என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்பதற்காக முல்தான் சுல்தான்ஸ் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆன்டி ஃப்ளவர் பாதியிலேயே வெளியேறி உள்ளார்.
    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி ஃபிளவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் முல்தான் சுல்தான்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். 

    நடப்பு சாம்பியனான முல்தான் சுல்தான்ஸ் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் 2022 சீசனில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாக் அவுட்டுக்கு தகுதி பெறும் முதல் அணியாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டிஃபிளவர் பாதியிலேயே வெளியேறி உள்ளார். நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் 
    இடம் பிடித்துள்ள புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் தலைமை பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பிளவர் பங்கேற்க உள்ளார். 

    இதற்காக பெங்களூருவில் அவர் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    இதனால் பாகிஸ்தானின் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு அவர் தொடர்ந்து பயிற்சி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு பின்னவடைவாக கருதப்படுகிறது.

    எனினும் பிப்ரவரி 13 தேதி பிறகு ஆன்டிஃபிளவர்  பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிப்ரவரி 16ந்தே கராச்சி கிங்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஆண்டி ஃப்ளவர் பயிற்சி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம்  ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு அவர் இந்தியா திரும்புவார் என தெரிகிறது.

    ஐ.பி.எல்.தொடரில் விளையாடியது தனது ஆட்டத்தை மேம்படுத்த உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஐ.பி.எல் தொடர்களின் மூத்த வீரராகவும் திகழ்கிறார். இதுவரை 150 ஐ.பி.எல்.
    போட்டிகளில் விளையாடி 5449 ரன்கள் குவித்துள்ள அவர், அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். 

    35 வயதான டேவிட் வார்னர்  ஐ.பி.எல்.தொடரில் 50 அரை சதங்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். 

    இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீயுடனான கலந்துரையாடல் ஒன்றில் அவர் பேசியதாவது:

    ஐ.பி.எல்.உலகின் சிறந்த போட்டித் தொடர். நான் இந்தியாவுக்குச் செல்லும்போது, ​​ உலகின் சிறந்த போட்டியில் விளையாடுவதைப் பார்க்கிறேன். டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டியாக இருந்தாலும், பயிற்சி மற்றும் நுண்ணறிவு எனக்கு நிறைய கிடைக்கிறது.

    இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம் உள்ளூர் மக்களின் வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன். 

    இந்திய ஆதரவாளர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு அமோகமானது. எதிர்காலத்தில் இந்தியாவில் விளையாட்டு மேம்பாட்டிற்காக இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

    எனக்கு முதன்மையான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக என் குடும்பத்தையும்  என்னையும் வெளிப்படையாக இருகரம் நீட்டி வரவேற்றுள்ளனர். 

    நான் வெளியே செல்வதையும், அங்குள்ள மக்களைச் சந்திப்பதையும் விரும்புகிறேன். சில சமயங்களில் அது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். 

    உள்ளூர் மக்களுடன் இணைந்திருப்பது எனக்குப் பிடிக்கும். அவர்கள் எனக்கு அவ்வளவு கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் இந்தியாவுக்கு கடன் பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். இவ்வாறு வார்னர் குறிப்பிட்டுள்ளார்.

    விராட் கோலி கேப்டன் பதவி விவகாரத்தில் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி மீது சிலர் விமர்சனம் எழுப்பிய நிலையில், தேர்வுக்குழுவில் இடம் பெற்றதாக வெளியான படம் சர்ச்சையை கிளப்பியது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து திறம்பட செய்து வருகிறார். இவர்தான் முதன்முறையாக இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார்.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தொடர்களை நடத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறப்பட்டது.

    விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான், கிரிக்கெட்டில் தாதாவாக செயல்பட்ட கங்குலி, கிரிக்கெட் வாரியத்திலும் தாதாவாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் தேர்வில் தலையிடுகிறார் விமர்சனம் எழுந்தது. உச்சக்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் படம் ஒன்று பரவி வருகிறது.

    தற்போது, அந்த படம் தேர்வுகுழு அணியை தேர்வு செய்யும்போது எடுத்தப்படம் அல்ல என சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ஆதாரற்ற குற்றச்சாட்டிற்கு மதிப்பளித்து யாருக்கும் பதில் அளிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. நான் பிசிசிஐ தலைவர். தலைவராக பிசிசிஐ-க்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கிறேன்.

    மேலும், நான் தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் இருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.

    விராட் கோலி, ரோகித் சர்மா, ஜெய் ஷா ஆகியோருடன் நான் இருக்கும் படம் தேர்வுக்குழு கூட்டத்தின்போது எடுத்த படம் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

    கங்குலி

    ஜெயேஷ் ஜார்ஜ் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவராக இல்லை. இந்தியாவுக்காக நான் 424 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ளேன். இந்த நேரத்தில் மக்களிடம் இதுகுறித்து நினைவூட்டுவது மோசமான ஐடியா இல்லையா?’’ என்றார்.

    24 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட இருப்பது, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
    பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சென்று முன்னணி அணிகள் விளையாட மறுப்பு தெரிவித்து வந்தன. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அதிதீவிர முயற்சியால்  வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்ல ஆரம்பித்தனர். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடின.

