search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    கோப்பையுடன் ரஃபேல் நடால்
    X
    கோப்பையுடன் ரஃபேல் நடால்

    21-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று நடால் வரலாற்று சாதனை!

    2-வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தையும் நடால் பெற்றார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

    4 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற இந்த போட்டியில் 2-6, 6-7, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவை தோற்கடித்து நடால் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஃபேல் நடால் படைத்தார்.

    மேலும் 2-வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தையும் நடால் பெற்றார்.

    Next Story
    ×