என் மலர்tooltip icon

    விளையாட்டு

    590 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் வருகிற 12, 13-ந்தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது.
    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பி.சி.சி.ஐ.யால் நடத்தப்பட்டு வருகிறது. உலகளவில் இந்த டி20 கிரிக்கெட் தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. வீரர்கள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்படுகிறார்கள். இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதைவிட, ஐ.பி.எல். தொடரில் விளையாட கிரிக்கெட் வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு வரை 8 அணிகள் விளையாடி வந்தன. தற்போது இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து வீரர்களும் புதிதாக ஏலம் விடப்படுகிறார்கள். ஏற்கனவே உள்ள 8 அணிகள் தலா 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். புதிய அணிகளும் நான்கு வீரர்களை அதுபோன்று தக்க வைத்துக் கொள்ளலாம்.


    மீதம் உள்ள வீரர்கள் பொது ஏலத்தில் எடுக்கப்படுவார்கள். அதற்கான மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 590 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


    நான் கேப்டனாக இருக்க வேண்டியது இல்லை. அணியின் வளர்ச்சிக்காக அடுத்த கட்டம் என்ன என்பதை உணர்ந்து டோனி கேப்டன் பதவியை என்னிடம் வழங்கினார். அதே மனநிலையில்தான் நானும் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.

    புதுடெல்லி:

    விராட் கோலியின் 7 ஆண்டுகால கேப்டன் சகாப்தம் சமீபத்தில் முடிவடைந்தது. 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து அவர் முதலில் விலகினார். ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. யாரும் எதிர்பாராத வகையில் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.

    இந்த நிலையில் எனக்கு நான் எப்போதுமே கேப்டன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எந்த ஒன்றுக்குமே கால அவகாசம் இருக்கிறது. அதை நாம் எப்போதுமே உணர்ந்திருக்க வேண்டும். நாம் என்ன சாதித்து விட்டோம்? என்று மற்றவர்கள் விமர்சிக்கலாம். ஆனால் முன்னேற்றத்தையும், சாதனைகளையும் எட்டும் போது நாம் நமது வேலையை சரியாக செய்திருக்கிறோம் என்று நமக்குத் தெரியவரும்.

    தற்போது நான் ஒரு பேட்ஸ்மேனாக அணியின் வெற்றிக்கு அதிக பங்களிப்பு செய்ய முடியும். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்து வேன்.

    எனக்கு அதில் கிடைக்கும் பெயர் போதுமானது. இதற்காக நான் கேப்டனாக இருக்க வேண்டியது இல்லை. அணியின் வளர்ச்சிக்காக அடுத்த கட்டம் என்ன என்பதை உணர்ந்து டோனி கேப்டன் பதவியை என்னிடம் வழங்கினார். அதே மனநிலையில்தான் நானும் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.

    தகுந்த நேரத்தில் முடிவுகள் எடுத்து அடுத்த கட்டத்துக்கு செல்வதும் தலைமை பண்பின் குணம் தான். நான் எப்போதுமே எனக்கு கேப்டனாகவே இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு புல்ஸ் அணி 8 வெற்றி, 7 தோல்வி, 1 டிரா என மொத்தம் 46 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யு மும்பா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே டெல்லி அணி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், தபாங் டெல்லி 36 - 30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தபாங் டெல்லி அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 32 - 26 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்தது.
    புவனேஷ்வர் குமாருக்கு பதில் தீபக் சஹார் சிறப்பாக விளையாடுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
    மும்பை:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது.

    இந்த தொடர்தான் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதேசமயம் 60 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார்.

    3-வது போட்டியில் அவருக்கு பதில் களமிறங்கிய தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் பேட் செய்து 54 ரன்களையும் அடித்தார். இந்நிலையில் புவனேஷ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றுள்ளார். 

