என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெய்ன்ஸ்க்கு குடலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
    கான்பெர்ரா:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான கிறிஸ் கெய்ன்ஸ் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 5 மாதத்துக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு பக்கவாதத்தால் கால்கள் செயல் இழந்தன. இதற்காக ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற 51 வயதான கிறிஸ் கெய்ன்ஸ் கடந்த வாரம் வீடு திரும்பினார். 

    இந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கெய்ன்ஸ்க்கு குடலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவலை கெய்ன்ஸ் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். அதில் ‘அடுத்தகட்ட போராட்டத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், இந்த பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும் என நம்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    15 கிலோமீட்டர் ஸ்கியாத்லான் பந்தயத்தில் நார்வே வீராங்கனை தெரசி ஜோஹாக் 44 நிமிடம் 13.7 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார்.
    பீஜிங்:

    24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. முழுக்க முழுக்க உறைபனியில் நடக்கும் இந்த போட்டியில் முதலாவது தங்கப்பதக்தக்தை நார்வே தட்டிச் சென்றது. பெண்களுக்கான 15 கிலோமீட்டர் ஸ்கியாத்லான் பந்தயத்தில் (காலில் சக்கர பலகை கட்டிக்கொண்டு ஐஸ்கட்டி பாதையில் சறுக்கியும், கம்பு ஊன்றியும் ஓடுவது) நார்வே வீராங்கனை தெரசி ஜோஹாக் 44 நிமிடம் 13.7 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். 

    ரஷிய வீராங்கனை நதாலியா நேப்ரியேவா வெள்ளிப்பதக்கம் பெற்றார். 33 வயதான ஜோஹாக் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 1½ ஆண்டு கால தடை காரணமாக 2018-ம்ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

    பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகியோர் பிரதான பவுலர்களாக இருக்கிறார்கள்.
    அகமதாபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இது இந்தியாவின் 1,000-வது ஒரு நாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டும் முதல் அணி இந்தியா தான். ஆனால் வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒரு நாள் தொடர் ரசிகர்கள் இன்றியே நடக்க உள்ளது.

    விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய நிலையில், இந்திய அணி புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தொடரில் இருந்து ரோகித் சர்மா- பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணியின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

    ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய முகாமுக்குள் ெகாரோனா ஊடுருவி அச்சுறுத்துகிறது. ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய முன்னணி வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட மாற்று தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 3 நாள் தனிமைப்படுத்துதலை இன்னும் நிறைவு செய்யாததால் அவரால் முதலாவது ஆட்டத்தில் விளையாட முடியாது. தனிப்பட்ட காரணங்களுக்காக லோகேஷ் ராகுல் ஏற்கனவே முதல் ஆட்டத்திற்கான அணியில் இடம் பெறவில்லை.

    இதனால் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் காணும் அதிர்ஷ்டம் இஷான் கிஷனுக்கு கிட்டியுள்ளது. மற்றொரு தொடக்க வீரர் வாய்ப்புக்கு அணியில் இஷான் கிஷன் மட்டுமே உள்ளார். இதனால் அவர் என்னுடன் இணைந்து தொடக்க வீரராக ஆடுவார் என்று கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    முன்பு யுஸ்வேந்திர சாஹல்- குல்தீப் யாதவ் இணைந்து சுழல் தாக்குதலில் பல ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தனர். இவர்கள் இப்போது மீண்டும் ஒரு சேர அணியில் இடம் பிடித்துள்ளனர். அவர்களை மறுபடியும் ஒன்றாக களம் இறக்குவது குறித்து தனது மனதில் இருப்பதாகவும், ஆனால் குல்தீப் காயத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்திருப்பதால் அவரை உடனடியாக விளையாட வைப்பதில் அவசரம் காட்டமாட்டோம் என்றும் ரோகித் குறிப்பிட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் சந்தேகம் தான்.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி நல்ல பார்மில் இருந்தாலும் 2 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க முடியாமல் போராடுகிறார். உள்ளூர் தொடரிலாவது அந்த ஏக்கத்தை தணிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். மிடில் வரிசையில் ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ் வலு சேர்க்கிறார்கள்.

    பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகியோர் பிரதான பவுலர்களாக இருக்கிறார்கள். இங்குள்ள ஆடுகளம் சற்று வேகம் குறைந்தது என்பதால் சுழலின் தாக்கம் இருக்கக்கூடும். எனவே யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புதுமுகம் ரவி பிஷ்னோய் ஆகியோரில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    அண்மையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்த இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் ஆயத்தமாகி வருகிறது.

    உள்ளூரில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தோடு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை எதிர்த்து மல்லுகட்ட உள்ளது. பொல்லார்ட், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் அதிகமாக சார்ந்து இருக்கிறது. பந்து வீச்சில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ள கெமார் ரோச், ஜாசன் ஹோல்டர், அகேல் ஹூசைன் நம்பிக்கை அளிக்கிறார்கள். 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயார்படுத்தும் வகையில் இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ள அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். வெஸ்ட்இண்டீசை பொறுத்தவரை ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் அபாயகரமான அணி தான். அதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 133 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 64-ல் இந்தியாவும், 63-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 4 ஆட்டத்தில் முடிவில்லை.

    இந்த மைதானத்தில் இந்திய அணி 15 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு 7 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி கண்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் 5 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானம் இடித்து புதிதாக கட்டப்பட்டு உலகின் மிகப்பெரிய மைதானமாக உருவான பிறகு இங்கு நடக்கும் முதல் ஒரு நாள் போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா அல்லது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், முகமது சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ். ஷாருக்கான்

    வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிரான்டன் கிங் அல்லது கிருமா பொன்னெர், நிகோலஸ் பூரன், ஷமார் புரூக்ஸ், டேரன் பிராவோ, பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கெமார் ரோச், ஹைடன் வால்ஷ், அகேல் ஹூசைன், ஒடியன் சுமித் அல்லது ரொமாரியோ ஷெப்பர்டு.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் முதலாவது ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் ஷாருக்கான் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஆமதாபாத்:

    வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இப்போது முதலாவது ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் ஷாருக்கான் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
    தமது குற்றத்தை ஷாஜாத் ஒப்புக் கொண்டதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    டாக்கா:

    வங்காளதேசத்தில் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொமிலா விக்டோரியன்ஸ் மற்றும் மினிஸ்டர் குரூப் டாக்கா இடையேயான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

    அப்போது களத்தில் இருந்த சில வீரர்களில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷாஜாத் புகை பிடித்துள்ளார். இதைக்கண்ட மூத்த பேட்ஸ்மேன் தமிம் இக்பால் அவரை டிரஸ்ஸிங் அறைக்குள்  செல்லுமாறு கூறியுள்ளார். 

    இது குறித்த புகைப்படங்கள் சமூக வளைதங்களில் வைரலாகியது. இதையடுத்து ஷாஜாத்தை பயிற்சியாளர் மிசானூர் ரஹ்மான் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் போட்டியை நடத்தும் அதிகாரிகளும் முகமது ஷாஜாதிற்கு கண்டனம் தெரிவித்தனர். 

    இதனிடையே நடத்தை விதியை மீறியதாக ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ஷாஜாதிற்கு ஒழுங்கு முறை பதிவில் குறைபாடு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது. தமது குற்றத்தை ஷாஜாத்  ஒப்புக்கொண்டதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

     
    ஒவ்வொரு வீரருக்கும் ரூ.40 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
    19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

    இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கங்குலி, ஜெய் ஷா

    இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார். 

    இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், முன்மாதிரியான செயல் திறனுக்காக ஒரு வீரருக்கு ரூ.40 லட்சமும், துணை ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமும் வெகுமதி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள்இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது.
    ஆன்டிகுவா:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வந்தது.ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

    இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தத்தளித்தது. இந்திய வீரர்கள் ராஜ் பவா, ரவி குமாரின் பந்து வீச்சில் தடுமாறிய இங்கிலாந்து அணி 44.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடி 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 

    அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ரிவ் 116 பந்தில் 95 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் ராஜ் பவா 5 விக்கெட்களையும், மற்றொரு பந்து வீச்சாளர் ரவி குமார் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.கேப்டன் யாஷ் துல் 17 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். 

    எனினும் இந்திய வீரர்கள் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, ராஜ்பாவா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகியோர் அரைச்சதம் அடித்தனர். ராஜ்பாவா 35 ரன்கள் எடுத்தார். 

    இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி

    இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த இந்தியா, ஐந்தாவது முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

    அது ஒரு ஆட்டம் என தாம் உணர்ந்தாலும் தோல்வி இன்னும் தமக்கு வலியை தருவதாகவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.
    2016ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்வி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலைவராக இருந்த விராட் கோலி தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

    அது இன்னும் வலிக்கிறது. அந்த நாளில் நாங்கள் போதுமானதாக விளையாடவில்லை.அது ஒரு விளையாட்டு என்று நான் நினைக்கிறேன்,ஆனால் அது வலிக்கிறது.கோப்பையை வெல்ல அணிக்கு வாய்ப்புகள் இருந்தன.
    ஆனால் நெருக்கடியான தருணத்தில் இரண்டாவது சிறந்த அணியாக இருந்தது.

    கேப்டனாக பட்டம் வெல்லாதது என்னை ஏமாற்றமடையச் செய்கிறது. வெற்றி பெறாததற்குக் காரணம் தைரியமாகவோ அல்லது எங்கள் திட்டங்களில் தெளிவாகவோ இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

    இன்றுவரை, அந்த விளையாட்டு ஒளிபரப்பப்படும்போது  கே.எல். ராகுல் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து, அது இன்னும் வலிக்கிறது என்று கூறுவார். இவ்வாறு கோலி குறிப்பட்டுள்ளார்.

    ராஜ் பவா, ரவி குமாரின் பந்து வீச்சில் சிக்கித் தவித்த இங்கிலாந்து 44.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ரவி குமார்
    4 விக்கெட் வீழ்த்திய ரவி குமார்

    4-வது வீரராக களம் இறங்கிய ஜேம்ஸ் ரிவ் சிறப்பாக விளையாடி 116 பந்தில் 95 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 44.5 ஓவரில் 189 ரன்கள் அடித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் ராஜ் பவா சிறப்பாக பந்து வீசி 9.5 ஓவரில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

    மற்றொரு பந்து வீச்சாளர் ரவி குமார் 9 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுதது 4 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
    1000-வது போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய அணி 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது குறித்து கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் கூறியதாவது:-

    இந்திய அணி நாளை 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இதில் விளையாடும் முதல் அணியாக இந்தியா இருப்பது அற்புதமான தருணமாக நான் நினைக்கிறேன். முன்னாள் வீரர்கள், இன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் என எல்லோரும் இதற்கு காரணமாக இருந்தனர். ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் இதற்கு பங்களிப்பாக இருந்தன.

    2011-ல் உலக கோப்பையை கையில் ஏந்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்ததாகும். 24 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்ற இந்த தருணம் மிகவும் முக்கியமானது.

    1983-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது என் வாழ்க்கையில் திருப்பு முனையாகும். இந்த போட்டியை பார்த்ததும்தான் எனக்கு கிரிக்கெட் மீதான உத்வேகம் ஏற்பட்டது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010-ம் ஆண்டு குவாலியர் மைதானத்தில் இரட்டை சதம் அடித்தேன். ஒருநாள் சர்வதேச போட்டியில் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும். இதுவே எனது சிறந்த ஆட்டமாகும்.

    ஏனென்றால் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சில் மிகவும் வலுவாக இருந்தது. சிறந்த அணிக்கு எதிராகவே முதல் முறையாக இரட்டை சதம் அடித்தேன். அதற்கு பிறகுதான் மற்ற வீரர்கள் இரட்டை சதம் அடித்தனர்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி சிறந்ததாகும். 1000-வது போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொடரை கைப்பற்ற வீரர்களை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

    300-வது போட்டிக்கு தெண்டுல்கரும், 500-வது போட்டிக்கு கங்குலியும், 600-வது போட்டிக்கு ஷேவாக்கும், 700, 800, மற்றும் 900-வது போட்டிகளுக்கு டோனியும் கேப்டனாக இருந்துள்ளனர்.
    அகமதாபாத்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி புதிய வரலாற்றை படைக்கிறது. 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை புரிய உள்ளது.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஜனவரி 5-ந் தேதி மெல்போர்னில் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    இந்திய அணி முதல் முறையாக 1974-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது.இதில் 4 விக்கெட் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது.

    ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை உலகளவில் 28 அணிகளால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. ஐ.சி.சி.யின் அங்கீகாரம் படி டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 அணிகளுக்குத்தான் நிரந்தர ஒருநாள் போட்டி அணி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் அந்த அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஒருநாள் ஆட்டத்தில் 1000-வது போட்டியில் விளையாட உள்ள முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இதற்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியா அந்த நிலையை அடையும்.

    ஆயிரமாவது ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார்.

    முதல் போட்டிக்கு அஜீத் வடேகரும், 100-வது போட்டிக்கு கபில்தேவும், 200-வது மற்றும் 400-வது போட்டிக்கு அசாருதீனும், 300-வது போட்டிக்கு தெண்டுல்கரும், 500-வது போட்டிக்கு கங்குலியும், 600-வது போட்டிக்கு ஷேவாக்கும், 700, 800, மற்றும் 900-வது போட்டிகளுக்கு டோனியும் கேப்டனாக இருந்துள்ளனர்.

    புதிய சாதனை நிகழ்த்த உள்ள இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 2 உலக கோப்பையை வென்றுள்ளது. 1983-ல் கபில்தேவ் தலைமையிலான அணியும், 2011-ல் டோனி தலைமையிலான அணியும் உலக கோப்பையை வென்று கொடுத்தன.

    இது தவிர ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை (2002, 2013) கைப்பற்றியது, 1985-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றது, 1998-ல் சுதந்திரதின கோப்பையை கைப்பற்றியது, 2002-ல் நாட்வெஸ்ட் டிராபியை கைப்பற்றியது. 2008-ல் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது உள்ளிட்டவை முக்கியமானது ஆகும்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங் குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 1000-வது போட்டி என்பதால் இந்திய அணி விளையாடும் ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

    ரோகித் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு விளையாட உள்ள முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். நாளைய ஆட்டம் பகல்- இரவாக நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    நாளைய போட்டியில் இரு அணிகளிலும் விளையாடலாம் என்று எதிர் பார்க்கப்படும் 11 வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரி‌ஷப்பண்ட், வாஷிங் டன் சுந்தர், ‌ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், சிராஜ், சாஹல்.

    வெஸ்ட் இண்டீஸ்: பொல்லார்ட் (கேப்டன்), ‌ஷய் ஹோப், பிரன்டன் கிங், புரூக்ஸ், பூரன், ஹோல்டர், பேபியன் ஆலன், ஷெப்பர்டு, ஓடியன் சுமித், அல்ஜாரி ஜோசப், கேமர்ரோச்.

    இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர்- சவுரவ் கங்குலி ஜோடி அதிக ரன்கள் குவித்த சாதனையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஜோடி என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சவுரவ் கங்குலி- சச்சின் தெண்டுல்கர் ஜோடிதான். இந்த ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலங்கள் விளையாடின. ஒருநாள் கிரிக்கெட்டில் 176 இன்னிங்சில் விளையாடி 8227 ரன்கள் குவித்துள்ளது. சராசரி 47.55 ஆகும்.

    அதன்பின் ரோகித் சர்மா- தவான் ஜோடி 5023 ரன்கள் குவித்துள்ளது. இருவரும் இணைந்து 112 இன்னிங்சில் அந்த ரன்னை அடித்துள்ளனர். சராசரி 45.25 ஆகும்.

    ரோகித் சர்மா உடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்காவிட்டாலும், இந்த ஜோடி அதிக ரன்கள் குவித்தள்ளது. இதுவரை 81 இன்னிங்சில் 4906 ரன்கள் குவித்துள்ளது. சராசரி 64.55 ஆகும்.

    விராட் கோலி- ரோகித் சர்மா

    வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி 94 ரன்கள் அடித்தால், 5000 ரன்களை கடந்த ஜோடி என்ற சாதனையில் இணைவார்கள்.

    மற்ற ஜோடிகள் 100 இன்னிங்ஸ்க்கு மேல் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ள நிலையில், ரோகித் சர்மா- விராட் கோலி ஜோ 81 இன்னிங்சிஸ் மட்டுமே விளையாடி 4906 ரன்கள் குவித்துள்ளது.
    ×