என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம்
    X
    பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம்

    ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: சதம், 5 விக்கெட் - பாகிஸ்தான் கேப்டன் சாதனை

    ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய பெருமையை அவர் பெற்றார்.
    ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையில் 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை 127 ரன்னில் சுருண்டது.

    இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம் சதம் (135 ரன்) மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய பெருமையை அவர் பெற்றார்.
    Next Story
    ×