என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளர்.
    அகமதாபாத்:

    பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    ஒருநாள் போட்டிகள் வருகிற 6, 9 மற்றும் 11-ந் தேதிகளில் அகமதாபாத்திலும், 20 ஓவர் போட்டிகள் 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடக்கிறது.

    இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் 4 வீரர்கள் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவான், ஸ்ரேயாஸ் அய்யர், கெய்க்வாட் மாற்று வேகப்பந்து வீரரான நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஜோஷி, பாதுகாப்பு அதிகாரி லோகேஷ், மருத்துவ சிகிச்சையாளர் ராஜூவ் குமார் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    4 இந்திய வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடர் திட்டமிட்டபடி தொடங்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டித் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளர். 4 வீரர்களுக்கு கொரோனா இருப்பால் அவர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். தவான், ஸ்ரேயாஸ் அய்யர், கெய்க்வாட் ஆகியோர் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள் என தெரிகிறது.

    அணியின் துணை கேப்டனான லோகேஷ் ராகுல் தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனால் அவர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார்.


    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய கேப்டன் யாஷ் தல் சதம் அடித்தார்.
    லண்டன்:

    19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. 

    நேற்று நடைபெற்ற இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. 

    பொறுப்புடன் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் யாஷ் தல் 110 ரன்னில் அவுட்டானார். இதை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.  இதன்மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதையடுத்து இந்திய அணி இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.  

    இதுகுறித்து அவர் கூறுகையில், ஜூனியர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் உயர்தரமாக இருக்கிறது. இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது. யாஷ் தல் இணையில்லாதவராக இருக்கிறார் என பாராட்டியுள்ளார்.

    ஜூனியர் உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவின் ஷேக் ரஷீத், யாஷ் தல் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து அசத்தியது.
    ஆன்டிகுவா:

    ஜூனியர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. கேப்டன் யாஷ் தல் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 110 ரன்னில் அவுட்டானார். ஷேக் ரஷீத் 94 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் தினேஷ் பானா 4 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி 20 ரன் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஜாக் நிபேட், வில்லியம் சைஸ்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. லச்லான் ஷா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் அடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கோரெ மில்லர் 38 ரன்னும், கேம்ப்பெல் 30 ரன்னும் எடுத்தனர்.
    மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
     
    இந்தியா சார்பில் விக்கி ஓஸ்ட்வல் 3 விக்கெட்டும், ரவிகுமார், நிஷாந்த் சிந்துவும் தலா2 விக்கெட்டும் வீழ்த்தினர். 110 ரன்கள் அடித்த யாஷ் தல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    கொரோனா பரவல் அச்சுறுத்தலால் ஒருநாள் போட்டி தொடரில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 6-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. டி20 தொடர் பிப்ரவரி 16-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.  

    இந்நிலையில், அகமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    மேலும், நெட் பவுலர் நவ்தீப் சைனி, பீல்டிங் கோச் திலீப், பாதுகாப்பு அதிகாரி லோகேஷ் உள்பட மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    அவர்கள் அனைவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர். அதன்பின் 2 முறை கொரோனா நெகட்டிவ் என முடிவு கிடைத்த பிறகே மீண்டும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்பதால் ஒருநாள் போட்டிகளில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் செல்ல இருக்கும் நிலையில், சில வீரர்கள் பயணம் செய்யவில்லை என்றால் ஆச்சர்யம் படமாட்டேன் என ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 1988-ம் ஆண்டுக்குப்பின் முதன்முறையாக தற்போது பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. மார்ச் 3-ந்தேதி தொடங்கும் நிலையில் ஆஸ்திரேலியா மூன்று டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது.

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தொடரை ரத்து செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் முழு உறுதி அளித்த நிலையில் ஆஸ்திரேலியா அணி செல்கிறார்.

    ஆனால், சில வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சில வீரர்கள் பயணம் செய்யவில்லை என்றால் நான் ஆச்சர்யம் அடையமாட்டேன் என வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.


    இதுகுறித்து ஹேசில்வுட் கூறுகையில் ‘‘ஏராளமான விசயங்களில் கிரிக்கெட் போர்டு மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆகியவை அதிக அளவில் ஈடுபட்டுள்ளது. ஆகவே, வீரர்களிடம் அதிக அளவிலான நம்பிக்கை உள்ளது. இருந்தாலும், சில கவலைகள் வீரர்களிடம் உள்ளது. வீரர்கள் சிலர் பாகிஸ்தான் பயணம் செய்யவில்லை எனில் ஆச்சர்யம் படமாட்டேன்.

    அப்படி முடிவு செய்யப்ட்டார், இது பிரச்சினையாக இருக்காது. ஒவ்வொருவடைய சொந்த முடிவுக்கு மரியாதை கொடுக்க வேணடும். இது நியாயமானது. ஒவ்வொருவரும் அவர்களுடைய குடும்பத்துடன் ஆலோசனை நடத்துவார்கள். அதன்பின் தங்களது முடிவை அறிவிப்பார்கள். ஒவ்வொருவரும் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்’’ என்றார்.

    ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பிப்ரவரி 20-ந்தேதி பாகிஸ்தான் புறப்படுகிறார்கள்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரரை இடித்த காரணத்தால் ரன் ஓட மறுத்த வீரருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
    டி20 உலகக் கோப்பை கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன நியூசிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

    டேரில் மிட்சல், நீசம் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நீசம் தரையோடு அடித்த பந்தை பந்து வீச்சாளர் அடில் ரஷித் தடுக்கக்கூடிய தூரத்தில் நேரான திசையில் வந்தது. அப்போது எதிர்முனையில் இருந்த டேரில் மிட்செல் ரன் அவுட்டாகாமல் இருந்து கிரீஸ்க்குள் பேட்டை வைக்க முயற்சி செய்தார்.

    அப்போது ரஷித் மீது பயங்கரமாக மோதிக்கொண்டார். ஆனால் மிட்செல் மீது தவறு இல்லாத நிலையில், ரஷித் தடுமாறியதால் மிட்செல் ஒரு ரன் ஓட மறுத்துவிட்டார். அப்போது, மிட்செல் நேர்மையை பார்த்து கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டினர்.

    இந்த நிலையில், டேரில் மிட்செலுக்கு ஐ.சி.சி. ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த வெட்டோரி, மெக்கல்லம், கேன் வில்லியம்சன் ஆகியோர் இதற்கு முன் ஸ்பிரிட் ஆஃப் கிரக்கெட் விருதை வென்றுள்ளனர்.
    ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் உரையாடும்போது டோனி சொன்ன அறிவுரை குறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தற்போது விவரித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் சாஹல். இவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2018-ம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் நான்கு ஓவர்களில் 64 ரன்கள் வாரி வழங்கினார்.

    இந்த போட்டியில் 64 ரன்கள் கொடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய பந்து வீச்சாளர்களிலேயே அதிக ரன்கள் கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை சாஹல் பதிவு செய்தார்.

    இந்த நிலையில், அஸ்வின் உடன் சாஹல் உரையாடினார். அப்போது  ரன்கள் விட்டுக்கொடுத்த விரக்தியில் இருந்தேன். அப்போது டோனி கூறியவார்த்தை ஆறுதல் அளித்தது என சாஹல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘ரன்கள் தொடர்ந்து கொடுத்திருந்த நிலையில், டோனி என்னிடம்  வந்து நான் ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்டார். நான் ஒன்றுமில்லை. சும்மா உங்களை பார்க்க வந்தேன் என்றேன்.

    அதற்கு டோனி, இன்று உங்களுடைய நாள் அல்ல என்பது எனக்குத் தெரியும். நீங்கள் முயற்சி செய்தி கொண்டிருக்கிறீர்கள். அனால், அது நிகழவில்லை. அதைப்பற்றி அதிகமாக யோசிக்காதீர்கள். உங்களுடைய ஓவரை முடித்துவிட்டு கூலாக செல்லுங்கள்’’ என்றார்.

    மேலும், ‘‘மற்றொருவராக இருந்து அந்த நேரத்தில் திட்டியிருந்தால், அதன்பின் இருக்கும் நம்பிக்கை அளவு மேலும் குறைந்துவிடும். ஆனால், அவர் என்னிடம் இது ஜஸ்ட் ஒரு போட்டி. ஒருநாள் போட்டியில் சிறப்பாக செய்வீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட முடியாது. மற்றவர்களுக்கும் இதுதான் என டோனி கூறினார்’’ என சாஹல் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா வெல்ல காரணமாக இருந்து கீகன் பீட்டர்சன் நியூசிலாந்து தொடரில் இடம் பெறவில்லை.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா அணி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று அசத்தியது தென்ஆப்பிரிக்கா.

    அதற்கு முக்கிய காரணம் கீகன் பீட்டரிசன் பேட்டிங்கே. அவர் ஆறு இன்னிங்சில் 276 ரன்கள் அடித்தார். சராசரி 46 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கீகன் பீட்டர்சன் இடம் பெறவில்லை.

    ஹம்சா

    அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும், அறிகுறி ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்குப் பதிலாக ஜுபாய் ஹம்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கிறிஸ்ட்சர்ச்சில் நடக்கிறது. முதல் போட்டி வரும் 17-ந்தேதி தொடங்கும் நிலையில், 2-வது போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது.

    ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில், எந்த வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
    ஐ.பி.எல். மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது. 550-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தி இரண்டு அணிகள் உதயமாகியுள்ளது. ஒரு அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்றொரு அணியின் பெயர் வெளியாகவில்லை.

