என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வரும் நிலையில் அவருக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச போட்டியில் சதம் அடித்து 2 ஆண்டுக்கு மேல் ஆகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சதம் அடித்திருந்தார்.

    இதனால் அவரது பேட்டிங் குறித்து விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் விராட் கோலிக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றால் என்ன? ஒரு சதம் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை வரையறுக்காது. சமீப காலமாக அவர் தொடர்ந்து அரை சதம் அடித்துள்ளார். அது அணிக்கு உதவும் வரை விமர்சிக்க எந்த காரணமும் இல்லை.

    அவர் பந்து வீச்சாளர்களின் கேப்டன். எப்போதும் நம்மை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுத்தார். எங்களின் கருத்தை விரும்பி கேட்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கபில்தேவ், இம்ரான்கான் போன்ற ஆல் ரவுண்டர்களை தவிர வேகப்பந்து வீச்சாளர்கள் நீண்ட காலம் கேப்டனாக இருந்திருப்பது மிகவும் அரிதாகவே இருந்துள்ளது என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி சமீபத்தில் அறிவித்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் கேப்டன் பதவியை துறந்தார்.

    ஏற்கனவே 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினார். அதன் பின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரை கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

    இதையடுத்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் இன்னும் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்க உள்ளது.

    இதற்கிடையே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தனக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டால் அது கவுரவமாக இருக்கும். எனது திறமைக்கு ஏற்றவாறு என்னால் முடிந்த வரை நான் பங்களிக்க எப்போதும் விரும்புகிறேன் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினமாக இருக்கும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினமாக இருக்கும். ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் என்ற அடிப்படையில் ஒரு ஆல் ரவுண்டராக இருக்க வேண்டும். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

    ஒரு வேகப்பந்து வீச்சாளர் எப்போதும் ஆக்ரோ‌ஷமாக இருப்பார். போட்டியில் வெற்றி பெறவும், விக்கெட்டை வீழ்த்தவும் முயல்வார். கபில்தேவ், இம்ரான்கான் போன்ற ஆல் ரவுண்டர்களை தவிர வேகப்பந்து வீச்சாளர்கள் நீண்ட காலம் கேப்டனாக இருந்திருப்பது மிகவும் அரிதாகவே இருந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடையே பிளவு இல்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் 20 ஓவர் அணிக்கு பொல்லார்ட் கேப்டனாக உள்ளார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.

    இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்டுக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடையே பிளவு இல்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

    இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைதளங்களிலும் பிராந்திய ஒளிபரப்பு ஊடகங்களிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் பிளவு இருப்பதாக வெளியான தகவல் குறித்து கிரிக்கெட் வாரியம் அறிந்துள்ளது. இது ஆதாரமற்ற மற்றும் குறும்புத்தமான குற்றச்சாட்டுகள் ஆகும். அணி கேப்டனுக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்பதில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் திருப்தி அடைகிறது என்று தெரிவித்துள்ளது.

    மேலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறும் போது, எங்கள் அணிக்குள் பிளவுகளை விதைக்க வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் கேப்டனில் நம்பகத் தன்மையின் மீதான தீங்கிழைக்கும் தாக்குதலாக இதை நான் பார்க்கிறேன் என்று தெரிவித்தார். 
    ஜூனியர் உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது 30 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    ஆண்டிகுவா:

    ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், குரூப் சி பிரிவில் 2ம் இடம் பிடித்த ஆப்கானிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் முதல் இடம் பிடித்த இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  அப்துல் ஹாதி 37 ரன்னும், நூர் அகமது 30 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் வினுஜா ரான்பால் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியினரின் அசத்தலான பீல்டிங்கில் இலங்கை அணி சிக்கியது.

    இலங்கை அணியில் துனித் வெல்லலகே அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார்.  45வது ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணி 6 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்த ஆட்டத்தில் 4 பேர் ரன் அவுட்டாகினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் 4 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் பிலால் சமி 2 விக்கெட், நூர் அகமது, நவீத் சட்ரான், இஜாருல்லா நவீத் மற்றும் கரோடே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இலங்கை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினர் எக்ஸ்ட்ராசாக 34 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு புல்ஸ் 8 வெற்றி, 6 தோல்வி, 1 டிரா என மொத்தம் 46 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் யுபி யோதா அணிகள் மோதின. 

