என் மலர்
விளையாட்டு
20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியபோது அதிக சுமையை தாங்குவதாக பலரும் கருதினோம் என கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு 7 ஆண்டுகள் பொறுப்பு வகித்த விராட் கோலியின் கேப்டன் சகாப்தம் சமீபத்தில் முடிவடைந்தது. 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவர் அணியில் இருந்து பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு விராட் கோலி யாரும் எதிர்பார்க்காத வகையில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
கேப்டன் பதவி விவகாரத்தில் அவருக்கும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் கேட்டுக்கொண்டதாக கங்குலி கூறி இருந்தார். ஆனால் தன்னிடம் யாருமே பேசவில்லை என்று கோலி தெரிவித்திருந்தார்.

இருவரும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறியது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விராட் கோலியும், கங்குலியும் மனம் விட்டு பேச வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியபோது அதிக சுமையை தாங்குவதாக பலரும் கருதினோம். கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டும் என்று யாரும் எண்ணவில்லை. அவர் அற்புதமான வீரர். அவருடைய முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... வேற்று கிரகத்தில் பேட்டிங் செய்ததுபோல் இருந்தது: சூர்யகுமார் யாதவை பாராட்டிய தினேஷ் கார்த்திக்
இருவரும் (விராட் கோலி, கங்குலி) மனம் விட்டு பேசி பிரச்சினையை சரி செய்திருக்க வேண்டும். போனை எடுத்து ஒருவருக்கொருவர் பேசுங்கள். நாட்டையும், அணியையும் முன்னிறுத்துங்கள்.
தொடக்கத்தில் எனக்கு கேட்டது எல்லாம் கிடைத்தது. சில நேரங்களில் நீங்கள் கேட்டது கிடைக்காது. அதற்காக கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டும் என்பதில்லை.
அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் கோலி நிறைய விளையாடி அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... பிரதமர் மோடி எனக்கு மெசேஜ் அனுப்பினார்- பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்வீட்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் ஒயிட்பால் போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) ரோகித் சர்மா சமீபத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் ஆடவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் லோகேஷ் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையிலான அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது.
இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9, 11 ஆகிய தேதிகளில் அகமதாபாத்திலும், 20 ஓவர் ஆட்டங்கள் பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுகிறார். காயத்தில் இருந்த அவர் உடல் தகுதி பெற்றுவிட்டதாக கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ரோகித் சர்மா உண்மையில் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டார் என்றும் விரைவில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தனது உடல் தகுதியை நிரூபிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... வெங்கடேஷ் அய்யர் ஒருநாள் போட்டிக்கு சரிபட்டு வரமாட்டார்: கவுதம் காம்பீர்
முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான பும்ராவுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆல்- ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இருவரும் உடல் தகுதியுடன் இருந்தால் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மோசமான பந்துவீச்சு காரணமாக புவனேஸ்வர் குமார் நீக்கப்படலாம். இதேபோல காயம் அடைந்ததால் அஸ்வின் இடம்பெற மாட்டார்.
தமிழக வீரரான ஷாருக்கான், அவேஸ்கான், ஹர்ஷல் படேல் ஆகியோர் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல்.போட்டிகள்? - பி.சி.சி.ஐ. ஆலோசனை
இந்திய மக்களுடனான நெருக்கம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
சாகுராமஸ்:
நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினத்தில் பிரதமர் மோடி தனக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ் அனுப்பினார் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:-
இன்று இந்தியா 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறது. அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துகொள்கிறேன். இந்திய பிரதமர் மோடி எனக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பியுள்ளார். நான் அவரிடம் இருந்து வந்த மெசேஜ்ஜை பார்த்து தான் கண் விழித்தேன். அவருடனும், இந்திய மக்களுடனான எனது தனிப்பட்ட நெருக்கம் இது மூலம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவருடைய அன்புக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு கிறிஸ் கெய்ல் கூறினார்.
