என் மலர்
இந்தியா
- உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள் பிரதமர் மோடியை, அவரது வீட்டில் சந்தித்தனர்.
- பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் நேற்று மாலை பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர்.
அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். பின்னர், பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையே, உரையாடலின்போது வீராங்கனைகள் ஒவ்வொருவம் பிரதமர் மோடியிடம் சுவாரஸ்ய கேள்விகளை எழுப்பினர். அதற்கு, பிரதமர் மோடியும் பதில் அளித்து வந்தார்.
அப்போது, டாப் பேட்ஸ்மேனான ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியிடம்," எனக்கு உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. எப்படி உங்கள் இவ்வளவு பிரகாசமாகவும், பொலிவாகவும் இருக்கிறீர்கள்..? உங்களது தினசரி சரும பராமரிப்பு என்ன?" என்று கேட்டார்.
ஹர்லீன் தியோலின் இந்த கேள்வியால் அங்கு சிரிப்பலை எழுந்தது. பிரதமர் மோடியும் சிரித்துக் கொண்டே இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
அப்போது,"நாட்டு மக்களின் அன்புதான் பிரதமரை பிரகாசிக்க வைக்கிறது" என்று ஆல்ரவுண்டர் ஸ்னே ராணா கூறினார்.
பின்னர் மீண்டும் பேசிய பிரதமர்,"நிச்சயமாக அதுதான் உண்மை. இது ஒரு பெரிய பலம். நான் அரசாங்கத்தில் பல ஆண்டுகளாக உழைக்கிறேன்.
இவை அனைத்தையும் மீறி, ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அது இறுதியில் உங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.
- 18 முதல் 19 வயதுடைய முதல் முறை வாக்காளர் எண்ணிக்கை 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் ஆகும்.
- மொத்தம் 45,341 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த 121 தொகுதிகளிலும் 1374 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மொத்தம் 119 கட்சிகள் 851 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். 463 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர். பெண் வேட்பாளர்கள் 122 பேரும் களத்தில் உள்ளனர்.
இவர்களின் வெற்றி-தோல்வியை 3.75 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1.98 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 1.76 கோடி பேர்.
இவர்களில் 10.72 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். 18 முதல் 19 வயதுடைய முதல் முறை வாக்காளர் எண்ணிக்கை 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 45,341 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 27.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
- அனைத்து போலீசாரும் கைகுலுக்கி பாராட்டினர்.
- கேரள காவல்துறையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்திலும் வீடியோ வெளியிடப்பட்டது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது மஞ்சேஸ்வரம் போலீஸ் நிலையம். இங்கு சம்பவத்தன்று போலீஸ் அதிகாரி சலாம் மற்றும் போலீசார் பணியில் இருந்தனர். அப்போது அங்கு ஒரு குடும்பத்தினர், புகார் மனு கொடுக்க வந்தனர்.
அந்த குடும்பத்தில் யூ.கே.ஜி. படிக்கக்கூடிய ஒரு சிறுவனும் இருந்தான். புகார் கொடுக்க வந்தவர்களிடம் புகார் மனுவை எழுதித் தருமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அவர்களும் போலீஸ் நிலையத்தில் அமர்ந்து மனு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சிறுவன், போலீஸ் அதிகாரி அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி சென்றான்.
பின்பு போலீஸ் அதிகாரி சலாமிடம், "நான் ஒரு பாட்டு பாடலாமா?" என்று கேட்டான். அதற்கு அவரும் சிறுவன் "ஜானி ஜானி எஸ் பாப்பா" என்ற பாடலைத்தான் பாடப்போகிறான் என்று நினைத்து படிக்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் அந்த சிறுவன், "ஒரு பனானா ஒரு பூ தருமோ" என்ற பாடலை தகுந்த ராகத்துடன் மிகவும் அழகாக பாடினான்.
அவன் பாடியதை கேட்டு போலீஸ் அதிகாரி மட்டுமின்றி, அங்கிருந்த மற்ற போலீசாரும் ஆச்சரியமடைந்தனர். அவனது பாட்டை போலீஸ் நிலையத்தில் இருந்த அனைவரும் மிகவும் ரசித்து கேட்டனர். பின்பு அவனை அனைத்து போலீசாரும் கைகுலுக்கி பாராட்டினர்.
போலீஸ் நிலையத்தில் சீருடையில் பணியில் அனைத்து போலீசாரின் முன்னிலையிலும் எந்தவித பதட்டமோ, அச்சமோ இல்லாமல் சிறுவன் பாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. போலீஸ் நிலையத்தில் போலீசாரின் முன்னிலையில் அவன் பாடிய வீடியோவை, போலீஸ் அதிகாரி சலாம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.
