என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #Balakrishnan

    ராமநாதபுரம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கும் கட்சிகள்தான் இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி காணாமல் போய் விடும். சட்டசபை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் முறைகேடு இல்லாமல் நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று சொல்ல முடியாது. முறைகேடு இல்லாமல் தேர்தலைநடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த பிரச்சினையில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை கைது செய்ததோடு வழக்கை முடித்துவிடக் கூடாது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #Balakrishnan

    தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால் அரசின் இணையதளங்களில் இருந்து மோடியின் படம் நீக்கப்பட்டது. அதுபோல மாநில அரசின் இணையதளங்களிலும் அரசியல் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகிறது. #LSPolls #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே அமலுக்கு வந்து விட்டன.

    தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு விட்டதால் நாடு முழுவதும் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த அரசு அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர். குறிப்பாக அரசு தொடர்பான பணிகளில் விதிமீறல்கள் நடைபெறுகிறதா? என்ற கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள அமைச்சரவை அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளின் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

    மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள இணைய தளங்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்று இருந்தது. அந்த படத்தையும் அகற்றும்படி தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

    இதையடுத்து அரசின் இணையதளங்களில் இருந்து மோடியின் படம் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டது. அதுபோல மாநில அரசின் இணையதளங்களிலும் அரசியல் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    தேர்தல் நடத்தை விதி காரணமாக திட்டங்களை தொடங்கவும், அறிவிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அரசு இணைய தளங்கள் மூலம் திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விடக்கூடாது என்ற கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் திட்டங்கள் தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரங்களை அரசின் இணைய தளங்களில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. #LSPolls #PMModi
    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திடீர் சென்னை வருகையால் திமுக கூட்டணியில் தொகுதிகள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். #ParliamentElection #RahulGandhi #MKStalin
    சென்னை:

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர, ஏனைய கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டன. எந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டியது தான் பாக்கி. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வந்தது.

    தி.மு.க. - காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே சந்தித்து பேசினாலும், முடிவு எட்ட முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், நாகர்கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வருகை தரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வருகைக்கு முன்னதாக பேச்சுவார்த்தையை முடித்து தொகுதிகள் பட்டியலை வெளியிட தி.மு.க. திட்டமிட்டிருந்தது.



    ஆனால், நேற்று திடீரென ராகுல்காந்தியின் வருகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவர் சென்னை வந்து 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகே நாகர்கோவில் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

    இதனால், நேற்று இரவு தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வரவில்லை. இன்றும் நாகர்கோவிலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் செல்ல இருப்பதால், தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பு இல்லை.

    எனவே, நாளை (வியாழக்கிழமை) காலை சென்னை அண்ணா அறிவாலயம் வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர். அதன்பிறகு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதிகள் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிடுகிறார். தற்போதைய நிலையில், கரூர், கிருஷ்ணகிரி, தென்காசி, திருச்சி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு வருவதால் சிக்கல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #RahulGandhi #MKStalin

    காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி திட்டவட்டமாக கூறினார். #Mayawati #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி திட்டவட்டமாக கூறினார். #Mayawati #Congress

    நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு களம் இறங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், பல்வேறு பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முயற்சிக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து போவதை தடுக்க இது உதவும் என கருதப்பட்டது.

    ஆனால் இந்த முயற்சி, எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

    நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியும் கரம் கோர்த்துள்ளன.

    இந்த நிலையில், டெல்லியில் தனது கட்சியை சேர்ந்த பல்வேறு மாநில தலைவர்கள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி நேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ளாது.

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளேன் என்றால் அது பரஸ்பர மரியாதை, நேர்மையான நோக்கங்கள் அடிப்படையில் அமைந்தது ஆகும்.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியானது, பாரதீய ஜனதாவை தோற்கடிப்பதற்கு சரியான கூட்டணி ஆகும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அந்த கட்சியை தோற்கடிப்போம். பல தலைவர்கள், நமது கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வமாக உள்ளனர்.

