
நேற்று கோலி - அனுஷ்காவின் 2-வது ஆண்டு திருமண நாளாகும். இந்த தினத்தில் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மனைவி அனுஷ்காவுக்கு திருமண பரிசு கொடுத்தார்.
இதுகுறித்து கோலி கூறும்போது, “எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். எனது சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று. இன்று எங்கள் திருமண நாள். இந்நாளில் அதிரடியாக ஆடி உள்ளேன். தொடரை நாயகன் விருதையும் வென்றுள்ளேன். இது எனது மனைவிக்கான சிறப்பு பரிசாகும்” என்றார்.
மும்பையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. 21 பந்தில் 3 பவுண்டர், 5 சிக்சருடன் அரைசதம் அடித்த விராட் கோலி, 29 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 70 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மூன்று ஆட்டங்களில் இரண்டு அரைசதங்கள் அடித்ததால் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.