    ஆனால் இரண்டு அணிகளும் கேப்டன் யார் என்பதை முடிவு செய்துள்ளது. ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மோர்கன் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் ஆகாஷ் சோப்ரா கொல்கத்தா அல்லது ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோப்ரா கூறுகையில் ‘‘ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது ஆர்.சி.பி. அணியின் கேப்டனாகக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. பஞ்சாப் அணி அவரை கேப்டனாக நியமிக்கும் என நான் நினைக்கவில்லை. 

    ஷ்ரேயாஸ் அய்யர்

    மேலும், மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கக் கூடிய வீரராக இருப்பார். ஏனென்றால், இஷான் கிஷன் அந்த பட்டியலில் இல்லை. அவர் இருந்திருந்தால் கடும் போட்டி இருந்திருக்கும். இஷான் கிஷனுக்கு பணம் ஒதுக்குவார்கள். அய்யருக்காக பணத்தை வாரிக்கொட்டுவார்கள்.

    ரபடா, டி காக், டேவிட் வார்னர் ஆகியோர் அதிக விலைக்கொடுத்து வாங்கக் கூடிய வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள். அதற்கான வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இடம்பெறவில்லை.
    புது டெல்லி:

    இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 

    லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் இந்த ஆண்டு களமிறங்கவுள்ள நிலையில், இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

    இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீசாந்த் தன்னுடைய பெயர் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றதற்கான மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:-

    எல்லோரையும் நேசிக்கிறேன். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னால் அது போதாது. உங்களின் ஒவ்வொருக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து இறுதி ஏலத்தில் எனக்காகவும் பிரார்தனை செய்யுங்கள். ஓம் நம சிவயா

    இவ்வாறு ஸ்ரீசாந்த் டுவீட் செய்துள்ளார்.

    அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் ஏழு ஆண்டு தடை விதிக்கப்பட்டு திரும்பிய ஸ்ரீசாந்த் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவில்லை. இருப்பினும் அவர் கடந்த ஆண்டு சையது முஷ்டாக் அலி கோப்பையில் கேரளாவுக்காக விளையாடினார், அதில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    இலங்கை அணிக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடத்தப்படுகிறது.இந்த போட்டியை பகல்-இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது.

    இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுடன் சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிகிறது.

    அடுத்து இலங்கை அணி இந்தியா வந்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் பிப்ரவரி 25-ந் தேதியும், 20 ஓவர் தொடர் மார்ச் 16-ந் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    டெஸ்ட் போட்டிகள் பெங்களூர், மொகாலியிலும், 20 ஓவர் போட்டிகள் மொகாலி, தர்மசாலா, லக்னோவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கொரோனா பாதுகாப்பு காரணமாக முதலில் 20 ஓவர் போட்டிகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தர்மசாலா மற்றும் மொகாலியில் மட்டும் 20 ஓவர் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லக்னோவில் போட்டி நடத்தப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.

    2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியை பகல்-இரவாக நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.

    இந்தியாவில் இதற்கு முன்பு பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடந்துள்ளன. 2019 நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த பகல்- இரவு டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசத்தையும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத்தில் நடந்த பகல்- இரவு டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் தோற்கடித்து இருந்தது.

    பகல்- இரவு டெஸ்ட் போட்டி 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 18 டெஸ்ட் போட்டிகள் பகல்- இரவாக நடந்துள்ளன.
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000-வது போட்டியாகும்.
    அகமதாபாத்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

    அதன்படி பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இன்று காலை இந்தியா வந்தது. பார்படோசில் இருந்து ஒருநாள் போட்டி நடைபெறும் இடமான அகமதாபாத்துக்கு அந்த அணி வீரர்கள் வந்தனர்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் வருகிற 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அகமதாபாத்திலும், 20 ஓவர் ஆட்டங்கள் பிப்ரவரி 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவிலும் நடக்கிறது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000-வது போட்டியாகும். இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைக்கிறது. ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாத னையை படைக்க உள்ளது.

    ஒருநாள் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் கொல்கத்தாவில் நடைபெறும் 20 ஓவர் போட்டிகளுக்கு 75 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

    ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் வருமாறு:-

    போல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரண், பேபியன் ஆலன், டாரன் பிராவோ, ஹோல்டர், ‌ஷய்ஹோப், அகீல் ஹூசைன், புரூக்ஸ், போனர், பிரண்டன் கிங், கேமர்ரோச், அல்ஜாரி ஜோசப், ஷெப்பர்டு, ஓடியன் சுமித், ஹைடன் வால்ஷ்.

    20 ஓவர் தொடரில் விளையாடும் வெஸ்ட் அணி வீரர்கள் வருமாறு:-

    போல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரண், பேபியன் ஆலன், டாரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், கோட்ரெல், டோமினிக் டிரேக்ஸ், ஹோல்டர், ‌ஷய்ஹோப், அகீல் ஹூசைன், பிரண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ், ரோவ்மன் பாவெல், ஷெப்பர்டு, ஓடியன் சுமித், ஹைடன் வால்ஷ்.

    ×