    ஆனால் தேர்தல் லாபத்துக்காக மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி எதையும் செய்யாது. ஏனென்றால் அது பகுஜன் சமாஜ் இயக்கத்துக்கு கேடாக அமைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மேற்கு வங்காள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் மம்தா கட்சி 40 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. சினிமா நட்சத்திரங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. #MamataBanerjee #LokSabha #WomenCandidate
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தை ஆளும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள 42 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. எந்தக் கட்சியுடனும் கைகோர்க்கவில்லை.

    42 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய எம்.பி.க்கள் 5 பேர் போட்டியிடவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ஜாதவ்பூர் எம்.பி. சுகதா போஸ் தேர்தலில் போட்டியிட அந்தப் பல்கலைக்கழகம் அனுமதி தரவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக சந்தியா ராயும், கட்சிப்பணியாற்றுவதற்காக மூத்த தலைவர்கள் சுப்ரதா பக்‌ஷியும், உமா சோரனும் தேர்தலில் நிற்கவில்லை.

    இந்த தேர்தலில் எங்கள் கட்சி 40.5 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த தேர்தலில் 35 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தினோம். இது பெண்களுக்கு பெருமைமிக்க தருணம்.

    இந்த தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் நஸ்ரத் ஜஹான், மிமி சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்கள். தற்போதைய எம்.பி.க்கள் மூத்த நடிகை மூன்மூன் சென், நடிகர் தேவ் (தீபக் அதிகாரி) ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    மூத்த நடிகை மூன்மூன் சென், மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவுக்கு (பா.ஜனதா) எதிராக நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

    நாங்கள் எந்தக்கட்சியுடனும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன.

    ஜார்கண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும், அசாமில் 6 தொகுதிகளிலும், பீகாரில் 2 தொகுதிகளிலும், அந்தமானில் உள்ள ஒரு இடத்திலும் போட்டியிடுகிறோம்.

    உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளுக்கு ஆதரவு தருவோம்.

    மின்னணு ஓட்டு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டு எந்திரங்களில் மோசடிகள் நடைபெறாமல் தேர்தல் கமிஷன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனக்கு எதிராக நடிகை மூன் மூன் சென்னை மம்தா நிறுத்தி இருப்பது குறித்து மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

    அதில் அவர் குறிப்பிடுகையில், “எப்போதுமே எனக்கு எதிராக மம்தா சென்-சேசனல் (பரபரப்பான) வேட்பாளர்களையே நிறுத்துகிறார். கடந்த தேர்தலில் தொழிற்சங்க தலைவர் தோலா சென்னை நிறுத்தினார். இந்த முறை நடிகை மூன்மூன் சென்னை நிறுத்தி உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு இந்த தேர்தலில் பாஜக பதில் சொல்லியாக வேண்டும். மே 23-ம் தேதி மக்களின் ‘மன் கி பாத்’ வெளியாகிவிடும் என சிவசேனா குறிப்பிட்டுள்ளது. #2014pollpromises #ShivSena
    மும்பை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனா, அவ்வப்போது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான சில கருத்துகளையும் வெளியிட்டு வருகிறது.

    அவ்வகையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் இன்று ஒரு தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பாக நம் நாட்டு மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மற்ற பல நாடுகளின் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் நாம் ஏன் இவற்றை இன்னும் நம்பிக் கொண்டிருக்க வேண்டும்? என அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  



    காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவோம். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்றெல்லாம் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

    (இதில் எதுவும் நிறைவேற்றப்படாததால்) இந்த தேர்தலில் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். மக்களை நீண்டகாலத்துக்கு முட்டாள்களாக்க முடியாது என்பதை வரலாறு நமக்கு தெளிவுப்படுத்தி உள்ளது.

    மக்கள் தங்களிடம் உள்ள கேள்விகளுக்கு வாக்குமுறையின் மூலம் பதிலும் வைத்திருக்கிறார்கள். வரும் மே மாதம் 23-ம் தேதி மக்களின் பதில்கள் ‘மன் கி பாத்’ ஆக வெளியாகிவிடும் என்றும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. #2014pollpromises #ShivSena
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்ட மம்தா பானர்ஜி, 41 சதவீதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். #Mamatareleases #TMClist #WBLSpolls
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இங்குள்ள 42 தொகுதிகளில் போட்டியிடும் தனது வேட்பாளர் பட்டியலை இன்று கொல்கத்தாவில் வெளியிட்டார்.