    கடந்த வருடம் இறுதியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானில் விளையாடுவதாக இருந்தது. நியூசிலாந்து போட்டி தொடங்குவதற்கு சற்றுமுன் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடரை ரத்து செய்தது. அதன்பின் இங்கிலாந்து அணியும் தொடரை ரத்து செய்தது.

    இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. பல கட்டங்களாக பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய அதிகாரிகள் பாகிஸ்தான் சென்றனர். அவர்கள் பாதுகாப்பு குறித்து திருப்தி தெரிவிக்க ஆஸ்திரேலியா பாகிஸ்தான் செல்ல முடிவு செய்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவித்துள்ளது.

    அதன்படி ஆஸ்திரேலியா பாகிஸ்தான் சென்று மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போடடி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    கோப்புப்படம்

    முதல் டெஸ்ட் ராவல் பிண்டியில் மார்ச் 4-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கராச்சியில் 12-ந்தேதியும், 3-வது டெஸ்ட் லாகூரில் 21-ந்தேதியும் தொடங்குகிறது.

    ஒருநாள் போட்டிகள் ராவல் பிண்டியில் நடைபெறுகின்றன. முதல் ஒருநாள் போட்டி மார்ச் 29-ந்தேதியும், 2-வது ஒருநாள் போட்டி மார்ச் 31-ந்தேதியும், 3-வது ஒருநாள் போட்டி ராவல் பிண்டியில் ஏப்ரல் 2-ந்தேதியும், ஒரேயொரு டி20 ஏப்ரல் 5-ந்தேதி ராவல் பிண்டியிலும் நடக்கிறது.

    ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய பெருமையை அவர் பெற்றார்.
    ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையில் 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை 127 ரன்னில் சுருண்டது.

    இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம் சதம் (135 ரன்) மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய பெருமையை அவர் பெற்றார்.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது இஷான் கி‌ஷனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டித்தொடர் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. முதல்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும் வலை பந்துவீச்சாளர் ஷைனி மற்றும் உதவியாளர் 3 பேருக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து இந்திய அணியில் கூடுதல் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் நேற்று சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இந்திய அணியில் இஷான் கி‌ஷனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.

    ஆன்டிகுவா:

    14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19வயதுக்குட்பட்டோர்) வெஸ்ட் இன்டீசில் நடந்து வருகிறது.

    16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடர் அரைஇறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியன் வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உகாண்டா, பப்புவா, நியூ கினியா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    முதல் அரை இறுதியில் ஆப்கானிஸ்தானை 15 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. நேற்று முன்தினம் நடந்த 2-வது அரை இறுதியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற் கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி தொடர்ந்து 4-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஒட்டு மொத்தமாக 8-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் (2000, 2006, 2008,2012, 2016, 2018,2020) நுழைந்தது.

    கோப்பை யாருக்கு என்பதற்கான இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    4 முறை சாம்பியனான (2000, 2008,2012, 2018) இந்தியா 5-வது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. யாஷ்துல் தலைமையிலான இந்திய அணியில் ரகுவன்‌ஷஷி, ஷேக் அஷீத், ஹர்நுர்சிங் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    இதில் ரகுவன்ஷி 5 ஆட்டத்தில் 278 ரன் எடுத்துள்ளார். அரை இறுதி ஆட்டத்தில் கேப்டன் யாஷ்துல் சதம் அடித்து அசத்தினார். பந்து வீச்சில் ரவிக்குமார், ராஜ்வர்தன், விக்கி ஆஸ்ட்லால், நிஷாந்த் சிந்து ஆகியோர் சிறப்பான நிலையில உள்ளனர்.

    பேட்டிங் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. இங்கிலாந்து அணி பேட்டிங்கில் கேப்டன் டாம் பெர்ஸ்ட் 292 ரன் (5 ஆட்டம்) பெற்றுள்ளார். ஜார்ஜ் தாமஸ், ஜார்ஜ் பெல்ஜேக்கப் பெத்ஹெல், வில்லியம் லக்ஸ்டன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    பந்து வீச்சில் ஜோஸ்வா பாஸ்டன், ரெஹான் அகமது, தாமஸ் ஸ்பின்வால், ஜேம்ஸ் சேல்ஸ் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி 1998-ம் ஆண்டு கோப்பையை வென்றது. தற்போது 2-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் சமபலத்துடன் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக இயக்குனராக முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆசஷ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டி கொண்ட அந்த தொடரை 0-4 என்ற கணக்கில் இங்கிலாந்து இழந்தது. ஒரு டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது.

