search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 விக்கெட் வீழ்த்திய டிம் சவுத்தி
    X
    5 விக்கெட் வீழ்த்திய டிம் சவுத்தி

    பெர்த் டெஸ்ட் - நியூசிலாந்து வெற்றி பெற 468 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

    பெர்த்தில் நடைபெற்று வரும் பகல் இரவு டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 468 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
    பெர்த்:

    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லாபஸ்சாக்னேயின் சிறப்பாக ஆட்டத்தால் 146.2 ஓவரில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லாபஸ்சாக்னே 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து 56 ரன்னில் வெளியேறினார்.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஸ் டெய்லர் 80 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 34 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 23 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், நாதன் லியான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    250 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. ஆனால் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய வீரர்களை கட்டுப்படுத்தினர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோ பர்ன்ஸ் 54 ரன்னும், லாபஸ்சாக்னே 50 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 69.1 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. 

    நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், நீல் வாக்னர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
    Next Story
    ×