தாக்கமும் இருக்கும். இத்தகைய சவால்களை நியூசிலாந்து எப்படி சமாளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், வாட்லிங், கிரான்ட்ஹோம், நிகோல்ஸ், டாம் லாதம் ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளதால் அந்த அணியினர் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்ற வகையிலும் இந்த தொடர் கவனத்தை ஈர்க்கிறது. அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் 40 புள்ளிகள் கிடைக்கும்.

    இந்நிலையில் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பெய்ன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பர்ன்ஸ் ஆகியோர் ஆடி வருகின்றனர்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி குறைந்த பந்தில் அரைசதத்தை கடந்துள்ளார்.
    இந்திய அணி குவித்த 240 ரன்களே, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு இங்கு 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது, இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    இந்திய கேப்டன் விராட் கோலி 21 பந்துகளில் அரைசதத்தை ருசித்தார். இது அவரது அதிவேக அரைசதமாகும். மொத்தத்தில் இந்தியாவின் 5-வது அதிவேக அரைசதமாக இது பதிவானது.

    இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 71 ரன்களும், லோகேஷ் ராகுல் 91 ரன்களும், விராட் கோலி 70 ரன்களும் விளாசினர். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 3 பேட்ஸ்மேன்கள் 70 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்நிகழ்வாகும்.
    காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ரவிக்குமார் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.
    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்றவர் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ரவிக்குமார். சமீபத்தில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 2 ஆண்டு வரை தடை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி சில தினங்களில் அவருக்கு என்ன தண்டனை என்பதை அறிவிக்க இருக்கிறது.

    தலைவலி மற்றும் ரத்தகொதிப்புக்காக டாக்டர் தந்த மருந்துகளை சாப்பிட்டதாகவும், உலக ஊக்கமருந்து தடுப்பு கழகத்தால் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இருந்த மருந்தை கவனக்குறைவாக உட்கொண்டது பின்னர் தான் தெரிய வந்ததாகவும் ரவிக்குமார் தெரிவித்தார். ‘எனது விளக்கத்தை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை புரிந்து கொண்டுள்ளது. வேண்டுமென்றே ஊக்கமருந்தை சாப்பிடவில்லை. கவனக்குறைவாக தவறு நடந்து விட்டதை சுட்டிகாட்டியுள்ளேன். அதனால் குறைந்த தண்டனை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டார். 29 வயதான ரவிக்குமார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
    மும்பையில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.
    மும்பை:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி சிக்சர்கள், பவுண்டரிகளாக பறக்கவிட்டனர்.

    இந்த ஆட்டத்தின் முதல் சிக்சரை அடித்த ரோகித் சர்மா, சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்து அசத்தினார்.

    அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி என 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    மறுபுறம் ராகுலும், கேப்டன் விராட் கோலியும் தங்களது அதிரடியை தொடர்ந்ததால் இந்திய அணியின் ரன் வேகம் கணிசமாக உயர்ந்தது.
    கே.எல்.ராகுல் 56 பந்தில் 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 70 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இதையடுத்து, 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

    இந்திய அணியினரின் துல்லிய பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 17 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    அடுத்து இறங்கிய ஹெட்மையரும், கேப்டன் பொல்லார்டும் சற்று நேரம் நிலைத்து ஆடினர். இருவரும் இணைந்து 74 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில் ஹெட்மையர் 41 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொல்லார்டு சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரி என 68 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    பொல்லார்டு அவுட்டானதும் இந்தியாவின் வெற்றி உறுதியானது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் டி 20 தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்று அசத்தியது இந்தியா.
    மும்பையில் நடக்கும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
    மும்பை:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விட்டனர்.

    ஆட்டத்தின் 3வது ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்து அசத்தினார்.

    அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி என 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

    மறுபுறம் ராகுல் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். கேப்டன் விராட் கோலி அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் இந்திய அணியின் ரன் வேகம் மீண்டும் உயர்ந்தது. 

    பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் 91 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி 5 சிக்சர், 3 பவுண்டரியுடன் 21 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 70 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இதையடுத்து, 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கி விளையாடி வருகிறது.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் சிக்சர் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 400வது சிக்சரை அடித்துள்ளார்.
    மும்பை:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா அதை சிக்சராக மாற்றினார்.

    இந்த சிக்சர் மூலம் சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்கள் அடித்தவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் ரோகித் சர்மா.
    மும்பையில் நடக்கும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    மும்பை:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.
    ராவல்பிண்டி:

    கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.
     
    இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் இன்று தொடங்கியது. இலங்கை அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் திமுத் கருணரத்னே, ஒஷாடா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய திமுத் கருணரத்னே அரை சதமடித்தார்.

    அணியின் எண்ணிக்கை 96 ஆக இருக்கும்போது திமுத் கருணரத்னே 59 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, பெர்னாண்டோ 40 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 10 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 31 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 2 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், இலங்கை அணி முதல் நாள் முடிவில் 68.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செயா டி சில்வா 38 ரன்னும், நிரோஷன் டிக்வெலா 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×