ஓய்வு முடிவை முன்னதாக அவசரமாக அறிவித்ததற்காக வருந்துகிறேன் என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 35 வயதான அவர் 2003-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். சானியா மிர்சா 6 கிராண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 பட்டங்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் 3 பட்டங்கள் என 6 கிராண்ட்சிலாம் பட்டங்கள் வென்றுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஓய்வு முடிவை அறிவித்தார் சானியா மிர்சா- ரசிகர்கள் அதிர்ச்சி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு இந்த சீசனுடன் ஓய்வு பெறப் போவதாக சானியா மிர்சா ஏற்கனவே தெரிவித்திருந்தார். நேற்று நடந்த கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சானியா- ராஜீவ்ராம் ஜோடி தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியை தொடர்ந்து டென்னிஸ் போட்டியில் இருந்து சானியா விடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து சானியா மிர்சா கூறியதாவது:-
இந்த சீசனுடன் ஓய்வு பெற இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தேன். இதுபற்றியே தொடர்ந்து கேட்கின்றனர். ஓய்வு முடிவை முன்னதாக அவசரமாக அறிவித்ததற்காக வருந்துகிறேன். என்னை பொறுத்தவரையில் இந்த ஆண்டு முழுவதும் போட்டிகளில் விளையாடுவேன்.
வெற்றி அல்லது தோல்வி எதுவாக இருந்தாலும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துகிறேன். சில நேரங்களில் வெற்றி கிடைக்கும். ஏமாற்றமும் வரும். நான் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற விரும்புகிறேன். விரைவில் எனது ஓய்வு முடிவை அறிவிப்பேன்.
இவ்வாறு சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... தந்தையானார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்!
பிரான்ஸ் வீராங்கனையை 7-5, 6-1 என நெர்செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை கோலின்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
கிராண்ட்சிலாம் போட்டி களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 27-வது வரிசையில் உள்ள டேனிலி கோலின்ஸ் (அமெரிக்கா)- அலிசி கோர்னெட் (பிரான்ஸ்) மோதினார்கள்.
இதில் கோலின்ஸ் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 28 வயதான அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். இதற்கு முன்பு 2019-ல் அரை இறுதி வரை வந்திருந்தார்.
கோலின்ஸ் அரை இறுதியில் இகா சுவாடெக் (போலந்து) அல்லது கனேபியுடன் (எஸ்தோனியா) மோதுகிறார். நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) - மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
இதையும் படியுங்கள்... ஆஸ்திரேலிய ஓபன்: நடால், மேடிசன் கெய்ஸ் அரை இறுதிக்கு முன்னேற்றம்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் 2-வது வரிசையில் உள்ள டேனில் மெட்வதேவ் (ரஷியா) பெலிஸ் அலிஸ்மி (கனடா), 4-வது வரிசையில் உள்ள ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்)- ஜானிக் சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.
உலகின் 6-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), பெரிடினி (இத்தாலி) ஆகியோர் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இருவரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அரை இறுதியில் மோதுகிறார்கள்.
2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி யுவராஜ் சிங் திருமணம் செய்துகொண்டார்.
சண்டிகர்:
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது:-
கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசிர்வதித்திருக்கிறார். இந்த நற்செய்தியை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். இந்த குழந்தையை வரவேற்கும் அதேவேளையில் எங்கள் தனியுரிமையையும் மதிக்க விரும்புகிறோம்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
அரையிறுதி போட்டியில் முன்னணி வீரர் ரஃபேல் நடாலை, பெரெட்டினி எதிர்கொள்கிறார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற 5வது காலிறுதி போட்டியில் 7 ஆம் நிலை வீரரான மேட்டியோ பெரெட்டினி, பிரெஞ்சு வீரர் கெயில் மோன்ஃபில்ஸை எதிர் கொண்டார். இரு வீரர்களும் செட்டுகளை கைப்பற்றுவதில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 4 மணி நேரம் 9 நிமிடங்கள் வரை போட்டி நீடித்தது.
இறுதியில் 25 வயதான மேட்டியோ பெரெட்டினி, 6-4, 6-4, 3-6,3-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியை எட்டிய முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
வெள்ளிக் கிழமையன்று நடைபெறும் அரையிறுதியில் அவர் முன்னணி வீரர் ரஃபேல் நடாலை எதிர்கொள்கிறார்.
நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவில் நடத்திக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி :
2022 ஐ.பி.எல். டி20 போட்டி தொடர் வரும் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் கடைசி வரை நடைபெறும் என இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. எனினும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் இந்த ஆண்டும் இந்தியாவில் நடைபெறாது என கூறப்படுகிறது. அதனால் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நடப்பாண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ.க்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்றது. கொரோனா தொடர்பான எந்த வித சிக்கல்களும் இல்லாமல் இந்த தொடர் முடிவடைந்துள்ளது. இடையூறு இன்றி இந்த தொடர் நிறைவடைந்ததற்காக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித், பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ஐ.பி.எல். டி20 போட்டி தொடரையும் தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரக நாட்டை விட தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவது மலிவானது என அந்நாடு குறிப்பிட்டுள்ளது. குறைந்தபட்ச விமானப் பயணம் உள்ள இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் ஐ.பி.எல் உரிமையாளர்களுக்கான செலவுகளைக் குறைப்பது என்ற திட்டத்தின் கீழ் இந்த போட்டிகளை நடத்தலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜோகன்னஸ்பர்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு கிரிக்கெட் மைதானங்களில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கான திட்டத்தை தென் ஆப்பிரிக்கா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவின் கோரிக்கையை பி.சி.சி.ஐ பரிசீலிப்பதாகவும், இது தொடர்பாக இரு கிரிக்கெட் வாரியங்கள் இடையே விவாதங்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 ரன்னில் தோல்வியடைந்தாலும், சூர்யகுமார் யாதவ் ஆடிய விதம் அனைவரையும் ஈர்த்தது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மூன்று போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல் ஒயிட்வாஷ் ஆனது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வெங்கடேஷ் அய்யர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்.
கடைசி போட்டியில் இந்தியா 288 ரன் இலக்கை நோக்கி சென்றது. 283 ரன்கள் எடுத்து 4 ரன்னில் வெற்றியை நழுவ விட்டது. இந்திய அணியை இலக்கை நோக்கிச் செல்ல சூர்ய குமார் யாதவ் பேட்டிங்கும் முக்கிய காரணம். அவர் 32 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும்.
39 ரன்கள் அடித்தாலும், அவரது பேட்டிங் ஸ்டைல் மிகவும் சூப்பராக இருந்தது. அவர் வேற்று கிரகத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
சூர்யகுமார் யாதவ் முற்றிலும் வேற்று கிரகத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பொசிசன், ஷாட்ஸ், வெளிப்படுத்துதல் அனைத்தும் சூப்பர். இக்கட்டான சூழ்நிலையில் பேட்டிங் செய்யும் வழியை எளிமையாக்கினார். அவருக்கும் அதிக அளவில் வாய்ப்பு கொடுத்தால், இந்திய அணிக்காக அற்புதம் படைப்பார். ஆனால், அவருக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். தற்போது அவர் பேட்டிங் செய்ய வரும்போது, அடுத்த போட்டியில் நீடிப்போமா என்ற நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு பீல்டிங் அமைப்பது மிகவும் கடினம்.
சூர்யகுமார் யாதவால் இந்த வேகத்துடன் எந்த இடத்திலும் விளையாட முடியும். மும்பை இந்தியன் அணிக்காக அவர் 3-வது இடத்தில் களம் இறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரால் 4-வது அல்லது 5-வது இடத்தில் களம் இறங்கியும் ரன் அடிக்க முடியும். ஒருநாள் போட்டியில் அவரை 5-வது அல்லது 6-வது இடத்தில் களம் இறங்க வேண்டும். ஏனென்றால், அவரால் உடனடியாக அணியின் நிலையை மாற்ற முடியும்’’ என்றார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெங்கடேஷ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.
ஐ.பி.எல். 2021 சீசன் 2-வது பகுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் அய்யர். யார் பந்து வீசினாலும் கவலைப்படாமல் துவம்சம் செய்தார். அத்துடன் மிதவேக பந்து வீச்சாளராகவும் தன்னை நிரூபித்தார். இதனால் இந்திய அணியில் காயத்தால் பந்து வீச முடியாமல் இருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்று வீரராக கருதப்பட்டார்.
ஐ.பி.எல். தொடரில் சிறப்பான விளையாடிதன் மூலமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் 24 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் 3-வது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். 2-வது போட்டியில் பந்து வீச வாய்ப்பு கிடைத்த போதிலும், விக்கெட் வீழ்த்தவில்லை.
இந்த நிலையில் வெங்கடேஷ் அய்யர் ஒருநாள் போட்டிக்கு சரிவரமாட்டார் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுதம் காம்பீர் கூறியதாவது:-
வெங்கடேஷ் அய்யரை டி20 கிரிக்கெட் போட்டிக்கு மட்டுமே கருத வேண்டும் என உணர்கிறேன். ஏனென்றால், ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வகையில் இன்னும் அவர் முதிர்ச்சி அடையவில்லை. 7 முதல் 8 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதை வைத்து அவருக்கு சர்வதேச போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதை பார்த்தீர்கள் என்றால், அவரை டி20 கிரிக்கெட்டில்தான் விளையாட வைக்க வேண்டும். ஒருநாள் போட்டி முற்றிலும் மாறுபட்ட போட்டி. அய்யர் ஐ.பி.எல் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கினார். தற்போது அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்பட்டார்.
