என் மலர்
விளையாட்டு
ஜூனியர் உலக கோப்பை தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான காலிறுதியில் இந்தியாவின் ரகுவன்ஷி, ஷேக் ரஷீத் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது.
ஆன்டிகுவா:
ஜூனியர் உலக கோப்பை காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 37.1 ஓவர்களில் 111 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மெஹரோப் அதிகமாக 30 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் ரவிகுமார் 3 விக்கெட்டும், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் சிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரகுவன்ஷி பொறுப்புடன் ஆடி 44 ரன்னில் அவுட்டானார். ஷேக் ரஷீத் 26 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், கேப்டன் யாஷ் தல் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. யாஷ் தல் 20 ரன்னுடனும், கவுஷல் தாம்பே 11 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
வங்காளதேசம் சார்பில் ரிப்பன் மண்டல் 4 விக்கெட் வீழ்த்தினார்.
ஐ.சி.சி.யின் தற்போதைய விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகங்களை அளிக்கிறது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் யூடியூப் சேனல் வாயிலாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் உரையாடினார். அப்போது அவர் ஐ.சி.சி.யை சாடினார். அப்போது அவர் கூறியதாவது:
இப்போது 3 ரிவியூக்களை அனுமதிக்கிறார்கள். சச்சின் காலத்தில் 3 ரிவியூக்கள் வைத்திருந்தால் அவர் 1 லட்சம் ரன்களை எடுத்திருப்பார்.
டெண்டுல்கர் ஒரு கடினமான பேட்ஸ்மேன். அவர் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சகாப்தத்தில் ஆடினார்.
அவருக்காக நான் உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன். இதற்கு காரணம், அவர் ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோருக்கு எதிராக விளையாடினார். ஷேன் வார்னுக்கு எதிராக விளையாடினார். பிரெட் லீ மற்றும் ஷோயப் அக்தர் ஆகியோரை எதிர்கொண்டார்.
அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினார். அதனால்தான் அவரை மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என அழைக்கிறேன் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராகும் விஸ்வநாதன் ஆனந்த்
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவிகுமார் 4 விக்கெட்டுகள், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆன்டிகுவா:
இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் ஜூனியர் உலகக் கோப்பை 2-வது காலிறுதி போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் மெஹரோப் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவிகுமார் 4 விக்கெட்டுகள், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 50 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கவுள்ளது.
இதையும் படியுங்கள்...மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் அல்ல- தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
12 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.
புது டெல்லி:
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு, 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக பணியாற்ற உள்ளார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்கான முதற்கட்ட 10 வீரர்கள் மற்றும் 10 வீராங்கனைகளை செஸ் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் அடுத்த வியாழக்கிழமை முதல் ஆலோசகராக செயல்படவுள்ளார்.
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொள்ள ஆண்கள் பிரிவில் தேர்வாகியுள்ள வீரர்கள்:-
விதித் குஜராத்தி, பி ஹரிகிருஷ்ணா, நிஹால் சரின், எஸ் எல் நாராயணன், கே சசிகிரண், பி அதிபன், கார்த்திகேயன் முரளி, அர்ஜுன் எரிகைசி, அபிஜீத் குப்தா மற்றும் சூர்யா சேகர் கங்குலி ஆகியோர் ஆவர்.
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொள்ள பெண்கள் பிரிவில் தேர்வாகியுள்ள வீரர்கள்:-
கோனேரு ஹம்பி, டி ஹரிகா, வைஷாலி ஆர், டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி, வந்திகா அகர்வால், மேரி ஆன் கோம்ஸ், சௌமியா சுவாமிநாதன் மற்றும் ஈஷா கரவாடே ஆகியோர் ஆவர்.
இவர்களில் ஆசிய செஸ் தொடரில் கலந்து கொள்வதற்கான இறுதி கட்ட 5 வீரர்களை ஏப்ரல் மாதம் தேர்வுக்குழு முடிவு செய்யும்.
