search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grand Slam"

    • ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று நேற்று நடந்தது.
    • இத்தாலி ஜோடியை வீழ்த்தி போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெலி-ஆன்ரீயா வவாசோரி ஜோடியைச் சந்தித்தது.

    பரபரப்பாக நடந்த போட்டியில் 7-6, (7-0), 7-5 என்ற செட்களில் இத்தாலி ஜோடியை வீழ்த்தி ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த வெற்றியின் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகன் போபண்ணா படைத்துள்ளார். அவர் 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

    இந்நிலையில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போபண்ணாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெற்றிபெற வயது ஒரு தடையில்லை என்பதை ரோகன் போபண்ணா மீண்டும் மீண்டும் காட்டுகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபன் வெற்றிக்கு அவருக்கு எனது வாழ்த்துக்கள். எப்பொழுதும் நமது ஆன்மா, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே நமது திறன்களை வரையறுக்கிறது என்பதை அவரது குறிப்பிடத்தக்க பயணம் ஒரு அழகான நினைவூட்டலாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், உண்மையான திறமைக்கு எந்த எல்லைகளும் தெரியாது. ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி பெற்ற ரோகன் போபண்ணாவுக்கு வாழ்த்துகள். உங்களுடைய தளராத கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால், நீங்கள் ஒரு சர்வதேச சின்னம் ஆக உருவாகி இருக்கிறீர்கள். முரண்பாடுகளை தகர்த்து நாட்டுக்கு கவுரவம் சேர்த்துள்ளீர்கள். உங்களுடைய வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ஆஸ்திரேலியா ஓபன் 2024ல் மேத்யூ எப்டனுடன் இணைந்து நமது ரோகன்போபண்ணா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடவர் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 ஆக முன்னேறிய ரோகனுக்கு எனது வாழ்த்துக்கள் என வாழ்த்தியுள்ளார்.

    • 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.
    • 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன் மூலம் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.

    2008-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய இவர் ஆஸ்திரேலியா ஓபன் பட்டம் 10, விமிள்டன் ஓபன் பட்டம் 7, அமெரிக்க ஓபன் பட்டம் 4 பிரெஞ்சு ஓபன் பட்டம் 3 என ஆக மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

    பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார். அவரது ஜெர்ஸி எண் 24 என்பது குறிப்பிடத்தக்கது. தனது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறித்து அந்த எண்ணை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




    • பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல.

    பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார். 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோகோவிச் தனது வெற்றி குறித்து பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "23-வது சாம்பியன் பட்டத்தை வென்றது ஒரு நம்பமுடியாத உணர்வு. பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

    எனது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல. ஏனென்றால், எனது வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது எனக்கு கடினமான ஒன்றாக இருந்தது. நான் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். எனது வெற்றி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

    ×