    புவனேஷ்வர் குமார் தனது வேகத்தையும், துல்லியமான பந்துவீச்சையும் இழந்துவிட்டார். அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    அவர் மீண்டும் ஆரம்ப கட்ட பயிற்சியை தொடங்கி, மெல்ல தன்னை மேம்படுத்தினால் மட்டுமே பழைய நிலைக்கு திரும்ப முடியும். அப்படி செய்தால் மட்டுமே, உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடிக்க முடியும்.
    அதுவரை  தீபக் சஹாரை பயன்படுத்தலாம். தீபக் சஹாரால் இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்ய முடியும். பேட்டிங்கிலும் உதவக் கூடியவர். இதுவரை 2 அரை சதங்களை விளாசியுள்ளார்.

    தீபக் சஹார் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால், அவரையே வழக்கமான வீரராக சேர்த்துக்கொள்ளலாம். புவனேஷ்வர் குமார் சிறப்பாகத்தான் செயல்பட்டிருக்கிறார். இருப்பினும், நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவெடுத்துத்தானே ஆக வேண்டும்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கிரிக்கெட் உயிர் போன்றது என்பதால் இந்திய அணி கேப்டனுக்கு பொறுப்பு அதிகம் என ரிக்கி பாண்டிங் கூறினார்.
    சிட்னி:

    இந்திய வீரர் விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பான சர்ச்சை இன்றும் நீடித்து வருகிறது. விராட் கோலியின் தலைமை பண்பு, திறமை குறித்து உலகின் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போதே தான் கேப்டன் பதவில் இருந்து விலகுவது தொடர்பாக விராட் கோலி பேசினார் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போதே விராட் கோலி பதவி விலகுவது குறித்து என்னிடம் கூறினார். ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து விலகிவிட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கேப்டனாக இருப்பதை அவர் விரும்பினார். அவரது தலைமை பொறுப்பில் இந்திய அணி நிறைய சாதித்திருக்கிறது.

    விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியை அதிகமாக விரும்பினார். அவர் மைதானத்தில் விளையாடுவதை ஒரு மணி நேரம் பார்த்தாலே அவருக்கு கிரிக்கெட்டின் மீது உள்ள ஆர்வம் நமக்கு புரிந்துவிடும்.

    ரிக்கி பாண்டிங், விராட் கோலி

    இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது சாதாரண காரியம் அல்ல. ஏனென்றால் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கிரிக்கெட் உயிர் போன்றது. அதனாலேயே இந்திய அணி கேப்டனுக்கு பொறுப்பும் அதிகம். விராட் கோலி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக கேப்டனாக இருந்துவிட்டார்.

    விராட் கோலி கேப்டனான பின் தான் இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற தொடங்கியது. அவர் கேப்டனில் இருந்து விலகியது அதிர்ச்சியான விஷயமாக இருந்தாலும், பல சாதனைகளை படைத்த கேப்டனாக தான் விலகியுள்ளார்.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.

    டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நடால் படைத்தார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

    நடால் வென்ற கிராண்ட்சிலாம் பட்டங்கள் வருமாறு:
    ஆண்டுபட்டம்
    2005பிரெஞ் ஓபன்
    2006பிரெஞ் ஓபன்
    2007பிரெஞ் ஓபன்
    2008பிரெஞ் ஓபன்
    2008விம்பிள்டன்
    2009ஆஸ்திரேலியா ஓபன்
    2010பிரெஞ் ஓபன்
    2010விம்பிள்டன்
    2010அமெரிக்க ஓபன்
    2011பிரெஞ் ஓபன்
    2012பிரெஞ் ஓபன்
    2013பிரெஞ் ஓபன்
    2013அமெரிக்க ஓபன்
    2014பிரெஞ் ஓபன்
    2017பிரெஞ் ஓபன்
    2017அமெரிக்க ஓபன்
    2018பிரெஞ் ஓபன்
    2019பிரெஞ் ஓபன்
    2019அமெரிக்க ஓபன்
    2020பிரெஞ் ஓபன்
    2022ஆஸ்திரேலியா ஓபன்