இதையும் படியுங்கள்... பப்ஜி விளையாடியதை தட்டிக்கேட்டதால் குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற சிறுவன்
அமெரிக்க வீராங்கனை கோலின்ஸை 6-3, 7(7)-6(2) என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி ஆஷ்லே பார்டி ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் 27-ம் நிலை வீராங்கனையான டேனிலே கோலின்ஸை எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டை 6-3 என ஆஷ்ரே பார்டி எளிதாக கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டில் கோலின்ஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் இருவரும் செட்டை மாறிமாறி கைப்பற்றினார். இதனால் 2-வது செட் 6-6 என சமன் அடைய டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை பிரேக்கரை 7-2 என ஆஷ்லே பார்ட்டி கைப்பற்றி 6-3 ,7(7)-6(2) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றதோடு, சொந்த மண்ணில் கிராண் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
கடந்த 44 வருடமாக ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை சொந்த நாட்டைச் சேர்ந்தவர் கைப்பற்றியது கிடையாது. தற்போது அதற்கு ஆஷ்லே பார்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினம் - ரவிசாஸ்திரி
மெட்வதேவை வீழ்த்துவது என்பது நடாலுக்கு சவாலானது. அவர் கடந்த அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி இருந்தார்.
மெல்போர்ன்:
டென்னிசில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட்சிலாம் போட்டியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும்.
ரோஜர் பெடரர் (சுவிட்சர் லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), ஜோகோவிக் (செர்பியா) ஆகிய 3 வீரர்கள் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று முதல் இடத்தில் உள்ளனர்.
தொடக்கத்தில் அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 14 கிராண்ட் சிலாமுடன் முதலிடத்தில் இருந்தார். அவரது சாதனையை பெடரர் 2009-ல் முறியடித்தார். பெடரரின் இந்த சாதனையை நடால் 2020-ல் சமன் செய்தார்.
கடந்த ஆண்டு ஜோகோவிச் தொடர்ச்சியாக 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றார். இதன் மூலம் அவர் பெடரர், நடால் ஆகியோருடன் இணைந்தார். கடந்த அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றதால் ஜோகோவிச் 21-வது கிராண்ட்சிலாம் சாதனையை தவறவிட்டார்.
தற்போது நடாலுக்கு 21 -வது கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி புதிய வரலாறு படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள அவர் 2-வது வரிசையில் உள்ள மெட்வதேவை (ரஷியா) எதிர்கொள்கிறார். இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
மெட்வதேவை வீழ்த்துவது என்பது நடாலுக்கு சவாலானது. அவர் கடந்த அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி இருந்தார்.
உலகத் தர வரிசையில் தற்போது 5-வது இடத்தில் இருக்கும் நடால் காயம் மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சிறந்த நிலைக்கு வந்துள்ளார். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அவரது 21-வது கிராண்ட்சிலாம் பட்டம் கனவு நனவாகும்.
35 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறையும் (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020), அமெரிக்க ஓபன் பட்டத்தை 4 தடவையும் (2010, 2013, 2017, 2019), விம்பிள்டன் பட்டத்தை 2 முறையும் (2008, 2010), ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஒரு தடவையும் (2009) கைப்பற்றி உள்ளார்.
13 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2-வது முறையாக வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடாலின் சாதனையை தடுத்து 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் மெட்வதேவ் உள்ளார்.
அவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சிடம் தோற்று இருந்தார். அதுமாதிரியான நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மெட்வதேவ் கவனமுடன் விளையாடுவார்.
இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்தி ரேலியா)- டேனிலி கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
ஆஸ்லே பார்டி 3-வது பட்டத்துக்காகவும், கோலின்ஸ் முதல் கிராண்ட்சிலாம் பட்டத்துக்காகவும் காத்திருக்கின்றனர்.
அணித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதுடன் தனி செயல் திறனிலும் அதிகம் கவனம் செலுத்துவது,அவரது பொறுப்பாகும் என்று சமி குறிப்பிட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்க அணியிடம் 2-1 என்ற கணக்கில் இந்திய டெஸ்ட் அணி தோல்வி அடைந்த நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்நிலையில் அடுத்த இந்திய டெஸ்ட் அணி கேப்டன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் புதிய கேப்டன் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
நிச்சயமாக, அணிக்கு (டெஸ்ட் கிரிக்கெட்) ஒரு தலைவர் தேவை. எங்கள் முதல் தொடர் (புதிய கேப்டனின் கீழ்) சொந்த மண்ணில் (அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக) நடைபெறுவது நல்லது. எனவே நிலைமைகளை நன்கு அறிந்திருப்பது ஒருவித நிம்மதியைத் தருகிறது. ஆனால் நீங்கள் என்னைக் கேட்டால், நான் எப்படி விளையாடுகிறேன் மற்றும் ஒட்டுமொத்தமாக பந்துவீச்சு எவ்வாறு செயல்படுகிறது என்பதில் நான் அதிக கவனம் செலுத்துவேன்.
