என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் சட்டசபை தேர்தல்- லாலு பிரசாத், தேஜஸ்வி வாக்குப்பதிவு
    X

    பீகார் சட்டசபை தேர்தல்- லாலு பிரசாத், தேஜஸ்வி வாக்குப்பதிவு

    • ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி வாக்களித்தனர்.
    • அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருடன் சென்று வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மகாபந்தன் (இந்தியா கூட்டணி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    பாட்னாவில் வாக்களித்த பின்னர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

    பீகார் மக்கள் தங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வி, நல்ல சுகாதார பராமரிப்புக்காக வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். பீகார் வெற்றி பெறப் போகிறது. நவம்பர் 14-ந் தேதி புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×