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய புனேரி பால்டன் 44 - 38 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புனேரி பால்டன் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
    சரண்ஜித் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் (வயது 90), இமாச்சலபிரதேசம் உனாவில் உள்ள தனது வீட்டில் காலமானார். நீண்டகாலமாக உடல்நலக்குறைவு, வயது முதிர்வு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த சரண்ஜித் சிங்கிற்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் உயிர் பிரிந்தது. 

    இமாச்சலபிரதேச மாநில உனா மாவட்டத்தில் சரண்ஜித் சிங் பிறந்தார். 1964-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக சரண்ஜித் சிங் செயல்பட்டார். அதேபோல், 1960-ம் ஆண்டு நடைபெற்ற ரோம் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் சரண்ஜித் சிங் இடம்பெற்றிருந்தார்.

    ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சரண்ஜித் சிங் சிம்லாவில் உள்ள இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறையின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். விளையாட்டுத் துறையில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பத்ம ஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

    சரண்ஜித் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சரண்ஜித் சிங்கின் மறைவு வருத்தமளிப்பதாக  பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் கூறி உள்ளார். இந்திய ஹாக்கி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்த அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தினது இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் கூறி உள்ளார்.
    மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி, கோலின்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    சொந்த மண்ணில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு மேடிசன் கெய்ஸ்-ஆல் ஈடுகொடுக்க முடியவில் ஆஷ்லே பார்டி 6-1, 6-3 என நெர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று பார்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    கோலின்ஸ்

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டேனிலே கோலின்ஸ், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார். இதில் 7-ம் நிலை வீராங்கனையான இகா, 27-ம் நிலை வீராங்கனையான கோலின்ஸ் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    இதனால் இகா 4-6, 1-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். 29-ந்தேதி நடைபெறும் இறுதி போட்டியில் ஆஷ்லே பார்டி- டேனிலே கோலின்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    பல ஆண்டுகளாக கேப்டனாக இருப்பவரை மாற்றுவது என்பது எப்போதும் எளிதானதல்ல என்று ரஷீத் லத்தீப் கருத்து தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவர் அணியில் இருந்து பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். அவரது 7 ஆண்டுகால கேப்டன் சகாப்தம் முடிந்தது.

    கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தவறு செய்து விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் கையாண்ட விதம் சரியில்லை. ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கியதில் கிரிக்கெட் வாரியம் தவறு செய்து விட்டது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நீண்டகாலம் பணியாற்றிய கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவெடுத்தாலோ அல்லது நீக்கப்பட்டாலோ அவர் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடாமல் இருப்பது சாத்தியமில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து அறிவேன்.

    பிசிசிஐ

    எங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருடன் பேசிய பிறகுதான் 2004-ல் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தேன். அதனால்தான் இந்த குறிப்பிட்ட பிரச்சினையை பி.சி.சி.ஐ. கையாண்ட விதத்தில் தவறு செய்துவிட்டதாக நினைக்கிறேன். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    பல ஆண்டுகளாக கேப்டனாக இருப்பவரை மாற்றுவது என்பது எப்போதும் எளிதானதல்ல. 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலாக நீங்கள் கேப்டனாக வெற்றிபெற்றால் அணியில் உள்ளவர்கள் அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள். எனவே அணியின் சூழலை இது சீர்குலைக்கும்.

    அதற்காக எந்தவொரு வீரரும் சிறப்பாக செயல்பட விரும்பமாட்டார்கள் என்று நான் கூறவில்லை. ஒவ்வொரு தொழில்முறை வீரர்களும் சிறப்பாக செயல்படவே விரும்புவார்கள். ஆனால் ஒரு அணியின் சூழல் மாறும்போது, அது பல வழிகளில் பாதிக்கிறது.

    ரஷீத் லத்தீப்

    இந்திய கிரிக்கெட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்களால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.பி.எல். போட்டி வலுவான அடித்தளமாக உள்ளது. இந்த போட்டியினால் நிதி ரீதியில் பி.சி.சி.ஐ. வலுவாக இருக்கிறது.

    ரோகித் சர்மா அணியை எவ்வாறு கையாளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐ.பி.எல். போட்டியில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தினார். இதில் அவர் சாதித்து காட்டினார்.

    இவ்வாறு ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

    225 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து 204 ரன்கள் எடுத்து 20 ரன்களில் தோல்வியை சந்தித்தது.
    பிரிட்ஜ்டவுன்:

    வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி பிரிட்ஜ் டவுனில் இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.