அவரை ஒருநாள் கிரிக்கெட் போ்டடியில் விளையாட கருதினால், ஐ.பி.எல். அணி அவரை, மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்க வேண்டும். ஆனால், ஐ.பி.எல். போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கினால், அவர் டி20 கிரிக்கெட் போட்டியில், தொடக்க வீரராக மட்டுமே களம் இறங்க வேண்டும்’’ என்றார்.
ஐந்தாவது செட் வரை நீடித்த ஆட்டத்தில் கடும்போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்று ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கிராண்ட் சிலாம் போட்டியில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 4-வது வரிசையில் உள்ள பார்பரா கிரஞ்கோவா (செக் குடியரசு)- 51-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கெய்ஸ் மோதினார்கள்.
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிரஞ்கோவா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். மேடிசன் கெய்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கிரஞ்கோவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
26 வயதான மேடிசன் கெய்ஸ் 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். இதற்கு முன்பு 2015-ல் அவர் முன்னேறி இருந்தார். தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மிகுந்த முன்னேற்றம் அடைந்து இந்த நிலைக்கு வந்துள்ளார்.
கிரஞ்கோவா கடந்த ஆண்டு பிரெஞ் ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். தற்போது அவரது ஆட்டம் கால் இறுதியோடு முடிந்து விட்டது.

மேடிசன் கெய்ஸ் அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) அல்லது ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) சந்திக்கிறார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் நடால் டென்மார்க்கின் டெனிஸ் ஷபோவாலோவை எதிர்கொண்டார். இதில் முதல் இரண்டு செட்களையும் நடால் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் கைப்பற்றினார். ஆனால், அடுத்த இரண்டு செட்டையும் 4-6, 3-6 என இழந்தார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட் நடத்தப்பட்டது. இந்த செட்டை நடால் 6-3 எனக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அஸ்வின், நாதன் லயன் ஆகியோர் ஆயிரம் விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்புள்ளதாக முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் முதல் 2 இடங்களில் சுழற்பந்து வீச்சாளர்களே உள்ளனர். இலங்கையை சேர்ந்த முரளீதரன் 800 விக்கெட் (133 டெஸ்ட்) எடுத்து முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த வார்னே 702 விக்கெட் (145 டெஸ்ட்) எடுத்து 2-வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 640 விக்கெட் வீழ்த்தி (169 டெஸ்ட்) 3-வது இடத்தில் உள்ளார். தற்போது உள்ள வேகப்பந்து வீரர்களில் அவரும், ஸ்டூவர்ட் பிராட்டும் ஆடி வருகிறார்கள். ஸ்டூவர்ட் பிராட் 537 விக்கெட் எடுத்து 6-வது இடத்தில் இருக்கிறார்.
வேகப்பந்து வீரர்களால் முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தற்போது இருக்கும் சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், நாதன் லயன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சென்னையை சேர்ந்த அஸ்வின் 84 டெஸ்டில் 430 விக்கெட்டும், லயன் 415 விக்கெட்டும் (105 டெஸ்ட்) கைப்பற்றி உள்ளனர்.
இந்தநிலையில் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 1000 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
அஸ்வின், லயன் ஆகிய இருவருமே எனது சாதனையையும், முரளீதரனின் சாதனையையும் முறியடிப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் இருவருமே மிக அற்புதமான சுழற்பந்து வீச்சாளர்கள். அவர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருவதை பார்க்க முடிகிறது.

அஸ்வினும், லயனும் டெஸ்ட் போட்டியில் 1000 விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் அது மிகவும் அருமையாக இருக்கும்.
இவ்வாறு வார்னே கூறி உள்ளார்.
3 வடிவிலான போட்டிகளில் சேர்த்து (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) 1000 விக்கெட்டுகளுக்கு மேல் வார்னே, முரளீதரன் ஆகியோர்தான் கைப்பற்றி உள்ளனர். முரளீதரன் 1,347 விக்கெட்டும் (583 இன்னிங்ஸ்), வார்னே 1,001 விக்கெட்டும் (466 இன்னிங்ஸ்) வீழ்த்தி உள்ளனர்.
தற்போது விளையாடி வரும் வீரர்களில் ஆண்டர்சன் 927 விக்கெட்டும் (524 இன்னிங்ஸ்), ஸ்டூவர்ட் பிராட் 780 விக்கெட்டும் (456 இன்னிங்ஸ்), அஸ்வின் 642 விக்கெட்டும் (320 இன்னிங்ஸ்) கைப்பற்றி உள்ளனர்.