மேலும் கேரள காவல்துறையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்திலும் அந்த வீடியோ வெளியிடப்பட்டது. அதனை பார்த்த பலரும் சிறுவன் பாட்டு பாடும் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். இதனால் சிறுவன் பாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரவாகி இருக்கிறது.
- நல்ல சாலைகளால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது.
- தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் அதிக சாலை விபத்துகள்.
நல்ல சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் என்று தெலுங்கானா பாஜக எம்பி விஸ்வேஷ்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
மோசமான சாலைகள் விபத்துகளைக் குறைக்கும். நல்ல சாலைகளால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது.
முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் அதிக சாலை விபத்துகள்.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 19 பேர் உயிரிழந்ததற்கு நல்ல சாலை கட்டமைப்பும் ஒரு காரணம்.
மோசமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்வதால் விபத்துகள் குறைகின்றன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
- தன்னை 'நாயக்' என்று நினைப்பவனுக்கு, பீகார் மக்களின் இதயங்களை 'ஜனநாயக்' என்று ஆள்பவர் மாநிலத்தை ஆள்வார் என்று கூற விரும்புகிறேன்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருடன் சென்று வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மகாபந்தன் (இந்தியா கூட்டணி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பீகார் மக்கள் தங்கள் நலனை அறிவார்கள். கடந்த 15 ஆண்டுகளாக பீகாரின் வளர்ச்சியைப் பார்க்கும்போது, பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் மட்டுமே இது சாத்தியம் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், முன்பை விட அதிக வாக்குகளையும் இடங்களையும் பெறுவோம் என்றும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
தன்னை 'நாயக்' என்று நினைப்பவனுக்கு, பீகார் மக்களின் இதயங்களை 'ஜனநாயக்' என்று ஆள்பவர் மாநிலத்தை ஆள்வார் என்று கூற விரும்புகிறேன். ஊழலில் ஈடுபட்டு பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் 'கல்நாயக்'களாக சிறைக்குச் செல்வார்கள், மக்களை தவறாக வழிநடத்த விரும்பும் 'நாலாயக்'கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறையை கழிப்பார்கள் என்று அவர் கூறினார்.
- பிரேசில் மாடல் அழகியின் பெயர் Larissa என தெரியவந்துள்ளது.
- என்னை இந்தியனாக காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அரியானா வாக்காளர் பட்டியலில் 25,41,144 போலி வாக்காளர்கள் உள்ளனர். தவறான வாக்காளர்கள், போலி முகவரிகள், கும்பல் வாக்காளர்கள் என ஏராளமான முறைகேடுகள் நிறைந்துள்ளன.
பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவரின் புகைப்படம் (அவரின் புகைப்படத்தையும் ராகுல் காந்தி வெளியிட்டார்) ராய் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் 10 வாக்குச்சாவடிகளில் 22 இடங்களில் இடம்பெற்று இருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி கூறிய பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி குறித்து கடந்த 24 மணி நேரத்தில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூகுளில் தேடியுள்ளனர். அதில் அந்த பிரேசில் மாடல் அழகியின் பெயர் Larissa என தெரியவந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்களா? என பிரேசில் மாடல் அழகி லாரிசா தனது ஆதங்களை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், என்னை இந்தியனாக காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனம். நாம் எந்த உலகில் வாழ்கிறோம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- வடக்கு டெல்லியின் நரேலாவில், காற்றின் தரம் கிட்டத்தட்ட 294 ஆக மோசமாக இருந்தது.
- நவம்பர் 6 முதல் 8 வரை டெல்லியின் காற்று மிகவும் மோசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லியின் காற்றின் தரம் இன்று மீண்டும் கடுமையாக மோசமடைந்தது. நகரத்தின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 264 ஆக உயர்ந்து, மோசமான பிரிவில் உறுதியாக இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.
டெல்லியின் பல பகுதிகளில், குறிப்பாக ஐடிஓவைச் சுற்றி அடர்த்தியான புகை மூட்டம் நீடித்தது. அங்கு காற்றின் தரக் குறியீடு 290-ஐ தொட்டது. வடக்கு டெல்லியின் நரேலாவில், காற்றின் தரம் கிட்டத்தட்ட 294 ஆக மோசமாக இருந்தது.
டெல்லி கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு சுத்தமான காற்றை பதிவு செய்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டது. நேற்று மாலை காற்றின் தரக் குறியீடு 202 ஆகக் குறைந்துள்ளது. இது இந்த வார தொடக்கத்தில் "மிகவும் மோசமான" அளவீடுகளிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
ஆனால் இன்று காலை நகரத்தின் 38 கண்காணிப்பு நிலையங்களில் பெரும்பாலானவை கவலையளிக்கும் நிலைக்குத் திரும்பி உள்ளன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் செயலியின் தரவு, 300 க்கு மேல் "மிகவும் மோசமான" வரம்பில் 28 நிலையங்கள் உள்ளன.