    ஆசஷ் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கேப்டன் ஜோ ரூட் மற்றும் அணி நிர்வாகம் மீது முன்னாள் வீரர்கள் தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஆசஷ் தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் ஆஷ்லே ஜைல்ஸ் விலகினார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து சில்வர் வுட் விலகியுள்ளார். அவரை பயிற்சியாளர் பதவியில் ஆஷ்லே ஜைல்ஸ் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஷ்லே ஜைல்ஸ் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விலகிய மறுநாளே சில்வர் வுட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சில்வர்வுட் கூறும் போது, ‘இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பது மிகப்பெரிய கவுரவம். இங்கிலாந்து வீரர்கள் மற்றும் வீரர்களுடன் இணைந்து பணியாற்றியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அணியுடன் எனது நேரத்தை மிகவும் ரசித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் கூறும் போது, ‘இங்கிலாந்து ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர்வுட் விலகியுள்ளார். அவரது எதிர்காலத்துக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக இயக்குனராக முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி டாம் ஹாரிசன் கூறும்போது, ‘மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு இங்கிலாந்து அணிக்கான இடைக்கால பயிற்சியாளரை ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் நியமிப்பார். பின்னர் பொருத்தமான பயிற்சி அமைப்புகளை நியமிப்பதற்கான ஆலோசனைகள் நடைபெறும்’ என்று தெரிவித்தார்.
    மனித உரிமை மீறல்கள் காரணமாக பீஜிங் ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
    பீஜிங்:

    சீன தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இது வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 

    இந்தியா சார்பில் ஒரே வீரராக ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான் மட்டுமே தகுதி பெற்றுள்ளார்.

    ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா பீஜிங்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைக்கிறார்.

    2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பங்கேற்ற சீனப்படை கமாண்டர் கியூ பபாவுக்கு குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை தொடர் ஓட்டமாக எடுத்து செல்லும் வாய்ப்பை சீனா வழங்கியது. சீனாவின் இந்த செயலால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. 

    இந்நிலையில், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு விழாவை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், குளிர்கால ஒலிம்பிக் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார். 

    வீரேந்திர சேவாக்கைப் போன்ற ஆக்ரோஷமான பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷா என்று மைக்கேல் கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.
    தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியுள்ளதாவது:

    அவர்(பிருத்வி ஷா) சேவாக்கைப் போன்ற ஒரு அற்புதமான வீரர். சேவாக் ஒரு மேதை, விளையாட்டை எப்போதும் அவர் முன்னோக்கி எடுத்துச் சென்வார். என்னைப் போன்றவர்களுக்கு, அந்த வகை கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். 

    அவர் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன். அதனால்தான் சேவாக் எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவராக இருந்தார். பிருத்வி ஷா போன்று வீரர் மீது இந்தியா நம்பிக்கை வைத்திருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். 

    இருப்பினும், பல்வேறு வடிவ கிரிகெட் விளையாட்டில் இந்தியாவிற்காக விளையாடும் போது அந்த இளைஞன் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணர்ந்திருப்பான். சர்வதேச கிரிக்கெட்டில் நிலைபெற அவருக்கு அதிக நேரம் தேவை. 

    ஆஸ்திரேலியாவில் இது அவருக்கு முதல் வாய்ப்பு. அவர் எப்படி செல்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவருக்கு ஒவ்வொரு மாற்றமாக கொடுக்க வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை தவற விட்டார்.

    இது அவரது முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம், அவர் நன்றாக வருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு மைக்கேல் கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.

    ஐ.பி.எல்.ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது தனிப்பட்ட விருப்பமான அணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. 550-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

    இந்த நிலையில், எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் விளையாடுவது குறித்து பல வீரர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். அந்த வரிசையில் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடாவும் இணைந்துள்ளார்.  26 வயதான ஹூடா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளார். 

    எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகன் என்றும், அவரது தலைமைத்துவத்தையும் போற்றுவதாகவும் ஹூடா தெரிவித்துள்ளார். தோனியின் கீழ் விளையாட விரும்பும் குழந்தை போல் நான் இருக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் தனது தனிப்பட்ட விருப்பமான அணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே.கேப்டனுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தோனியின் அமைதியான நடத்தை மற்றும் அணுகுமுறை அவரை சக வீரர்களிடம் இருந்து வேறுபடுத்தியதாகவும்  முன்னாள் இந்திய கேப்டனுடன் பலமுறை உரையாடியதாகவும் ஹூடா குறிப்பிட்டுள்ளார். 

    ஐ.பி.எல்.தொடரில் கடந்த இரண்டு வருடங்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹூடா விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ரகானே, புஜாரா ஆகியோர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட செல்வார்கள் என நம்புவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும் இவர்கள் இருவரும் சரியாக விளையாடவில்லை. இருவருடைய 12 இன்னிங்சில் ஒரு அரைசதம் மட்டுமே கிடைத்தன.

    இதனால் அணியில் இருந்து இருவரையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தன. ஆனால், பிசிசிஐ இருவர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில், பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, இருவரும் ரஞ்சி டிராபி தொடருக்கு விரைவார்கள். இங்கு சென்று ரன்கள் குவித்து மீண்டும் ஃபார்முக்கு வருவார்கள் என்ற நம்புவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், சர்வதேச போட்டிகளில் விளையாடிய பின்னர், ரஞ்சி போட்டிக்கு செல்வதால், எந்த பிரச்சினையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. ரஞ்சி டிராபி மிகப்பெரிய தொடர். நாங்கள் அதில் விளையாடியுள்ளோம் என்றார்.

    கங்குலி ஃபார்ம் இல்லாமல் தவித்தபோது, 2005-ல் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடி மீண்டும் அணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×