    அதிக கிராண்ட்சிலாம் பட்டம் பெற்ற டாப் 5 வீரர்கள் வருமாறு: 

    அதிக கிராண்ட்சிலாம் பட்டம் பெற்ற டாப் 5 வீரர்கள் வருமாறு: 
    வீரர்  நாடு ஆஸ்திரேலியா ஓபன்பிரெஞ் ஓபன்விம்பிள்டன்அமெரிக்க ஓபன்மொத்தம்
    நடால்ஸ்பெயின்2132421
    பெடரர்சுவிட்சர்லாந்து618520
    ஜோகோவிச்சொர்பியா926320
    சாம்பிராஸ்அமெரிக்கா207514
    எமர்சன்ஆஸ்திரேலியா622212
    இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.
    பார்படாஸ்:

    வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20 போட்டி பார்படாசில் நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 41 ரன்னும், பாவெல் 35 ரன்னும் எடுத்தனர். 
     
    அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேம்ஸ் வின்ஸ் 55 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 41 ரன்னிலும் அவுட்டாகினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என டி20 தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்நிலையில், டி20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் ஜேசன் ஹோல்டர் ஆவார்.

    இவருக்கு முன்னதாக, அயர்லாந்தின் காம்பெர், இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் ஆகியோர் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    பார்படாஸ்:

    வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது 20 ஓவர் போட்டி பார்படாசில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் பொல்லார்டு 25 பந்தில் 41 ரன்னும், பாவெல் 17 பந்தில் 35 ரன்னும்,பிராண்டன் கிங் 34 ரன்னும் எடுத்தனர். 

    இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
     
    இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 

    இங்கிலாந்து அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்னில் வெற்றி பெற்றது. ஜேம்ஸ் வின்ஸ் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் சாம் பில்லிங்ஸ் போராடினார். அவர் 28 பந்தில் 41 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஜேசன் ஹோல்டர் கைப்பற்றினார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 - 2 என கைப்பற்றி அசத்தியது. 

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக பெடரரும், தடுப்பூசி செலுத்தாததால் ஜோகோவிச்சும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
     
    இதன்மூலம் டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நடால் படைத்தார்.

    இந்நிலையில், ரபேல் நடாலின் சாதனைக்கு சக வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

    இதுதொடர்பாக பெடரர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராமில், உங்களது அசாத்தியமான பணி நெறிமுறை, அர்ப்பணிப்பு மற்றும் போராடும் குணம் எனக்கும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பிறருக்கும் உத்வேகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், ஜோகோவிச் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அற்புதமான சாதனை. உங்களின் போராட்டக் குணம் மற்றொரு முறை வெற்றி பெற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 8 வெற்றி, 4 தோல்வி, 2 டிரா என மொத்தம் 48 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் 42 - 24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை 51 - 30 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    2-வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தையும் நடால் பெற்றார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

    4 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற இந்த போட்டியில் 2-6, 6-7, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவை தோற்கடித்து நடால் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஃபேல் நடால் படைத்தார்.

    மேலும் 2-வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தையும் நடால் பெற்றார்.

    இதற்காக இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சம் வரை அவர் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    துபாய்:

    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது விடுமுறையை கொண்டாடி வருகிறார். இதற்காக அவர் தனது காதலியும் மாடலிங் நடிகையுமான ஜார்ஜினா ரோட்ரிக்சுடன் துபாயில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஜார்ஜினா தன்னுடைய பிறந்தநாளை கடந்த 27-ம் தேதி கொண்டாடினார்.

    இதையடுத்து ஜார்ஜினாவுக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பிய ரொனால்டோ, துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் 'ஹேப்பி பர்த்டே ஜியோ' என்ற வாசகத்துடன் ஜார்ஜினாவின் புகைப்படங்களை ஒளிரச்செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 

    இதற்காக இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சம் வரை அவர் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை படம்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரொனால்டோ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×