என் மலர்
விளையாட்டு

இஷான் கிஷான்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இஷான் கிஷான் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது இஷான் கிஷனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டித்தொடர் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. முதல்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும் வலை பந்துவீச்சாளர் ஷைனி மற்றும் உதவியாளர் 3 பேருக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து இந்திய அணியில் கூடுதல் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் நேற்று சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இந்திய அணியில் இஷான் கிஷனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story