    4-வது வீரராக களம் இறங்கிய ரோவ்மேன் பொவேல் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 53 பந்தில் 107 ரன்னும் (4 பவுண்டரி, 10 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 43 பந்தில் 70 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 20 ரன்னில் வெற்றி பெற்றது.


    டாம் பாண்டன் 39 பந்தில் 73 ரன்னும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), பில்சால்ட் 24 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். செப்பர்டு 3 விக்கெட்டும், பொல்லார்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    நிக்கோலஸ் பூரன்

    இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து ஒரு ரன் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று இருந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 30-ந்தேதி பிரிட்ஜ்டவுனில் நடக்கிறது.

    தோனி விட்டு சென்ற இடத்தை நிரப்புவது எளிதல்ல. ஆனால் கோலி விரைவாக தலைமை பொறுப்பை எடுத்துகொண்டு டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்தினார் என ரவி சாஸ்திரி கூறினார்.
    மும்பை:

    விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து அவரை குறித்து சர்ச்சைகளும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுகின்றன. விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதற்கு அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தரும் அழுத்தமே காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி கண்டிப்பாக 2-3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலிக்கு 33 வயது தான் ஆகிறது. அவர் இன்னும் 5 வருடங்கள் நல்ல கிரிக்கெட் வீரராக வலம் வரலாம். அவர் வெளியே வரும் பிரச்சனைகளை மறந்துவிட்டு, அமைதியுடன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். அவர் போட்டிகளில் இருந்து 2-3 மாதங்கள் ஓய்வு எடுத்து வந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நான் கருதுகிறேன். 

    விராட் கோலி 3-4 வருடங்களுக்கு அரசரை போன்று இருப்பார். அவரால் அணிக்கு வெற்றியை தேடி தர முடியும். அதுபோன்ற கோலியை தான் நான் காண விரும்புகிறேன்.

    தோனி விட்டு சென்ற இடத்தை நிரப்புவது எளிதல்ல. கோலி விரைவாக தலைமை பொறுப்பை எடுத்துகொண்டார். டெஸ்ட் அணியையும் சிறப்பாக வழி நடத்தினார்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
    காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இடமில்லை.
    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமிக்கு இந்த தொடரில் இருந்து ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2வது ஒருநாள் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் களமிறங்குவார் என்றும், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக குணமடைந்து வரும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஜடேஜா விளையாட மாட்டார் என்றும் அக்சர் படேல் டி20 போட்டிகளில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இடமில்லை என தெரிகிறது. அவருக்கு பதில் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


    வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி:- 

    ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (துணை கேப்டன்.), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்..

    வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இந்திய டி20 அணி:- 

    ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
    ஒரு வீரராக அதே ஆற்றலை வெளிப்படுத்தி விளையாடுவதே கோலிக்கு இப்போது உள்ள சவால் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரின் ஷோயப் அக்தரின் யூடியூப் சேனலுக்கு ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: 

    ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் தற்போது இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய கிரிக்கெட் வீரர்கள். ஆடுகளத்தில் விராட் ஒரு மிருகத்தை போன்று ஆக்ரோஷமானவர்.  மைதானத்தில் நுழைந்தவுடன் தீவிரமாக அவர் விளையாட விரும்புகிறார், யாரை பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர் உணர்ச்சி வேகத்தில் இருப்பார். 

    களத்திற்கு வெளியே, அவர் முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறார். கோலிக்கு இப்போது உள்ள சவால் என்பது, அணியின் கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக விளையாடும் போது அதே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப் படுத்துவதுதான்.  ஒரு வீரராக விளையாடுவதற்கும், ரன்களைப் பெறுவதற்கும், இந்தியாவின் வெற்றிக்கு உதவுவதற்கும் இன்னும் அவர் ஆற்றலுடன் இருக்க வேண்டும். அவர் அதைச் செய்தால், அவர் தமது கிரிக்கெட் வாழ்க்கையை முழுமையாக நிறைவு செய்வார். 

    இந்திய ஒயிட்-பால் கேப்டன் ரோஹித் சர்மா தனது உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார், இதன் விளைவாக, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அவர் அணியை வழிநடத்த முடியும். இவ்வாறு சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். 
    ×