    இதில் 41 சதவீதம் தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது எம்.பி.களாக இருக்கும் 10 பேர் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் அவர்கள் கட்சிப்பணிகளை கவனிப்பார்கள் என தெரிவித்த மம்தா, வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் 6 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமானில் உள்ள ஒரு தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். மேலும், ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.



    உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் மாநில கட்சிகளுக்கு ஆதரவு தருவோம்.

    மக்கள் மீது மோடி அரசு திணித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவில் நடைபெற்ற மோசடிகளில் மிகப்பெரிய மோசடியாகும். மத்தியில் ஆளும் பாஜக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி பிளவுப்படுத்த பார்க்கிறது. இந்த தேர்தலில் விவிஐபிக்கள் வரும் ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான பணத்தை கொண்டுவந்து வாக்களர்களுக்கு வினியோகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். #Mamatareleases #TMClist #WBLSpolls
    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    பெண்ணாடம்:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் வாகனங்களில் பணம் கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்ட 9 சட்டசபை தொகுதிக்கும் தனித்தனியாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    திட்டக்குடி அருகே எழுத்தூரில் இன்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும்படையை சேர்ந்த முகமதுஅசேன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. உடனே பறக்கும் படையினர் அந்த காரை வழிமறித்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த காருக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 11 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனே காரை ஓட்டி வந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் திருச்சி அருகே சிறுகனூரில் பிளாஸ்டிக் டேங்க் கம்பெனி நடத்தி வருவதாகவும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு பணத்தை எடுத்து செல்வதாகவும் கூறினார். ஆனால், அந்த பணம் எடுத்து செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திட்டக்குடி தாசில்தார் புகழேந்தியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் திட்டக்குடி அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தார்.
    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.வுடன் பேசி வருவதாகவும் அவர்களின் முடிவை பொறுத்து கூட்டணி அறிவிப்பை வெளியிடுவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார். #LSPolls #GKVasan #ADMKAlliance
    சென்னை:

    த.மா.கா. நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தை ஜி.கே.வாசன் இன்று கூட்டியுள்ளார். மாநில துணை தலைவர்கள் விடியல் சேகர் பொதுச்செயலாளர் ஞானசேகரன், செயலாளர்கள் எம்.டி.எஸ்.சார்லஸ், சக்திவேல், ரெங்கராஜன், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜி சாக்கோ, அண்ணா நகர் ராம்முகர், அருண் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    அப்போது நிர்வாகிகள் தரப்பில் நமது கட்சிக்கு என்று தனியாக குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருக்கிறது. எனவே 2 தொகுதிக்கும் குறைவாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் கூட்டணி வேண்டாம் அதற்கு பதிலாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நாமும் தனித்து போட்டியிடலாம் என்ற கருத்தை சிலர் முன்வைத்தனர்.

    இன்னும் சிலர் கூறும் போது, ‘‘நாம் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். அப்படியிருந்தும் கூட்டணிக்காக பா.ஜனதாவை ஆதரிக்கும் அளவுக்கு இறங்கி இருக்கிறோம். எனவே அவர்கள் தான் நமக்கு கூடுதலாக தொகுதிகளை தர வேண்டும்’’ என்றனர்.

    சிலர் பேச்சுவார்த்தையின் நிலவரங்கள் பற்றி கேள்வி எழுப்பினர். அவர்கள் மத்தியில் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘‘உங்கள் உணர்வுகளும், ஆதங்கமும் எனக்கு புரிகிறது.



    அ.தி.மு.க. தரப்பில் இருந்து என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். எனவே நிர்வாகிகள் வேறு எந்த மாறுபாடான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டார்.

    பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். எங்கள் நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் முடிவை பொறுத்து முடிவு செய்யப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் எங்கள் முடிவு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TamilMaanilaCongress #GKVasan #ADMKAlliance
    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க சோதனை மேற்கொண்டுள்ளனர். #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் இந்த சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மொத்தம் 48 பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க சோதனை மேற்கொண்டுள்ளனர். முக்கிய சாலைகள், சந்திப்புகளில் ரோந்து செல்லும் பறக்கும் படையினர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முதல் நடைபெற்று வரும் சோதனையில் சென்னையில் பணம் ஏதும் பிடிப்படவில்லை. சட்ட விரோதமாக பணம் கடத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து வரும் பறக்கும் படையினர் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது பற்றியும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னையில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை தீவிரமாக நடந்தது.

    இந்த நிலையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், கமி‌ஷனர் அலுவலகம் ஆகியவற்றில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

    டி.ஜி.பி அலுவலக கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி.சே‌ஷசாயி உள்ளார். சென்னை கமி ஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறை அதிகாரியாக வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களது மேற்பார்வையில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே துணை ராணுவ படையினர் இன்னும் சில தினங்களில் தமிழகம் வர உள்ளனர். இவர்கள் பறக்கும் படையினருடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். #LSPolls
    திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலை மாற்று தேதியில் நடத்த கோரி மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் கலெக்டர் கந்தசாமியிடம் மனு கொடுத்துள்ளார். #ParliamentElection #TiruvannamalaiGirivalam
    திருவண்ணாமலை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கிறது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அன்றைய தினம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவு பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தென்னிந்தியாவின் புகழ்மிக்க சிவாலயமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம், பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதி அமைந்திருக்கிறது.

    இதனால் திருவண்ணாமலை தொகுதியிலும் தேர்தலை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் கலெக்டர் கந்தசாமியிடம் திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலை மாற்று தேதியில் நடத்த கோரி மனு கொடுத்துள்ளார்.



    ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் அன்று இரவு சித்ரா பவுர்ணமி வருவதால் அன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதில் தவறும் நிலை உருவாகும்.

    மேலும் ஓட்டுபெட்டியை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் திருவண்ணாமலை தொகுதி தேர்தலை மாற்று தேதியில் நடத்த ஆவன செய்ய வேண்டும்.

    இந்து மக்களின் தருமத்திற்கும், எண்ணங்களுக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மாற்று தேதியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

    சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம், ஏப்ரல் 18-ந் தேதி இரவு 7.05 மணிக்கு தொடங்கி, 19-ந்தேதி மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது. அதன்படி, 18-ந் தேதி இரவு, சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள்.

    வாக்குப்பதிவு நடைபெறும் 18-ந் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், அன்றைய தினம் திருவண்ணாமலை தொகுதியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கும் என தெரிகிறது.

    கார்த்திகை தீபத்திரு விழாவுக்கு இணையாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

    சென்னை, வேலூர், சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட தொலைதூர நகரங்களில் இருந்து திருவண்ணாமலை வரும் பக்தர்கள், தங்களுடைய வாக்குகளை செலுத்திவிட்டு வருவதில் சிக்கல் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    மேலும், திருவண்ணாமலை தொகுதியிலும் சித்ரா பவுர்ணமியன்று வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கலாம். அதோடு, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், 20 லட்சம் பக்தர்கள் வருகை தரும் சித்ரா பவுர்ணமி விழாவுக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.

    அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவற்றில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே, இரண்டு தொகுதிகளில் உள்ள 3,475 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு வந்து, திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவல நெரிசலை கடந்து வாக்கு எண்ணும் மையங்களில் சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    எனவே, திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, தேர்தல் ஆணையம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சட்டரீதியான பரிசீலனை செய்து முன் கூட்டியே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #ParliamentElection #TiruvannamalaiGirivalam
    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று 2-வது நாளாக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. #LSPolls #ADMK #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தனர். அவர்களிடம் நேற்று முதல் நேர்காணல் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இந்த நேர்காணலை நடத்தினார்கள்.

    முதல் நாளான நேற்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. காலையில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. மாலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர்.

    2-வது நாளான இன்று 19 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. காலையில் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 10 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.

    மாலையில் திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் நேர்காணல் நடக்கிறது.

    18 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. #LSPolls #ADMK
    ×