என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சவுரவ் கங்குலி
    X
    சவுரவ் கங்குலி

    2022 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து சவுரவ் கங்குலி தகவல்

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.
    இந்தியாவில் 2008-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்போது வெளிநாட்டில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    கடந் 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு 2-வது பகுதி ஆட்டம் அங்கேதான் நடைபெற்றது.

    கடந்த இரண்டு வருடங்களாக இந்திய ரசிகர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டை ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒமைக்ரான் வைரஸ் பரவலால் இந்தியாவில் 3-வது அலை உருவாகியுள்ளது.

    தற்போது வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. இருந்தாலும், போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் போட்டியை நடத்தவும் பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம் குறித்து கங்குலி கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை தொடும்வரை, இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் இந்தியாவில்தான் நடைபெறும். போட்டி நடைபெறும் இடத்தை பொறுத்தவரை, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே ஆகியவற்றை பார்த்து வருகிறோம். நாக்அவுட் போட்டிக்கான இடங்கள் குறித்து பின்னர் முடிவு செய்வோம்’’ என்றார்.

    ஐ.பி.எல். 2022 தொடர் எப்போது தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக பி.சி.சி.ஐ. அறிவிக்காத நிலையில், ஜெய் ஷா மார்ச் மாதத்தில் தொடங்கும் என அறிவித்துள்ளார்.
    Next Story
    ×