search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் - பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
    X

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் - பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #Balakrishnan

    ராமநாதபுரம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கும் கட்சிகள்தான் இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி காணாமல் போய் விடும். சட்டசபை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் முறைகேடு இல்லாமல் நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று சொல்ல முடியாது. முறைகேடு இல்லாமல் தேர்தலைநடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த பிரச்சினையில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை கைது செய்ததோடு வழக்கை முடித்துவிடக் கூடாது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #Balakrishnan

    Next Story
    ×