search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷர்துல் தாக்குர்
    X
    ஷர்துல் தாக்குர்

    வெஸ்ட் இண்டீசுடனான ஒருநாள் தொடர் - இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்ப்பு

    வெஸ்ட் இண்டீசுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில், டி20 போட்டிகள் முதலில் நடந்தன. இதில் இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.  முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகிற 18-ம் தேதி 2-வது போட்டியும், 22-ம் தேதி 3-வது போட்டியும் நடைபெறும்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மொகமது ஷமி

    இதில் காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்திய அணி வீரர்களின் பட்டியல் வருமாறு:

    விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், மொகமது ஷமி, ஷர்துல் தாக்குர்

    ஏற்கனவே, தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயத்தால் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×