டெல்லியை ஒட்டிய நகரங்களிலும் காற்றின் தரம் அவ்வளவாக சிறப்பாக இல்லை. குருகிராமில் காற்றின் தரக் குறியீடு 229 ஆகவும், நொய்டாவில் 216 ஆகவும், காசியாபாத்தில் 274 ஆகவும் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் 'மோசமான' மண்டலத்தில் உள்ளன. பரிதாபாத்தில் 187 புள்ளிகளில் சற்று சிறப்பாக செயல்பட்டாலும், இன்னும் ஆரோக்கியமற்ற நிலையே நிலவுகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 10 கி.மீ.க்கு கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாசுக்கள் குவிந்துவிடும் என்று முன்கூட்டியே காற்றுத் தர எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. நவம்பர் 6 முதல் 8 வரை டெல்லியின் காற்று "மிகவும் மோசமாக" இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
200 பராமரிப்பு வேன்கள் மூலம் சாலைகளை ஆழமாக சுத்தம் செய்தல், தொழில்துறை அலகுகளை ஆய்வு செய்தல் மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை சோதனை செய்தல் உள்ளிட்ட மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
தலைநகரில் மீண்டும் புகைமூட்டம் மோசமாக இருப்பதால், நகரம் முழுவதும் ஹாட்ஸ்பாட்களை இயல்பாக்க (normalise hotspots) குழுக்கள் செயல்பட்டு வருவதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
- முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
- வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மாநிலத்தில் அதிகபட்சமாக சஹர்சா மாவட்டத்தில் 15.27 சதவீதம் வாக்குப்பதிவும், லக்கிசராய் மாவட்டத்தில் 7 சதவீத மந்தமான வாக்குப்பதிவும் பதிவாகி உள்ளது.
- லாட்டரி சீட்டு வாங்குவதற்கான பணத்தை கடனாக கொடுத்து உதவினார்.
- அமித் சேரா பாதிண்டா பகுதியில் உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்புட்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் சேரா. இவர் வண்டியில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
ஏழ்மை நிலையில் இருந்த அமித் சேராவுக்கு அதிர்ஷ்டம் பக்கத்திலேயே இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் சென்றிருந்தார். அங்கு அம்மாநில அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி லாட்டரியில் ரூ.11 கோடி பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்ததை அறிந்தார்.
ஆனால் லாட்டரி சீட்டு வாங்குவதற்கு தேவையான பணம் கையில் இல்லை. எனவே தனது நண்பரான முகேஷ் என்பவரின் உதவியை நாடினார். அவர் லாட்டரி சீட்டு வாங்குவதற்கான பணத்தை கடனாக கொடுத்து உதவினார்.
இதையடுத்து, அமித் சேரா பாதிண்டா பகுதியில் உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார். இந்த நிலையில், கடந்த 31-ந் தேதி பம்பர் லாட்டரி பரிசுக்கான குலுக்கல் நடந்தது. இதில் அமித் சேரா வாங்கிய சீட்டுக்கு ரூ.11 கோடி பரிசு விழுந்தது. இதையறிந்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 'இது எனக்கு கடவுன் கொடுத்த எதிர்பாராத ஆசீர்வாதம். இந்த பணத்தை எனது இரண்டு குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்துவேன். அதுமட்டுமின்றி இந்த லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்து உதவிய எனது நண்பர் முகேசுக்கு ரூ.1 கோடி கொடுப்பேன்' என்று கூறினார்.
- ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி வாக்களித்தனர்.
- அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருடன் சென்று வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மகாபந்தன் (இந்தியா கூட்டணி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
பாட்னாவில் வாக்களித்த பின்னர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளுக்கு வாக்களிக்க வேண்டும்.
பீகார் மக்கள் தங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வி, நல்ல சுகாதார பராமரிப்புக்காக வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். பீகார் வெற்றி பெறப் போகிறது. நவம்பர் 14-ந் தேதி புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று கூறினார்.
- இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.
- டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பின்னர் அவற்றை ரத்து செய்யும்போது அவற்றுக்கான 'ரீபண்டு' பணம் மிகவும் குறைவான அளவிலேயே வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இந்த விதிமுறையில் இந்திய விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- பீகாரில் இன்று ஜனநாயகக் கொண்டாட்டத்தின் முதல் கட்டம்.
- முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பீகாரில் இன்று ஜனநாயகக் கொண்டாட்டத்தின் முதல் கட்டம். சட்டமன்றத் தேர்தலின் இந்தக் கட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில், முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.