கேப்டன் பதவியை யார் எடுப்பது என்பது பற்றி நான் சிந்திக்கவில்லை. எங்களிடம் ரோஹித் , அஜிங்க்யா ரஹானே உள்ளனர். எல்லாம் நல்லதாக இருந்தாலும் முக்கியமானது போட்டி முடிவுதான்.தங்கள் செயல்திறனில் அதிக கவனம் செலுத்துவதும், பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதும் தனி நபர் பொறுப்பாகும். அது நாம் எதிர்பார்க்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும். இவ்வாறு சமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...சதம் அடிக்காததால் விமர்சனம்: விராட் கோலிக்கு முகமது ஷமி ஆதரவு
ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணியின் பயிற்சி முகாம் வருகிற 31-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
சென்னை:
கொரோனா பரவலால் ரஞ்சி கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பாதிப்பு ஓரளவு குறைந்து வருவதால் போட்டியை 2 கட்டங்களாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதல் கட்டமாக லீக் ஆட்டங்கள் பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. நாக் அவுட் போட்டிகள் ஐ.பி.எல். முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது.
ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணியின் பயிற்சி முகாம் வருகிற 31-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. தமிழக வீரர்கள் வருகிற திங்கட் கிழமை சென்னையில் கூடுகிறார்கள்.
பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரி சோதனை செய்யப்படும். விஜய் சங்கர் தலைமையில் தமிழக அணிக்கு 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...ஜூனியர் உலக கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா
ஜூனியர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் டீகே வில்லி 71 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஆண்டிகுவா:
ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குரூப் சி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் 2-ம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. டீகே வில்லி 71 ரன்னும், கொரே மில்லர் 64 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில் காசிம் அக்ரம் 3 விக்கெட்டும், அவைஸ் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சில் பாகிஸ்தான் சிக்கி திணறியது.
பாகிஸ்தான் மெஹ்ரன் மும்தாஸ் 29 ரன்னும், அப்துல் பாசி 28 ரன்னும், இர்பான் கான் 27 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 119 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் வில்லியம் சல்மான் 3 விக்கெட்டும், டாம் விட்னி, ஜாக் சின்பீல்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்...பிக்பாஷ் லீக் - சிட்னியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்
பிக்பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ்க்கு எதிராக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் ஆண்ட்ரூ டை 3 விக்கெட் வீழ்த்தினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது . அதிகபட்சமாக லரி இவான்ஸ் 76 ரன்னும் ,கேப்டன் அஸ்டன் டர்னர் 54 ரன்னும் எடுத்தனர் .
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்ஸர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 16.2 ஓவரில் 92 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 79 ரன் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வெற்றி பெற்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருதை லரி இவான்சும், தொடர் நாயகன் விருதை பென் மெக்டெர்மாட்டும் பெற்றனர்.
இதையும் படியுங்கள்...ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் - வெண்கலம் வென்றது இந்தியா
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி ஜப்பான் தங்கப்பதக்கம் வென்றது.
மஸ்கட்:
ஓமன் நாட்டில் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் நடைபெற்றது.
இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சீனாவுடன் மோதியது.
ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடி காட்டினர். இந்தியா தரப்பில் குர்ஜித் கவுர், ஷர்மிளா தேவி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்று, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இதையும் படியுங்கள்...ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ரபேல் நடால்
ஆஸ்லே பார்டி கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தையும் 2019-ம் ஆண்டு பிரெஞ்ச் ஒபன் பட்டத்தையும் வென்ற அவர் 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி நாளை மதியம் 2 மணிக்கு நடக்கிறது.
பட்டத்துக்கான இப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கணையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தையும் 2019-ம் ஆண்டு பிரெஞ்ச் ஒபன் பட்டத்தையும் வென்ற ஆஸ்லே பார்டி 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். அவர் ஆஸ்ரேலிய ஒபனில் முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
30-வது இடத்தில் உள்ள காலின்ஸ் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.






